பொட்டிபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பொட்டிபுரம்
—  ஊராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தேனி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ், இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை

அடர்த்தி

 (2011)

6,554/km2 (16,975/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

பொட்டிபுரம் தமிழ்நாடு மாநிலம், தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமமும், சின்னமன்னூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சியும் ஆகும்[4][5]. இது, தேவாரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு கிளையான அம்பரப்பர் மலைப் பகுதியில் அமைந்துள்ளது. பொட்டிபுரம் ஊராட்சி மன்ற பகுதியில், 2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கட்தொகை 6554. அதில் ஆண்கள் 3300, பெண்கள் 3254 ஆக உள்ளனர்.[6] இக்கிராமத்தின் அருகில் உள்ள அம்பாரப்பர் மலைப்பகுதியில் இந்திய அரசின், அணுசக்தி துறை, நியூட்ரினோ ஆய்வகத் திட்டம் அமைக்க செயல்படுகிறது.[7]

அமைவிடம்[தொகு]

பொட்டிபுரம், சின்னமனுரிலிருந்து 16 கி. மீ., தொலைவிலும், தேனியிலிருந்து 32 கி. மீ., தொலைவிலும் அமைந்துள்ளது.

அருகில் அமைந்த கிராமங்கள்[தொகு]

மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான அம்பரப்பர் மலைப் பகுதியைச் சுற்றி தி. புதுக்கோட்டை, சின்ன பொட்டிபுரம், ராமகிருஷ்ணாபுரம், தேவாரம் கிராமங்கள் உள்ளது.

பொருளாதாரம்[தொகு]

வேளாண்மை[தொகு]

வறண்ட வானிலையும், மழை மறைவு பகுதியாகவும் உள்ளதால், பொட்டிபுரத்தில் ஆழ்துளை கிணறு நீர்பாசானம் மூலம், கேழ்வரவு, தக்காளி, கரும்பு, நெல் மற்றும் காய்கறிகள் பயிரிடப்படுகிறது.

கால்நடைகள்[தொகு]

ஆடு மாடு மேய்த்தல் முக்கியத் தொழிலாகும். பொட்டிபுரத்தில் அரசு துணை கால்நடை மருத்துவமனை செயல்படுகிறது.

நிதி வசதிகள்[தொகு]

பொட்டிபுரம் மக்களின் நிதித் தேவைகளை, இந்தியன் வங்கியின் கிளை, பொட்டிபுரம் தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கி மற்றும் உள்ளூர் சுய உதவிக் குழுக்களும் நிறைவேற்றுகிறது.

நியூட்ரினோ ஆய்வகத் திட்டம்[தொகு]

பொட்டிபுரம் கிராமத்தின், மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான அம்பரப்பர் மலைப் பகுதியில் அமைக்கப்பட உள்ள நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்தால் இப்பகுதி முழுமையாக பாதிக்கப்படும் எனக் கருதுவதால், இத்திட்டத்தை எதிர்த்து அனைத்து தரப்பினரும் தொடர்ந்து போராட்டம் நடத்துகிறார்கள்.[8][9][10][11]

மேற்கோள்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 4. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=25&centcode=0004&tlkname=Uthamapalayam#MAP
 5. http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=25&blk_name=Chinnamanur&dcodenew=21&drdblknew=6
 6. http://pottipuram.epanchayat.in/
 7. http://www.ino.tifr.res.in/ino/ India-based Neutrino Observatory (INO)
 8. நியூட்ரினோ ஆய்வகம் அணுக்கழிவு மையமா?
 9. நியூட்ரினோ ஆய்வு மையம்… ஆராய்ச்சியா? அணுக்கழிவா?
 10. நியூட்ரினோ ஆய்வகமும் இன்னொரு அணு ஆயுதமும்!
 11. போடி பொட்டிபுரம் மலையில் அமையும் நியூட்ரினோ திட்டத்தினால் ஏற்பட இருக்கும் பாதிப்புகள்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொட்டிபுரம்&oldid=1839131" இருந்து மீள்விக்கப்பட்டது