பொட்டாசியம் மூவாக்சோகுளோரோகுரோமேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பொட்டாசியம் குளோரோகுரோமேட்டு
KCrO3Cl படிகத்தின் ஒரு பகுதி இடம் நிரப்பு மாதிரி [1]

பொட்டாசியம் மூவாக்சோகுளோரோகுரோமேட்டு[1] (Potassium trioxochlorochromate) என்பது KCrO3Cl[2] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். பொட்டாசியம் குளோரோகுரோமேட்டு[3][4][5], பெலிகாட் உப்பு என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. யூகின் மெல்ச்சியர் பெலிகாட் [6] இவ்வுப்பை கண்டறிந்தார்.

குளோரோகுரோமிக் அமிலத்தினுடைய பொட்டாசியம் உப்பே பெலிகாட் உப்பு எனப்படுகிறது. (குரோமிக் அமிலத்தில் இருக்கும் ஒரு OH தொகுதியை நீக்கி குளோரின் அணு இடம்பெற்றுள்ளது). மேலும், குரோமிக் அமிலத்திற்கும் குரோமைல் குளோரைடுக்கும் இடைப்பட்ட நிலைச் சேர்மமாக பெலிகாட் உப்பைக் கருதலாம்[6]. காற்றில் நிலைப்புத்தன்மையுடன் காணப்படும் பெலிகாட் உப்பு தண்ணீரில் கரைகிறது. உயர் வெப்பநிலையில் பெலிகாட் உப்பு நீராற்பகுப்பு அடைந்து குரோமிக் ஆக்சைடைக் கொடுக்கிறது[6].

பொட்டாசியம் இருகுரோமேட்டு, ஐதரோகுளோரிக் அமிலம் மற்றும் தண்ணீர் ஆகியனவற்றைச் சேர்த்து ஆரஞ்சு-சிவப்பு நிறத்திலுள்ள பொட்டாசியம் குளோரோகுரோமேட்டு தயாரிக்கப்படுகிறது[6]. அமிலம் ஒன்றின் முன்னிலையில் பென்சைல் ஆல்ககாலை, பெலிகாட் உப்பு ஆக்சிசனேற்றம் செய்கிறது[7]. 2002 ஆம் ஆண்டில் பெலிகாட் உப்பின் கட்டமைப்பு மறுவுறுதி செய்யப்பட்டது[1].

(18-கிரௌன்-6)பொட்டாசியம் குளோரோகுரோமேட்டு ஓர் அலகின் இடம் நிரப்பு மாதிரி

(18-கிரௌன்-6)பொட்டாசியம் குளோரோகுரோமேட்டு (1,4,7,10,13,16-எக்சாக்சாசைக்ளோக்டாடெக்கேன்-k6O)பொட்டாசியம் குளோரோகுரோமேட்டு) அல்லது CrClO3 என்பது K+ நேர்மின் அயனியைக் கொண்ட ஒரு படிக அமைப்பு ஆகும்[8].

முன்பாதுகாப்பு[தொகு]

பொட்டாசியம் குளோரோகுரோமேட்டு ஒரு நச்சுப் பொருளாகும். இதை உட்கொள்ள நேர்ந்தால் நஞ்சால் உடல் பாதிக்கப்படுவதோடு சிறுநீரகம்சிறுநீரகமும் பாதிக்கப்படும். தோலின் மீது பட நேர்ந்தால் கண் எரிச்சல், ஒவ்வாமை மற்றும் புண் உண்டாதல் முதலியன நிகழும்[9]. சூடாக்கும் போது அல்லது அமிலத்துடன் சேர்க்கும் பொழுது நச்சுத்தன்மை[9] மிகுந்த குளோரின் வாயுவை[5] வெளியிடுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 U. Kolitsch (2002). "Redetermination of potassium chlorochromate, KCrO3Cl". Acta Crystallogr. E58 (11): i105–i107. doi:10.1107/S1600536802019396. 
  2. Glossary. Srb.npaci.edu. Retrieved on 2011-06-01.
  3. Synonyms Of Chemicals. Csudh.edu (2003-09-16). Retrieved on 2011-06-01.
  4. Merck & Co (1930). Merck's index: an encyclopedia for the chemist, pharmacist and physician. Merck & Co.. http://books.google.com/books?id=QQZKAAAAMAAJ. பார்த்த நாள்: 1 June 2011. 
  5. 5.0 5.1 Arthur Rose; Elizabeth Rose (1966). The Condensed chemical dictionary. Reinhold. http://books.google.com/books?id=394yAAAAMAAJ. பார்த்த நாள்: 1 June 2011. 
  6. 6.0 6.1 6.2 6.3 Norm Stanley Colorful Chromium Compounds, 23 August 2002
  7. Özgün, B.; Pek, A. (1991). "Kinetics and mechanism of the oxidation of benzyl alcohol by potassium chlorochromate". Reaction Kinetics & Catalysis Letters 43 (2): 589–594. doi:10.1007/BF02064733. 
  8. Kotlyar, Sergei A.; Zubatyuk, Roman I.; Shishkin, Oleg V.; Chuprin, Gennady N.; Kiriyak, Andrey V.; Kamalov, Gerbert L. (2005). "(18-Crown-6)potassium chlorochromate". Acta Crystallographica E 61 (2): m293–m295. doi:10.1107/S1600536805000085. 
  9. 9.0 9.1 Susan Shaw; Susan D. Shaw; Monona Rossol (1 September 1991). Overexposure: health hazards in photography. Allworth Communications, Inc.. பக். 122–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-9607118-6-4. http://books.google.com/books?id=o-VjWgh5mPUC&pg=PA122. பார்த்த நாள்: 1 June 2011.