பொட்டாசியம் நைட்ரைட்டு
![]() | |
![]() | |
இனங்காட்டிகள் | |
---|---|
7758-09-0 ![]() | |
ChEMBL | ChEMBL3186418 |
ChemSpider | 22857 ![]() |
EC number | 231-832-4 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 516910 |
வே.ந.வி.ப எண் | TT3750000 |
| |
UNII | 794654G42L ![]() |
UN number | 1488 |
பண்புகள் | |
KNO2 | |
வாய்ப்பாட்டு எடை | 85.10379 கி/மோல் |
தோற்றம் | வெண்மை அல்லது ஈல மஞ்சள் திண்மம் நீர் உறிஞ்சும் திறன் |
அடர்த்தி | 1.914986 கி/செ.மீ3 |
உருகுநிலை | 440.02 °C (824.04 °F; 713.17 K) (சிதைவடையும்) |
கொதிநிலை | 537 °C (999 °F; 810 K) (வெடிக்கும்) |
281 கி/100 மி.லி (0 °செல்சியசு) 312 கி/100 மி.லி (25 °செல்சியசு) 413 கி/100 மி.லி (100 °செல்சியசு) | |
கரைதிறன் | எத்தனால், அமோனியா ஆகியவற்றில் கரையும் |
−23.3·10−6 செ.மீ3/மோல் | |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-369.8 கிலோயூல்/மோல் |
வெப்பக் கொண்மை, C | 107.4 யூல்/மோல் கெல்வின் |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
GHS pictograms | ![]() ![]() ![]() |
GHS signal word | அபாயம் |
H272, H301, H400 | |
P210, P220, P221, P264, P270, P273, P280, P301+310, P321, P330, P370+378, P391, P405, P501 | |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
235 மி.கி/கி.கி |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பொட்டாசியம் நைத்திரேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் நைட்ரைட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பொட்டாசியம் நைட்ரைட்டு (Potassium nitrite) என்பது KNO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொட்டாசியம் அயனிகளும் (K+) நைட்ரைட்டு அயனிகளும் NO2− சேர்ந்து இந்த அயன உப்பு உருவாகிறது. தண்ணீரில் இது கரையும். வெள்ளை அல்லது சற்று மஞ்சள் நிறத்தில் நீர் உறிஞ்சும் படிகப் பொடியாக உருவாகிறது..[1]
பொட்டாசியம் நைட்ரைட்டு ஒரு வலுவான ஆக்சிசனேற்றியாகும். மேலும் பிற பொருட்களின் எரிப்பையும் இது துரிதப்படுத்தும். சோடியம் நைட்ரைட்டு போன்ற பிற நைட்ரைட்டு உப்புகளைப் போலவே, பொட்டாசியம் நைட்ரைட்டும் விழுங்கப்பட்டால் நச்சுத்தன்மை வாய்ந்தது. மேலும் ஆய்வக சோதனைகள் இது மரபணு மாற்றத்தை ஏற்படுத்தும் அல்லது கரு ஊனத்தை ஏற்படுத்தும் என்று கூறுகின்றன. பொட்டாசியம் நைட்ரைட்டைக் கையாளும் போது பொதுவாக கையுறைகள் மற்றும் பாதுகாப்பு கண்ணாடிகள் பயன்படுத்தப்படுகின்றன.
கண்டுபிடிப்பு
[தொகு]மண், இயற்கை நீர், தாவர மற்றும் விலங்கு திசுக்கள் மற்றும் உரங்களில் நைட்ரைட்டு சிறிய அளவில் உள்ளது.[2] நைட்ரைட்டின் தூய வடிவம் முதன்முதலில் சுவீடிய வேதியியலாளர் கார்ல் வில்லெம் சீலே என்பவர் கோப்பிங்கின் சந்தை நகரத்தில் உள்ள தனது மருந்தகத்தின் ஆய்வகத்தில் பணிபுரிந்த போது உருவாக்கினார். பொட்டாசியம் நைட்ரேட்டை செஞ்சிவப்பு நிற வெப்பத்தில் அரை மணி நேரம் சூடாக்கி ஒரு புதிய உப்பை உருவாக்கினார். இரண்டு சேர்மங்களும் (பொட்டாசியம் நைட்ரேட்டு மற்றும் நைட்ரைட்டு) பெலிகோட்டு என்பவரால் வகைப்படுத்தப்பட்டன. மேலும் இவ்வினை பின்வருமாறு நிறுவப்பட்டது.
உற்பத்தி
[தொகு]பொட்டாசியம் நைட்ரேட்டைக் குறைப்பதன் மூலம் பொட்டாசியம் நைட்ரைட்டைப் பெறலாம். பொட்டாசியம் ஐதராக்சைடு அல்லது பொட்டாசியம் கார்பனேட்டில் உள்ள நைட்ரசன் ஆக்சைடுகளை உறிஞ்சுவதன் மூலம் பொட்டாசியம் நைட்ரைட்டை உற்பத்தி செய்வது, இந்த காரங்களின் அதிக விலை காரணமாக பெரிய அளவில் பயன்படுத்தப்படுவதில்லை. மேலும், பொட்டாசியம் நைட்ரைட்டு தண்ணீரில் அதிகம் கரையக்கூடியது என்பதால், திடப்பொருளாக மீட்டெடுப்பது கடினமாகிறது.
வினைகள்
[தொகு]சயனமைடு மற்றும் KNO2 கலப்பதால் வெள்ளை நிற திடப்பொருட்களை மஞ்சள் நிற திரவமாகவும் பின்னர் ஆரஞ்சு நிற திடப்பொருளாகவும் மாறி, சயனோசன் மற்றும் அம்மோனியா வாயுக்களை உருவாக்குகிறது. வெளிப்புற ஆற்றல் எதுவும் இவ்வினைக்குப் பயன்படுத்தப்படுவதில்லை. வினைகள் ஒரு சிறிய அளவு ஆக்சிசனுடன் மேற்கொள்ளப்படுகின்றன.[3]
பொட்டாசியம் நைட்ரைட்டை 550 °செல்சியசு வெப்பநிலை முதல் 790 °செல்சியசு வெப்பநிலை வரை ஆக்சிசன் முன்னிலையில் சூடாக்கும் போது பொட்டாசியம் நைட்ரேட்டை உருவாக்குகிறது. வெப்பநிலை அதிகரிக்கும்போது வினையின் வீதம் அதிகரிக்கிறது, ஆனால் வினையின் அளவு குறைகிறது. 550 °செல்சியசு முதல் 600 °செல்சியசு வெப்பநிலை வரை வினை தொடர்ச்சியாக நடைபெற்று இறுதியில் நிறைவு நிலையை அடைகிறது. 650 °செல்சியசு முதல் 750 °செல்சியசு வெப்பநிலை வரை, பொட்டாசியம் நைட்ரேட்டின் சிதைவு நிகழ்வால் , அமைப்பு சமநிலையை அடைகிறது. 790 °செல்சியசு வெப்பநிலையில் முதலில் கன அளவில் விரைவான குறைவு காணப்படுகிறது. இது தொடர்ந்து 15 நிமிடங்கள் நீடிக்கும், அப்போது கன அளவில் எந்த மாற்றமும் ஏற்படாது. இதைத் தொடர்ந்து, முதன்மையாக நைட்ரசனின் வெளியேற்ற வளர்ச்சியின் காரணமாக அளவு அதிகரிக்கிறது. இது பொட்டாசியம் நைட்ரைட்டின் சிதைவுக்குக் காரணமாகும்.[4]
அறை வெப்பநிலையில் பொட்டாசியம் நைட்ரைட்டு, பொட்டாசியம் அமைடின் திரவ அம்மோனியா கரைசலுடன் மிகவும் மெதுவான விகிதத்தில் வினைபுரிந்து, பெரிக் ஆக்சைடு அல்லது கோபால்டிக் ஆக்சைடு முன்னிலையில், நைட்ரசன் மற்றும் பொட்டாசியம் ஐதராக்சைடை உருவாக்குகிறது.
மருத்துவப் பயன்கள்
[தொகு]நெஞ்சு வலிக்கான சிகிச்சையில் கரிம நைட்ரைட்டுகள் மற்றும் தொடர்புடைய சேர்மங்களின் அற்புதமான வெற்றியின் காரணமாக, கனிம நைட்ரைட்டுகளின் மருத்துவப் பங்களிப்பிலும் ஆர்வம் முதலில் தூண்டப்பட்டது.
பிற பயன்கள்
[தொகு]பொட்டாசியம் நைட்ரைட்டு வெப்ப பரிமாற்ற உப்புகளின் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது. ஐ249 என்ற உணவு சேர் பொருளாக பொட்டாசியம் நைட்ரைட்டு சோடியம் நைட்ரைட்டைப் போன்ற ஒரு பாதுகாப்பு பொருளாகும். மேலும் இது ஐரோப்பிய ஒன்றியம்[5] அமெரிக்கா [6] ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து[7] ஆகிய நாடுகளில் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
வினைத்திறன் அபாயங்கள்
[தொகு]அமிலங்களுடன் வினைபுரியும் போது, பொட்டாசியம் நைட்ரைட்டு நச்சு நைட்ரசு ஆக்சைடுகளை உருவாக்குகிறது. அம்மோனியம் உப்புகளுடன் இணைவு ஏற்படுவதால் உமிழ்வு மற்றும் தீப்பற்றல் ஏற்படுகிறது. ஒடுக்கும் முகவர்களுடனான வினைகள் தீ மற்றும் வெடிப்புகளுக்கு வழிவகுக்கிறது..[8] இந்த அதிகரித்த வினைத்திறனுக்கான காரணம் நைட்ரைட்டுகளின் குறிப்பிட்ட ஆக்சிசனேற்ற தன்மையுடன் தொடர்புடையதாகும். நைட்ரைட்டு(III) நைட்ரேட்டு(V) அயனியை விட வலிமையான ஆக்சிசனேற்றியாகும். ஏனெனில், இணைதிறன் III இல், இணைதிறன் V நைட்ரேட்டை விட மீட்டெடுக்க குறைந்த எலக்ட்ரான்களைக் கொண்டுள்ளது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Santa Cruz Biotechnology. "Potassium Nitrite Materials and Safety Sheet".
{{cite web}}
: Missing or empty|url=
(help) - ↑ Butler, Anthony R.; Feelisch, Martin (2008). "Therapeutic Uses of Inorganic Nitrite and Nitrate". Circulation 117 (16): 2151–2159. doi:10.1161/CIRCULATIONAHA.107.753814. பப்மெட்:18427145. https://archive.org/details/sim_circulation_2008-04-22_117_16/page/n120.
- ↑ Wollin, Goesta; William B.F. Ryan (May 16, 1979). "Synthesis of protein, nucleosides and other organic compounds from cyanamide and potassium nitrite under possible primitive earth conditions". Biochimica et Biophysica Acta (BBA) - General Subjects 584 (3): 493–506. doi:10.1016/0304-4165(79)90122-3. பப்மெட்:454677.
- ↑ Freeman, Eli (Feb 20, 1957). "The Kinetics of the Thermal Decomposition of Potassium Nitrate and of the Reaction between Potassium Nitrite and Oxygen". Journal of the American Chemical Society 79 (4): 838–842. doi:10.1021/ja01561a015.
- ↑ UK Food Standards Agency: "Current EU approved additives and their E Numbers". Retrieved 2011-10-27.
- ↑ US Food and Drug Administration: "Listing of Food Additives Status Part II". Food and Drug Administration. Retrieved 2011-10-27.
- ↑ Australia New Zealand Food Standards Code"Standard 1.2.4 - Labelling of ingredients". 8 September 2011. Retrieved 2011-10-27.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Chemical Education Today
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை