பொட்டாசியம் செலீனோசயனேட்டு
இனங்காட்டிகள் | |
---|---|
3425-46-5 | |
ChemSpider | 69409 |
EC number | 222-320-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 76960 |
| |
பண்புகள் | |
CNKSe | |
வாய்ப்பாட்டு எடை | 144.08 |
தோற்றம் | நிறமற்று அல்லது வெண்மை நிறத் திண்மம் |
அடர்த்தி | 2.35 கி/செ.மீ3 |
உயர்வு | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பொட்டாசியம் செலீனோசயனேட்டு (Potassium selenocyanate) என்பது KSeCN என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் நீருறிஞ்சும் திண்மமாக பொட்டாசியம் செலீனோசயனேட்டு காணப்படுகிறது. பொட்டாசியம் செலீனோசயனேட்டு தண்ணீரில் கரைகிறது. காற்றில் சிதைவடையும் போது இச்சேர்மம் சிவப்பு செலீனியத்தையும் பொட்டாசியம் சயனைடையும் கொடுக்கிறது. இச்செலீனோசயனேட்டின் நடத்தைகள் எக்சு கதிர் படிகவியல் சோதனைகளில் உறுதிப்படுத்தப்படுகின்றன. இச்சோதனைகளின் இறுதி முடிவுகள் இதை ஓர் உப்பு என்பதாக உறுதிப்படுத்துகின்றன. C-N மற்றும் C-Se அணுக்களுக்கு இடையில் முறையே முரணற்ற முப்பிணைப்பு மற்றும் ஒற்றைப் பிணைப்புகளில் 1.12 மற்றும் 1.83 என்ற அளவுகளில் பிணைப்பு இடைவெளிகள் உள்ளன [1] . Se0 வைக் கொடுக்கின்ற ஆதாரமூலமாக பொட்டாசியம் செலீனோசயனேட்டு கருதப்படுகிறது. உதாரணம்: டிரைபீனைல்பாசுபீனுடன் இது வினைபுரிந்து டிரைபீனைல்பாசுபீன் செலீனைடு உருவாகிறது [2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Swank, Duane D.; Willett, Roger D. (1965). "The Crystal Structure of Potassium Selenocyanate". Inorganic Chemistry 4: 499–501. doi:10.1021/ic50026a013.
- ↑ Nicpon, Philip; Meek, Devon W. (1967). "Triphenylphosphine Selenide". Inorganic Syntheses 10: 157–159. doi:10.1002/9780470132418.ch23.