உள்ளடக்கத்துக்குச் செல்

பொட்டாசியம் ஐப்போகுரோமேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொட்டாசியம் ஐப்போகுரோமேட்டு
Potassium hypochromate
பெயர்கள்
வேறு பெயர்கள்
  • பொட்டாசியம் குரோமேட்டு(V)
இனங்காட்டிகள்
யேமல் -3D படிமங்கள் Image
  • O=[Cr-3](=O)(=O)=O.[K+].[K+].[K+]
பண்புகள்
K3CrO4
வாய்ப்பாட்டு எடை 233.2886 கி/மோல்
தோற்றம் பச்சை நிறத் திண்மம்
உருகுநிலை 1,000 °C (1,830 °F; 1,270 K) (சிதைவடையும்)
கரையும், சிதைவடையும் (25 °செல்சியசு)[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு பொட்டாசியம் ஐப்போமாங்கனேட்டு போன்றது
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−370 ± 2 கிலோகலோரி மோல்−1[2]
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பொட்டாசியம் ஐப்போமாங்கனேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் சோடியம் ஐப்போகுரோமேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பொட்டாசியம் ஐப்போகுரோமேட்டு (Potassium hypochromate) என்பது K3CrO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தில் அசாதாரண Cr5+ அயனி இடம்பெற்றுள்ளது. தண்ணீரில் நிலையற்றும் காரக் கரைசலில் நிலைப்புத்தன்மையோடும் காணப்படுகிறது.[1] பொட்டாசியம் ஐப்போமாங்கனேட்டைப் போன்ற படிக அமைப்பைக் கொண்டிருக்கிறது.[2]

தயாரிப்பு

[தொகு]

பொட்டாசியம் ஐப்போகுரோமேட்டு சேர்மம் பொதுவாக குரோமியம்(III) ஆக்சைடு மற்றும் பொட்டாசியம் ஐதராக்சைடு சேர்மங்களை 850 °செல்சியசு வெப்பநிலையில் ஆர்கானின் கீழ் வினைபுரியச் செய்வதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.:[2]

Cr2O3 + 6 KOH → 2 K3CrO4 + H2O + 2 H2

குரோமியம் ஆக்சைடை பொட்டாசியம் குரோமேட்டுடன் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் பொட்டாசியம் ஐப்போகுரோமேட்டைத் தயாரிக்கலாம். இவ்வினையில் Fe2+ அயனிகள் இல்லாதது முக்கியமாகும், ஏனெனில் இது Cr(V) அயனிகளை Cr(III) அயனிகளாகக் குறைக்கும்.[1]

வினைகள்

[தொகு]

காரம் இல்லாதபோது அல்லது குறைவாக இருக்கும்போது பொட்டாசியம் ஐப்போகுரோமேட்டு தண்ணீரில் சிதைந்து குரோமியம்(III) ஆக்சைடு மற்றும் பொட்டாசியம் குரோமேட்டை உருவாக்குகிறது. பொட்டாசியம் ஐப்போகுரோமேட்டு ஐதரோகுளோரிக் அமிலம் போன்ற அமிலங்களுடன் வினைபுரிந்து குரோமியம்(III) ஆக்சைடு, பொட்டாசியம் குரோமேட்டு மற்றும் பொட்டாசியம் குளோரைடை உருவாக்குகிறது:

6 K3CrO4 + 10 HCl → 4 K2CrO4 + Cr2O3 + 5 H2O + 10 KCl

ஐதரோபெராக்சைடுகள் போன்ற பிற குறைக்கும் முகவர்கள் ஐப்போகுரோமேட்டு அயனியை குரோமேட்டு அயனிகளாக ஆக்சிசனேற்ற முடியும்.[1] மிக அதிக வெப்பநிலையில், இது பொட்டாசியம் குரோமேட்டு மற்றும் பொட்டாசியம் உலோகமாக சிதைகிறது.[2]

பொட்டாசியம் ஐப்போகுரோமேட்டு சேர்மம், குரோமைல் குளோரோசல்பேட்டு போன்ற பல்வேறு சேர்மங்களை குளோரோசல்பூரிக் அமிலத்துடன் வினைபுரியச் செய்து ஒருங்கிணைக்கப் பயன்படுகிறது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 N. Bailey; M. C. R. Symons (1957). "Structure and reactivity of the oxyanions of transition metals. Part III. The hypochromate ion" (in English). Journal of the Chemical Society (Resumed) 35: 203–207. doi:10.1039/jr9570000203. 
  2. 2.0 2.1 2.2 2.3 Lawrence H. Johnson; Loren G. Hepler; Carlos E. Bamberger; Donald M. Richardson (1978). "The enthalpy of formation of potassium chromate(V), K3CrO4(c)" (in English). Canadian Journal of Chemistry (The Ohio State University: National Research Council) 56 (4): 446–449. doi:10.1139/v78-071. 
  3. Silvia A. Brandán (2012). "1". A Structural and Vibrational Study of the Chromyl Chlorosulfate, Fluorosulfate, and Nitrate Compounds (Ebook) (in English). Springer Netherlands. p. 2. ISBN 9789400757639. Retrieved 15 October 2021.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)