பொட்டாசியம் ஐதரசன் தாலேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொட்டாசியம் ஐதரசன் தாலேட்டு
Potassium hydrogen phthalate
Potassium hydrogen phthalate
Potassium hydrogen phthalate
Potassium hydrogen phthalate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் ஐதரசன் தாலேட்டு
வேறு பெயர்கள்
ஐதரசன் பொட்டாசியம் தாலேட்டு;
தாலிக் அமில பொட்டாசியம் உப்பு;
பொட்டாசியம் பைதாலேட்டு;
பொட்டாசியம் அமில தாலேட்டு;
1,2-பென்சீன் டைகார்பாக்சிலிக் அமிலம்,
மோனோபொட்டாசியம் உப்பு
இனங்காட்டிகள்
877-24-7 Y
ChemSpider 12839 Y
InChI
 • InChI=1S/C8H6O4.K/c9-7(10)5-3-1-2-4-6(5)8(11)12;/h1-4H,(H,9,10)(H,11,12);/q;+1/p-1 Y
  Key: IWZKICVEHNUQTL-UHFFFAOYSA-M Y
 • InChI=1/C8H6O4.K/c9-7(10)5-3-1-2-4-6(5)8(11)12;/h1-4H,(H,9,10)(H,11,12);/q;+1/p-1
  Key: IWZKICVEHNUQTL-REWHXWOFAT
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 13413
SMILES
 • [K+].O=C(O)c1ccccc1C([O-])=O
பண்புகள்
C8H5KO4
வாய்ப்பாட்டு எடை 204.22 g·mol−1
தோற்றம் வெண்மை அல்லது நிறமற்ற திண்மம்
அடர்த்தி 1.636 கி/செ/மீ3
உருகுநிலை ~295 °C (சிதையும்)
80 கி/லி (20 °செல்சியசு)[1]
கரைதிறன் ஆல்ககாலில் சிறிதளவு கரையும்
காடித்தன்மை எண் (pKa) 5.4[2]
கட்டமைப்பு
ஒருங்கிணைவு
வடிவியல்
நான்முகி
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் சுவாசப் பாதை, தோல், கண்களில் எரிச்சலூட்டும்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
R-சொற்றொடர்கள் R36 R37 R38
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

பொட்டாசியம் ஐதரசன் தாலேட்டு (Potassium hydrogen phthalate) என்பது C8H5KO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அமில உப்புச் சேர்மமான இது வெண்மை நிறத் தூளாக, நிறமற்ற படிகங்களாக, நிறமற்ற நீர்மமாக, அயனத் திண்மமாக தோன்றுகிறது. தாலிக் அமிலத்தின் மோனோபொட்டாசியம் உப்பு என்று வகைப்படுத்தப்படுகிறது. அமில-கார தரம்பார்த்தலில் பொட்டாசியம் ஐதரசன் தாலேட்டு முதன்மை திட்டக் கரைசலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இது திண்மமாகவும் காற்றில் நிலைப்புத் தன்மையும் கொண்டிருப்பதாலும் நீரையும் உறிஞ்சாது என்பதாலும் துல்லியமாக அளந்தறிய எளிதில் முடிகிறது. [3][4][5] இதே காரணங்களுக்காக pH மீட்டர்களை அளவீடு செய்வதற்கான முதன்மை திட்டக்கரைசலாகவும் இது பயன்படுத்தப்படுகிறது. தவிர, கரைசல் நிலையில் இதன் pH மிகவும் நிலையானது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். வெப்ப எடையளவியல் பகுப்பாய்வுகளிலும் இது திட்டக் கரைசலாகப் பயன்படுகிறது. [6]. பொட்டாசியம் ஐதரசன் தாலேட்டு தண்ணீரில் முழுமையாகப் பிரிகையடைந்து பொட்டாசியம் (K+) நேர்மின் அயனியையும் ஐதரசன் தாலேட்டு எதிர்மின் அயனியையும் கொடுக்கிறது.

KHP + H2O is in equilibrium with K+ + HP

பின்னர் ஒரு பலவீனமான அமிலமாக ஐதரசன் தாலேட்டு தண்ணீருடன் தலைகீழாக வினைபுரிந்து ஐதரோனியம் (H3O +) மற்றும் தாலேட்டு அயனிகளைக் கொடுக்கிறது.

HP + H2O is in equilibrium with P2− + H3O+

ஐதரோகுளோரிக் அமிலம் அல்லது சோடியம் ஐதராக்சைடுடன் சேர்க்கப்பட்டு பொட்டாசியம் ஐதரசன் தாலேட்டு தேவைக்கேற்ப ஒரு தாங்கல் கரைசலாகவும் பயன்படுத்தப்படுகிறது.

மொத்த கரிமக் கார்பன் சோதனைகளில் பயனுள்ள திட்டக் கரைசலாக இது பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான மொத்த கரிமக் கார்பன் பகுப்பாய்விகள் கார்பன் டை ஆக்சைடு மற்றும் தண்ணீருக்கு கரிமச்சேர்மங்களின் ஆக்சிசனேற்றத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும். கார்பன் டை ஆக்சைடின் அளவைக் கொண்டு இவை அளவீடு செய்யப்படுகின்றன. பல மொத்த கரிமக் கார்பன் பகுப்பாய்வு ஆய்வாளர்கள் சோதிக்கப்படவேண்டிய கருவிகளை இரண்டு வகையான தரங்களுடன் சோதிக்க பரிந்துரைக்கின்றனர்: ஒன்று பொதுவாக ஆக்சிசனேற்றத்துக்கு எளிதானது மற்றொன்று ஆக்சிசனேற்றத்துக்கு கடினமானது. . முதலாவதற்கு பொட்டாசியம் ஐதரசன் தாலேட்டும் பிந்தையதற்கு பென்சோகுயினோனும் பரிந்துரைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

 1. http://www.merckmillipore.com/INTL/en/product/pharmaceutical-ingredients/potassium-hydrogen-phthalate,MDA_CHEM-104874
 2. http://archpdfs.lps.org/Chemicals/Potassium%20Hydrogen%20Phthalate.pdf
 3. Hendrixson, W. S. (1920). "Further Work on Potassium Hydrogen Phthalate as a Standard in Volumetric Analysis". J Am Chem Soc 42 (4): 724–727. doi:10.1021/ja01449a008. https://zenodo.org/record/1428826. 
 4. "Potassium Hydrogen Phthalate". Arlington, TX: Ricca Chemical Company இம் மூலத்தில் இருந்து 2012-11-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121130163435/http://www.riccachemical.com/Technical-Support/Tech-Tips/potassium_hydrogen_phthalate. பார்த்த நாள்: 2012-10-03. 
 5. "The Standardization Of NaOH and KHP Assay". Clark College இம் மூலத்தில் இருந்து 2012-11-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121119094358/http://web.clark.edu/nfattaleh/classes/135/Sp05/Labs/NaOHStdSp05.pdf. பார்த்த நாள்: 2012-10-03. 
 6. Smalley, I.J.,Lill,G.O.,Bentley,S.P.,Wood,D.R. 1977. Thermogravimetry of potassium hydrogen phthalate and its use as a thermal standard. Canadian Mineralogist 15, 30-35