பொட்டாசியம் எக்சாகுளோரோபலேடேட்டு(IV)
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இருபொட்டாசியம்; எக்சாகுளோரோபலேடியம் (2-)
| |
வேறு பெயர்கள்
இருபொட்டாசியம் எக்சாகுளோரோபலேடேட்டு (2-)
| |
இனங்காட்டிகள் | |
16919-73-6 ![]() | |
ChEBI | CHEBI:231511 |
ChemSpider | 55724 |
EC number | 240-974-6 |
InChI
| |
பப்கெம் | 61852 |
பண்புகள் | |
Cl6K2Pd | |
வாய்ப்பாட்டு எடை | 397.32 g·mol−1 |
தோற்றம் | செம்பழுப்பு படிகங்கள் |
அடர்த்தி | 2.74 கி/செ.மீ3 |
உருகுநிலை | 525°செல்சியசு |
குறைவாகக் கரையும் | |
தீங்குகள் | |
GHS pictograms | ![]() |
GHS signal word | எச்சரிக்கை |
H319 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பொட்டாசியம் எக்சாகுளோரோபலேடேட்டு (IV) (Potassium hexachloropalladate (IV)) என்பது K2[PdCl6] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும்.[2][3]
தயாரிப்பு
[தொகு]இராச திராவகத்தில் பொட்டாசியம் டெட்ராகுளோரோபல்லேடேட்டு (II) சேர்மத்தை கரைத்தால் பொட்டாசியம் எக்சாகுளோரோபலேடேட்டு (IV) உருவாகும்.
- 3K2[PdCl4] + 6HCl + 2HNO3 -> 3K2[PdCl6] + 2NO + 4H2O
பொட்டாசியம் குளோரைடு கரைசலில் உள்ள பொட்டாசியம் டெட்ராகுளோரோபலேடேட்டு (II) சேர்மத்தின் வழியாகக் குளோரினைச் செலுத்தினால் பொட்டாசியம் எக்சாகுளோரோபலேடேட்டு (IV) உருவாகும்.[4]
இயற்பியல் பண்புகள்
[தொகு]பொட்டாசியம் எக்சாகுளோரோபலேடேட்டு(IV) சேர்மம் கனசதுரப் படிக அமைப்பில் செம்பழுப்பு நிற படிகங்களாக உருவாகிறது.[5] இச்சேர்மம் தண்ணீரில் சிறிதளவே கரையும்.
வேதிப் பண்புகள்
[தொகு]சூடுபடுத்தும் போது அல்லது சூடான செறிவூட்டப்பட்ட ஐதரோகுளோரிக் அமிலக் கரைசலுடன் சேர்க்கும் போது பொட்டாசியம் எக்சாகுளோரோபலேடேட்டு(IV) சிதைவடைகிறது.
- K2[PdCl6] -> K2[PdCl4] + Cl2
பயன்கள்
[தொகு]புகைப்படத் தொழிலிலும்,[6] கரிம வேதியியல் வினைக்காரணியாகவும், மருந்து இடைநிலைப் பொருளாகவும் பொட்டாசியம் எக்சாகுளோரோபலேடேட்டு (IV) பயன்படுத்தப்படுகிறது.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Potassium hexachloropalladate(IV)". Sigma Aldrich. Retrieved 13 March 2025.
- ↑ "Potassium Hexachloropalladate(IV) | AMERICAN ELEMENTS®". American Elements. Retrieved 13 March 2025.
- ↑ "SAFETY DATA SHEET". Thermo Fisher. Retrieved 13 March 2025.
- ↑ Griffith, William P.; Robinson, Stephen D.; Swars, Kurt; Griffith, William P.; Swars, Kurt (1989). Pd Palladium: Palladium Compounds (8th Edition / Achte, völligneubearbeiteteAuflage ed.). Berlin Heidelberg: Springer. p. 151. ISBN 978-3-662-09190-6.
- ↑ Donnay, Joseph Désiré Hubert (1973). Crystal Data: Inorganic compounds (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. C-252. Retrieved 13 March 2025.
- ↑ Turkington, Robert (26 October 2009). Chemicals Used for Illegal Purposes (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 186. ISBN 978-0-470-18780-7. Retrieved 13 March 2025.
- ↑ "Potassium hexachloropalladate(IV), Pd 26.3% min, Thermo Scientific Chemicals | Fisher Scientific". Fisher Scientific. Retrieved 13 March 2025.