பொட்டலம்
பொட்டலம்(ஆங்கிலம்:Sachet) என்பது ஒரு நெகிழி, டின்(Tin) தகடு போன்றவற்றால் ஆன பயன்படுத்திவிட்டு தூக்கி எறியக்கூடிய ஒரு சிறு பை அல்லது பொதி ஆகும். இது பெரும்பாலும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் அளவிற்கான, அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களான(FMCG) சிகைகழுவி(Shampoo), ஊறுகாய், பழப்பாகு, சவக்காரத்தூள், எண்ணெய், பற்பசைகள் போன்றவற்றை அடைத்து விற்கப் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் இப்பொட்டலங்கள் ஏதேனும் ஒரு முனையில் அல்லது பகுதியில் கிழித்துவிட்டு பின்னர் உள்ளிருக்கும் பொருளை பிதுக்கி எடுத்து பயன்படுத்தும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும்.
வரலாறு மற்றும் பயன்பாடு
[தொகு]1983-ம் ஆண்டு தமிழ்நாட்டு நிறுவனமான கெவின் கேரால்(Cavin kare) முதன் முதலில் இவ்வகையான பொட்டலங்கள் அந்நிறுவனத்தின் சிகைகழுவி தயாரிப்பினை விற்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது[1]. தற்போது உலகின் முன்னணி வணிக தயாரிப்பு நிறுவனங்களான புராக்டர் & கேம்பல், ஹிந்துஸ்தான் யுனிலிவர், ஐடிசி போன்றவையும் கூட இந்த முறையை பயன்படுத்தி தங்கள் வணிகப்பொருட்களை விற்கின்றன[சான்று தேவை].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The inspiring success story of CavinKare". Rediff-India. 22 March 2007.