பொங்கும் தமிழமுது (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொங்கும் தமிழமுது (சில தரவுகளில் பொங்கும் தமிழமுதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது) 1980 களில் இலங்கையில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இது தமிழீழ மாணவர் பேரவையின் சார்பில் வெளியானது. இதன் ஆசிரியர் இரா. கபிலன் ஆவார். ஈழத் தமிழர்களின் பிரச்சனைகளை விளக்குக்கியும் படைப்புக்களை வெளியிட்டது.[1] இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

இது போராட்ட உணர்வைக் காட்டும் சித்திரங்களை அட்டையில் வெளியிட்டு, அவற்றுக்கு ஏற்ற உணர்ச்சி செறிந்த கவிதைகளை வெளியிட்டது. உலக நாடுகளில் நிகழ்ந்த விடுதலைப் போராட்டங்கள், மாணவர் போராட்டங்கள் பற்றிய கட்டுரைகளும், தமிழ் ஈழச் செய்திகளும் இதில் இடம் பெற்றன.

இந்த இதழில் தமிழ்நாட்டுக் கவிஞர்கள், படைப்பாளிகளின் கவிதைகள், கதைகளை ஒவ்வொரு இதழிலும் வெளியிட்டது. கவிஞர்கள் மு. மேத்தா, வைரமுத்து, இன்குலாப், நா. காமராசன், குருவிக்கரம்பை சண்முகம், செவ்வண்ணன் மற்றும் இளம் கவிஞர்கள் பலர் உணர்ச்சியூட்டும் கவிதைகள் எழுதினர்.

எழுத்தாளர்களைப் செவ்விகண்டு பல்வேறு சிக்கல்கள் குறித்தும் அவர்களது கருத்துக்களை தமிழமுது வெளியிட்டுள்ளது. இவ் வகையில், ஜெயகாந்தன், அசோகமித்திரன், கண. முத்தையா, பாலகுமாரன், ராஜம் கிருஷ்ணன், தா. பாண்டியன், பரீக்க்ஷாஞாநி முதலியவர்களின் செவ்விகள் வெளியாகியுள்ளன. கேள்வி—பதில் பகுதி மூலம் பல விதமான ஐயங்களுக்கும், வினாக்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.

சோவியத் எழுத்தாளர் பரீஸ் வலிலியேவ் எழுதிய, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட வீர மங்கையரின் அனுபவங்களைச் சித்திரிக்கும், சுவையான புதினம் அதிகாலையின் அமைதியில்! தொடர்கதையாக வெளி வந்தது.[2]

குறிப்புகள்[தொகு]

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; பொங்கும் என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 278–280. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொங்கும்_தமிழமுது_(இதழ்)&oldid=3449394" இலிருந்து மீள்விக்கப்பட்டது