பொங்கலூர் பேரூராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொங்கலூர் பேரூராட்சி
—  மூன்றாம் நிலை பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், இ. ஆ. ப [3]
ஊராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி திருப்பூர்
மக்களவை உறுப்பினர்

கே. சுப்பராயன்

சட்டமன்றத் தொகுதி பல்லடம்
சட்டமன்ற உறுப்பினர்

எம். எஸ். எம். ஆனந்தன் (அதிமுக)

மக்கள் தொகை 7,835
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

பொங்கலூர் மூன்றாம் நிலை பேரூராட்சி (Pongalur Town Panchayat), தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, பொங்கலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3635 ஆகும். இவர்களில் பெண்கள் 1859 பேரும் ஆண்கள் 1776 பேரும் உள்ளனர்.

நிர்வாகம்[தொகு]

  1. தமிழகத்தில் இதுவரை நடந்த சட்டமன்ற தேர்தலில் 2006 வரை பொங்கலூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து பல உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  2. தமிழகத்தில் பெரிய சட்டமன்ற தொகுதி பொங்கலூர் ஒன்றியம் ஆகும். ஆனால் திருப்பூர் மாவட்டம் தனியாக உருவானதால் சட்டமன்ற தொகுதி தலைமை பல்லடத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
  3. இருந்தாலும் பல்லடத்தை விட பொங்கலூரே சிறந்த சட்டமன்ற தொகுதி ஆகும்.

போக்குவரத்து[தொகு]

தமிழக தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் கோயம்புத்தூர், நாகப்பட்டினம், திருவாரூர், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, கரூர், பல்லடம், காங்கேயம்,வெள்ளக்கோவில், வேலூர்,முத்தூர், குளித்தலை, ஊட்டி, மேட்டுப்பாளையம்,திருப்பூர் என அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து வசதி உள்ளது. மேலும் சுற்றுப்புற கிராமங்களுக்கு இங்கிருந்துதான் பேருந்துகள் செல்கின்றன.

பொருளாதாரம்[தொகு]

  • தமிழகத்தின் கோவை முதல் நாகப்பட்டினம் வரை அமைந்துள்ள சாலையில் அமைந்துள்ள ஓர் மூன்றாம் நிலை பேரூராட்சி ஆகும்.
  • இங்கு பெரும்பாலும் கோழிப்பண்ணை வளர்ப்பில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
  • பெரும்பாலும் விவசாயத்தை நம்பியும் தொழில் சார்ந்த பொருளாதாரமாக உள்ளது.
  • பல்லடம் கறி பண்ணை கறிகோழி விலையை இங்குதான் நிர்ணயிக்கப்படும்.

அடிப்படை வசதிகள்[தொகு]

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]

அடிப்படை வசதிகள் எண்ணிக்கை
குடிநீர் இணைப்புகள் 527
சிறு மின்விசைக் குழாய்கள் 5
கைக்குழாய்கள் 6
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 14
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 6
உள்ளாட்சிக் கட்டடங்கள் 24
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 14
ஊரணிகள் அல்லது குளங்கள் 8
விளையாட்டு மையங்கள் 1
சந்தைகள் 9
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் 139
ஊராட்சிச் சாலைகள் 12
பேருந்து நிலையங்கள் 9
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 12

சிற்றூர்கள்[தொகு]

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:

  1. ஐயப்பநாயக்கன்பாளையம்
  2. மொண்டியபாளையம்
  3. பாப்பநாயக்கன்பாளையம்
  4. பெத்தநாயக்கன்பாளையம்
  5. ஸ்ரீனிவாசபுரம்
  6. திம்மநாயக்கன்பாளையம்
  7. தொட்டிப்பாளையம்
  8. பொங்கலூர்
  9. தசராபாளையம்

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

  1. அழகுமலை
  2. இளவந்தி
  3. கண்டியான் கோயில்
  4. காட்டூர்
  5. கேத்தனூர்
  6. மடப்பூர்
  7. என். அவிநாசிபாளையம்
  8. தொங்கட்டிப் பாளையம்
  9. உகாயனூர்
  10. வி.கள்ளிப் பாளையம்
  11. வி.வடமலைப் பாளையம்
  12. வாவி பாளையம்

சான்றுகள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  5. "அவினாசி வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  6. 6.0 6.1 "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்" (PDF). tnrd.gov.in. தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  7. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொங்கலூர்_பேரூராட்சி&oldid=3587740" இலிருந்து மீள்விக்கப்பட்டது