பொக்காரா இரங்கசாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொக்காரா இரங்கசாலா
Pokhara Rangasala
அமைவிடம்பொக்காரா, நேபாளம்
உரிமையாளர்அனைத்து நேபாள தேசிய கால்பந்து சங்கம், கண்டகி பிரதேசம்
இருக்கை எண்ணிக்கை16,500
Construction
Broke ground2017 புதிய விளையாட்டு அரங்கம் 2017 - 2021
கட்டப்பட்டதுFirst build 1980 இல் கட்டப்பட்டது.
கட்டுமான செலவுரூ. 1.3 பில்லியன்
குடியிருப்போர்
சகாரா சங்கம், நேபாள தேசிய கால்பந்து சங்கம், பொக்காரா தண்டர்சு

பொக்காரா இரங்கசாலா (Pokhara Rangasala) என்பது நேபாளத்தின் கண்டகி மாகாணத்தின் பொக்காரோ நகரத்தில் அமைந்துள்ள ஒரு பல்நோக்கு விளையாட்டு அரங்கமாகும். இங்கு 16,500 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டிகளைக் காணலாம்.[1] இந்த இடம் பொக்காராவின் தெற்கே சேதி ஆற்றின் கிழக்குக் கரையில் ராம்பசாரில் அமைந்துள்ளது.[2]

வரலாறு[தொகு]

புதுப்பிக்கப்படுவதற்கு முன்பு பொக்காரா இரங்கசாலா

பொக்காரா இரங்கசாலாவில் 400 மீட்டர் தடகளப் பாதையால் சூழப்பட்ட ஒரு கால்பந்து மைதானம், ஒரு கைப்பந்து மைதானம், ஒரு கூடைப்பந்து மைதானம், துடுப்பாட்ட மைதானம் மற்றும் பூப்பந்து, கராத்தே மற்றும் பிற உட்புற விளையாட்டுகள் போன்ற விளையாட்டுகளுக்கான மூடப்பட்ட அரங்கம் ஆகியவவை உள்ளன. காசுகி மாவட்ட விளையாட்டு அலுவலகம் மற்றும் நிர்வாக கட்டடம் போன்றவையும் இங்கு உள்ளன. தசரத் இரங்கசாலா அரங்கத்திற்கு அடுத்ததாக பன்னாட்டு கால்பந்து போட்டிகளை நடத்துவதற்குரிய அரங்கமாக இவ்வரங்கம் உள்ளது. இதேபோல பன்னாட்டு துடுப்பாட்ட போட்டிகளை நடத்திவரும் திரிபுவன் பல்கலைக்கழக துடுப்பாட்ட மைதானத்திற்கு அடுத்ததாக இவ்வசதியைப் பெற்றுள்ள அரங்கமாகவும் இம்மைதானம் திகழ்கிறது. நேபாள தேசிய கால்பந்து அணியின் பல பன்னாட்டு நட்பு அளவு போட்டிகள் இங்கு நடைபெற்றுள்ளன.[3][4][5] கைப்பந்து, கூடைப்பந்து, துடுப்பாட்டம் , மல்யுத்தம், குத்துச்சண்டை மற்றும் பூப்பந்து போன்ற போட்டிகளை நடத்தும் வசதியும் இங்குள்ளது.[6][7]

நடத்தப்பட்ட போட்டிகள்[தொகு]

 • தியாகிகள் நினைவு முதல் ஏ நிலை கால்பந்து போட்டி[8]
 • 2019 தெற்காசியப் போட்டிகள்
 • ஆண்டுதோறும் ஆகாகா தங்கக் கோப்பை

மேற்கோள்கள்[தொகு]

 1. "Alcor builds 16,500 seats grandstand in Nepal". www.alcor-equipements.com.
 2. "Pokhara Rangasala".
 3. "sarasansar.com". 2013-02-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-03-09 அன்று பார்க்கப்பட்டது.
 4. "ekantipur.com : Nepal's No. 1 News Portal". 2011-03-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-03-09 அன்று பார்க்கப்பட்டது.
 5. "MYREPUBLICA.com - News in English from Nepal: Fast, Full & Factual News".
 6. "Professional Wrestling comes to Pokhara". 2019-03-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-03-09 அன்று பார்க்கப்பட்டது.
 7. "Professional wrestling events to be held in Ktm, Pokhara - Nepalnews.com". 2011-09-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-04-30 அன்று பார்க்கப்பட்டது.
 8. "ANFA | Manang Marsyangdi Club to play league matches in Pokhara". the-anfa.com (ஆங்கிலம்). 2022-01-06 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொக்காரா_இரங்கசாலா&oldid=3597268" இருந்து மீள்விக்கப்பட்டது