உள்ளடக்கத்துக்குச் செல்

பொகோர் விலங்கியல் அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொகோர் விலங்கியல் அருங்காட்சியகம்
Museum zoologi Bogor
1920இல் பொகோர் விலங்கியல் அருங்காட்சியகம்
Map
நிறுவப்பட்டதுஆய்வகம்,1894
அமைவிடம்ஜலான் ஐஆர்.எச்.டுஜுவாண்டா பிளோக் பெங்கைரான் எண்.9, பொகோர்
வகைவிலங்கியல்
சேகரிப்பு அளவுபுதைபடிவ மற்றும் பாதுகாக்கப்பட்ட விலங்கினங்களின் சேகரிப்பு
உரிமையாளர்இந்தோனேசிய அறிவியல் நிறுவனம்

பொகோர் விலங்கியல் அருங்காட்சியகம் (Bogor Zoology Museum) இந்தோனேசியாவில் பொகோர் நகரில் உள்ள பொகோர் தாவரவியல் பூங்காவின் முதன்மை நுழைவாயிலுக்கு அடுத்தபடியாக அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும்.[1] இந்த அருங்காட்சியகம் மற்றும் அதன் ஆய்வகம் டச்சு கிழத்திந்திய அரசால், காலனி ஆதிக்கத்தின்போது, 1894 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டவையாகும். இந்த அருங்காட்சியகத்தில் அதிக எண்ணிக்கையிலான தென் கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த, பாதுகாக்கப்பட்ட விலங்கின மாதிரி வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

வரலாறு

[தொகு]

பொகோர் விலங்கியல் அருங்காட்சியகம் ஆகஸ்ட் 1894 ஆம் நாளில் டாக்டர் ஜே.சி. கோனிங்பெர்கர் என்பவரால் துவக்கி வைக்கப்பட்டது. முதலில் பொகோர் தாவரவியல் பூங்காவின் மூலைப் பகுதியில் ஒரு சிறிய ஆய்வகமாக அது செயல்பட்டு வந்தது. (அப்போது அது லேண்ட்ஸ் பிளான்டென்யூயின் என்று அழைக்கப்பட்டது). முதலில் துவங்கி வைக்கப்பட்ட ஆய்வகம் லேண்ட்போவ் விலங்கியல் ஆய்வகம் (விவசாயம் மற்றும் விலங்கியல் ஆய்வகம்) என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இது தாவரங்களில் காணப்படுகின்ற பூச்சி வகைகளை மையமாகக் கொண்டு அமைந்திருந்தது.

1898 ஆம் ஆண்டில் இலங்கைக்கு மேற்கொண்ட பயணத்தால் தூண்டப்பட்ட ஜே. கோனிங்பெர்கர், டாக்டர் மெல்ச்சியர் ட்ரூப் என்பவரின் உதவியுடன் ஆராய்ச்சிக்காக விலங்குகளின் மாதிரியை சேகரிக்க ஆரம்பித்தார். ஆகஸ்ட் 1901 இன் இறுதியில், விலங்கியல் அருங்காட்சியகத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. அந்தக் கட்டடம் விலங்கியல் அருங்காட்சியகம் மற்றும் வெக் பிளாட்ஸ் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. 1906 ஆம் ஆண்டில் அருங்காட்சியகம் மற்றும் ஆய்வகம் ஆகிய இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டு ஜூலொஜிச் மியூசியம் என் லேபரேட்டோரியம் என்று மறுபெயர் சூட்டப்பட்டது. 1912 ஆம் ஆண்டில் பீட்டர் ஓவன்ஸ் அருங்காட்சியகத்தில் கொமோடோ டிராகனைப் பற்றிய தன் முதல் அறிவியல் விளக்கத்தை எழுதினார். 1950 ஆம் ஆண்டில் இந்தோனேசியா அதிகாரப்பூர்வமாக சுதந்திரம் பெற்ற பின்னர் இந்த அருங்காட்சியகம் அதன் தற்போதைய பெயரில் இயங்க ஆரம்பித்தது. 1987 ஆம் ஆண்டில் விலங்கியல் பொகோரியன்ஸ் என அழைக்கப்பட்டு வந்த நிறுவனமான ஆராய்ச்சி சங்கம் மற்றும் விலங்கியல் மேம்பாடு (பாலாய் பெனலிட்டியன் டான் பெங்கெம்பங்கன் விலங்கியல்) என மறுபெயரிடப்பட்டது. இது புசாட் பெனலிட்டியன் டான் பெங்கெம்பங்கன் உயிரியல் (புஸ்லிட்பாங் உயிரியல்) (உயிரியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்) நிர்வாகத்தின் கீழ் செயல்பட ஆரம்பித்தது.[2] இந்த அருங்காட்சியகத்தில் தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருள்கள் 1997 ஆம் ஆண்டில்தான் காட்சிக்கு வைக்கப்பட்டன. ஜப்பானிய அரசு மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் ஆதரவோடு அவை அவ்வாறாக அமைக்கப்பட்டன.[3]

அமைப்பு

[தொகு]

பொகோர் விலங்கியல் அருங்காட்சியகம் 1,500 மீ 2 (16,000 சதுர அடி) அளவிலான இடத்தைக் கொண்டு அமைந்துள்ளது. மேலும் இந்த அருங்காட்சியகம் ஆசியாவில் மிகவும் அதிக எண்ணிக்கையிலான விலங்கின சேகரிப்பைத் தன் காட்சிக்கூடத்தில் காட்சிப்படுத்தியுள்ள. இந்த அருங்காட்சியகத்தில் 24 அறைகள் உள்ளன. அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள சேகரிப்புகளில் சில பொருள்கள் அதன் அழியும் தன்மை அல்லது பலவீனம் காரணமாக, அந்த காட்சிப்பொருள்களைப் பாதுகாப்பில் தொடர்ந்து வைத்திருக்கும் நோக்கத்தில் அருங்காட்சியகத்தின் வெப்பநிலை 22 °C (72 °F) என்ற நிலையில் ஆக அமைக்கப்பட்டுள்ளது.[4] இந்த அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் புதைபடிவ மற்றும் பாதுகாக்கப்பட்ட விலங்குகள் உள்ளிட்டவை காட்சியில் உள்ளன:

  • பாலூட்டிகள் - 650 இனங்கள் மற்றும் 30,000 மாதிரிகள்
  • பறவைகள் - 1000 இனங்கள் மற்றும் 30,762 மாதிரிகள்
  • ஊர்வன மற்றும் நீர்வாழ்வன - 763 sஇனங்கள் மற்றும் 19,937 மாதிரிகள்
  • பூச்சிகள் - 12000 இனங்கள் மற்றும் 2,580,000 மாதிரிகள்
  • மெல்லுடலிகள் - 959 இனங்கள் மற்றும் 13,146 மாதிரிகள்
  • முதுகெலும்பற்ற பிற இனங்கள் - 700 இனங்கள் மற்றும்d 15,558 மாதிரிகள்

இந்த அருங்காட்சியகத்தில் ஒரு நீலத்திமிங்கிலத்தின் எலும்புக்கூடும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் காணப்படுகின்ற பெரிய எலும்புக்கூடு இதுவேயாகும்.[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Museum of Zoology". Disparbud West Java. Archived from the original on 4 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 4 May 2014.
  2. Sejarah பரணிடப்பட்டது 2015-12-08 at the வந்தவழி இயந்திரம், biologi.lipi.go.id
  3. "Melihat Keunikan Koleksi Museum Zoologi Bogor" (in இந்தோனேஷியன்). TRIBUNnews.com. பார்க்கப்பட்ட நாள் 4 May 2014.
  4. Museum Zoologi Bogor, museumindonesia.com