பொகோட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பொகொட்டா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பொகோட்டா
Bogotá
Flag of பொகோட்டாBogotá
Flag
Official seal of பொகோட்டாBogotá
சின்னம்
குறிக்கோளுரை: Bogotá, 2600 metros más cerca de las estrellas
Bogotá, 2600 மீட்டர்கள் விண்மீன்களுக்கு நெருக்கமாக
பொகோட்டாவைச் சுற்றிய பகுதிகள்
பொகோட்டாவைச் சுற்றிய பகுதிகள்
நாடு கொலம்பியா
பிரிவு பொகோட்டா, டி.சி.*
Foundation ஆகஸ்ட் 6, 1538
அரசு
 • மேயர் சாமுவேல் மொரேனோ ரோஜாஸ், PDA
பரப்பளவு
 • நகரம் 1,587
 • Land 1.7
கடல்மட்டத்தில் இருந்து உயரம் 2,640
மக்கள்தொகை (2007 மக்கள்தொகை மதிப்பீடு) [1]
 • City 8
 • அடர்த்தி 3.0
 • பெருநகர் 10
HDI (2006) 0.830 – high
இணையத்தளம்
City Official Site
Mayor Official Site
Bogotá Tourism
*Bogotá is physically within and is the capital of Cundinamarca Department, but as the Capital District is treated as its own department.

பொகோட்டா (Bogotá) என்பது கொலொம்பியாவின் தலைநகரமும், அந்நாட்டிலுள்ள அதிக மக்கள்தொகை கொண்ட நகரமுமாகும். பொகோட்டா டி. சி. என்னும் அதிகாரபூர்வமான பெயர் கொண்ட இந்நகரிம்ன் பழைய பெயர் சான்டா ஃபே டி பொகோட்டா. இதன் மக்கள்தொகை 7,033,914 (2007). பொகோட்டாவும் அதனைச் சூழவுள்ள, சியா, கோட்டா, சோவாச்சா, கஜிகா, லா கலேரா ஆகிய நகரங்களை உள்ளடக்கிய பெருநகரப் பகுதியும் 2007 ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி 8,244,980 மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. லா பாஸ், குயிட்டோ ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாக உலகிலேயே மூன்றாவது அதிக உயரத்தில் அமைந்துள்ள முக்கியமான நகரமாகவும் இது விளங்குகிறது.

புவியியல்[தொகு]

வரலாறு[தொகு]

பொகோட்டா, தொடக்கத்தில் முயிஸ்காகளால் பக்காட்டா என அழைக்கப்பட்டது. ஸ்பானியர் இங்கே குடியேற்றங்களை அமைப்பதற்கு முன்னர் இதுவே முயிஸ்காக்களின் நாகரிகத்தின் மையமாக இருந்ததுடன், பெரிய மக்கள்தொகையையும் தாங்கக் கூடியதாக இருந்தது. முதலாவது ஐரோப்பியக் குடியேற்றம் 1538 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி கொன்சாலோ ஜிமெனஸ் டி குயெசாடா என்பவரால் நிறுவப்பட்டது. இவர் தனது பிறந்த இடமான சான்டா ஃபே என்பதையும் உள்ளூர்ப் பெயரான பக்காட்டா என்பதையும் இணைத்து சாண்டா ஃபே டி பக்காட்டா என்னும் பெயரை இக் குடியேற்றத்துக்கு இட்டார். இது புதிய கிரனாடா இராச்சியத்தின் தலைநகரான போது பக்காட்டா என்பது தற்போதைய பொகோட்டா ஆனது. இந்நகரம் விரைவிலேயே ஸ்பானிய குடியேற்றவாத வல்லரசினதும், தென்னமெரிக்க நாகரிகத்தினதும் முக்கிய மையங்களில் ஒன்றாக வளர்ச்சியடைந்தது.

1810-11 காலப்பகுதியில் இதன் குடிமக்கள் ஸ்பானிய ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து, தமது சொந்த அரசை அமைத்தனர். எனினும், உட்பிரிவுகளால் 1816 இல் ஸ்பானிய படையினரின் ஆதரவாளர்கள் தற்காலிகமாக ஆட்சியைக் கைப்பற்றினர். 1819 ஆம் ஆண்டில் சைமன் பொலிவார் இதனை மீண்டும் கைப்பற்றினார். தொடர்ந்து பொகோட்டா; இன்றைய பனாமா, கொலம்பியா, வெனிசுலா, ஈக்குவடோர் ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டாட்சியான கிரான் கொலம்பியாவின் தலைநகரம் ஆனது.

1956 ஆம் ஆண்டில், இந்த மாநகரசபை ஏனைய அருகிலுள்ள மாநகரசபைகளுடன் இணைக்கப்பட்டுச் சிறப்புப் பகுதி (Special District) உருவாக்கப்பட்டது. 1991 ஆம் ஆண்டின் அரசமைப்புச் சட்டம் பொகோட்டாவைத் தலைநகரமாக உறுதிப்படுத்தியதுடன் இதன் பெயர், சான்டா ஃபே டி பொகோட்டா என மாற்றப்பட்டது. அத்துடன் இது சிறப்புப் பகுதி என்பதில் இருந்து தலைநகரப் பகுதியாகவும் தரமுயர்த்தப்பட்டது.

ஆகஸ்ட் 2000 ஆவது ஆண்டில் இதன் பெயர் மீண்டும் மாற்றப்பட்டு எளிமையாக பொகோட்டா என அழைக்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொகோட்டா&oldid=2282082" இருந்து மீள்விக்கப்பட்டது