உள்ளடக்கத்துக்குச் செல்

பை நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பை நாள்
கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அறிவியல் நுட்பசாலையான எக்ஸ்புளோடோறியத்தில் நடந்த பை தின கொண்டாட்டத்தில் அதன் அமைப்பாளர் லாரி ஷா
கடைப்பிடிப்போர்அமெரிக்க ஐக்கிய நாடுகள்
வகைகணிதவியல்
முக்கியத்துவம்3, 1, மற்றும் 4 ஆகியவை அதன் தசம பிரதிநிதித்துவத்தில் π இன் மூன்று மிக முக்கியமான மதிப்புறு இலக்கங்கள் ஆகும்.
கொண்டாட்டங்கள்π பற்றிய விவாதங்கள், சாப்பிடுதல், மனப்பாடம் செய்தல்.[1]
நாள்மார்ச் 14
நிகழ்வுஆண்டுதோறும்
முதல் முறை1988
தொடர்புடையனπ தோராய நாள்

பை நாள் (Pi Day) அல்லது பை அண்ணளவு நாள் என்பன என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியைக் கொண்டாடும் நாளாகும். ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 14ம் நாள் பை நாளாக கொள்ளப்படுகின்றது. அமெரிக்க நாட்காட்டியின் படி 3/14 என்பது மார்ச் 14 ஐக் குறிக்கும். இந்த எண், அதாவது 3.14 என்பது அண்ணளவாக ஐயும் குறிக்கும். இது மார்ச் 14 1:59:26 என்ற குறிப்பிட்ட நேரத்திலும் கொண்டாடப்படுகிறது. (π = 3.1415926).

பை அண்ணளவு நாள் என்பது பல்வேறு நாட்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக இது ஐரோப்பிய நாட்கணக்குகளில் ஜூலை 22 இல் ( யின் பரவலாக அறிந்த அண்ணளவு ) இது கொண்டாடப்பட்டு வருகின்றது. அல்பர்ட் ஐன்ஸ்டீனின் பிறந்த நாளும் மார்ச் 14 இல் வருவது குறிப்பிடத்தக்கது.

நாள் முதன்முறையாக 1988இல் கலிபோர்னியாவில் உள்ள அறிவியல் நுட்பசாலையான எக்ஸ்புளோடோறியத்தில் கொண்டாடப்பட்டது. அந்நாளில் நுட்பசாலையைச் சுற்றி அலுவலர்களினதும் பொதுமக்களினதும் அணிவகுப்புடன் கொண்டாடப்பட்டது. அணிவகுப்பின் முடிவில் பை (Pye) எனப்படும் உணவுப்பண்டம் அனைவருக்கும் பரிமாறப்பட்டு அந்நாள் கொண்டாடப்பட்டது[2]. லாறி ஷோ (Larry Shaw) என்பவர் இந்நாளை அறிமுகப்படுத்தினார்.[3]

பை நாள் கொண்டாடப்படும் நாட்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Elizabeth Landau (March 12, 2010). "On Pi Day, one number 'reeks of mystery'" (in en). CNN. http://www.cnn.com/2010/TECH/03/12/pi.day.math/index.html.
  2. Adrian Apollo (மார்ச் 10, 2007). "A place where learning pi is a piece of cake". The Fresno Bee. http://www.fresnobee.com/283/story/34436.html. பார்த்த நாள்: 2007-03-21. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. COMMENTS & CURIOSITIES: Infinitely irrational Pi Day Accessed on 2007-03-29.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பை நாள்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பை_நாள்&oldid=4489271" இலிருந்து மீள்விக்கப்பட்டது