பைலா சேகர் ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பைலா சேகர் ரெட்டி
எம்.எல்.ஏ.,
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
June 2, 2014
தொகுதி போங்கிர், தெலுங்கானா
தனிநபர் தகவல்
பிறப்பு 1968 (அகவை 52–53)
நஞ்சப்பேட்டை, யதாத்ரி புவனகிரி மாவட்டம்,தெலுங்கானா.
அரசியல் கட்சி தெலுங்கானா இராட்டிர சமிதி
படித்த கல்வி நிறுவனங்கள் உஸ்மியா பல்கலைக்கழகம்

பைலா சேகர் ரெட்டி(Pailla Shekar Reddy) (பிறப்பு 1968) தெலுங்கானா ராஷ்டிர சமிதியைச் சார்ந்த ஒரு இந்திய இந்திய அரசியல்வாதி ஆவார். 2014ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பொதுத் தேர்தலில் போங்கிர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] இவர் தெலுங்கானா ராஷ்டிர சமிதியைச் சேர்ந்தவர் மற்றும் அதன் பொலிட்பீரோவில் உறுப்பினராக உள்ளார். [2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ஷேகர் ரெட்டி பிறந்தார் யதன்றி புவனகிரி மாவட்டத்தில் ஆத்மகிர் மண்டலத்தைச் சேர்ந்த கதிரேணிகுட நஞ்சர்பெட் கிராமத்தில் பைல்ல ராம் ரெட்டி என்னும் ஒரு சாராரண ஒரு விவசாயியின் மகனாகப் பிறந்தார். , கம்மம் பகுதியிலுள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் எஸ்.இ.எஸ். எஸ்.என். மூர்த்தி பாலிடெக்னிக் கல்லூரியில் கட்டடப் பொறியியல் பிரிவில் பட்டயப்படிப்பை முடித்தார்.

தொழில்[தொகு]

அரசியலில் நுழைவதற்கு முன்பு ஹைதராபாத் மற்றும் பெங்களூரில் ரியல் எஸ்டேட் துறையில் இருந்தார்.

அரசியல்[தொகு]

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள போங்கிர் சட்டமன்றத் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக 2014 பொதுத் தேர்தலில் 54,686 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். மேலும் ஒய்.டி.பி கட்சியின் ஜிட்டா பாலகிருஷ்ணா ரெட்டியை 15,416 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். [3] 1985 ஆம் ஆண்டு முதல் அலிமினெட்டி மாதவா ரெட்டியும் பின்னர் அவரது மனைவியும் அந்தத் தொகுதியைப் பிரதிநிதியானபிறகு , போங்கிர் தொகுதி தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கே உரியதாக மாறியது.

மக்கள் பணிகள்[தொகு]

இவர் ஃவுளூரைடு மாசுபாட்டால் பாதிப்படைந்த நல்கொண்டா மாவட்டம் முழுவதும் சுத்தமான குடிநீர் அமைப்புகளை ஏற்படுத்தினார். [4] சேகர் ரெட்டி செய்த மிகப் பெரிய காரியங்களில் ஒன்று புனாடிகனி கால்வாய், இது 2004 முதல் நிலுவையில் உள்ளது.இவர் மக்களுக்குப் பிடித்தமான தலைவராவார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவருக்கு திருமணமாகி ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பைலா_சேகர்_ரெட்டி&oldid=3088342" இருந்து மீள்விக்கப்பட்டது