உள்ளடக்கத்துக்குச் செல்

பைலசின் திமோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைலசின் திமோன், 17ஆம் நூற்றாண்டுப் பொறிப்பு

பைலசின் திமோன் (Timon of Phlius) அல்லது பிலியசின் திமோன் (/ˈtmən/; கிரேக்க மொழி: Τίμων ὁ Φλιάσιος, gen.: Τίμωνος; அண். கி.மு320 – அண்.கி.மு 230) ஒரு கிரேக்கர் ஐயுறவுவாத மெய்யியலாளர் ஆவார், இவர் பிர்ரோவின் மாணாக்கர். Silloi (கிரேக்க மொழி: Σίλλοι) எனப்படும் எள்ளலியக் கவிதைகளை இயற்றியவர். இவர் பைலசில்பிறந்து மெகாராவுக்குப் புலம்பெயர்ந்தார். பிறகு தன் வீட்டிற்குத் திரும்பிவந்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் தன் மனைவியுடன் எலிசுக்குச் சென்றார். அங்கு பிர்ரோவைப் பற்றிக் கேள்விப்பட்டு அவர்வழியைத் தொடர்ந்தார். இவர் ஃஎல்லெசுபாண்டிலும் வாழ்ந்தார்.ஏதென்சுக்குச் செல்லும் முன் இவர் சால்சிடோனில் கல்வி கற்பித்தார். ஏதென்சில் தன் இறுதிக் காலம்வரை வாழ்ந்தார். இவர் பல நூல்களை இயற்றியுள்ளார். இவர் கவிதை துன்பியல், எள்ளல், இன்பியல் நாடகங்களை இயற்றியுள்ளார். இவை ஏதுமே இப்போது கிடைக்கவில்லை. இவரது மிகவும் புகழ்பெற்ற படைப்பு Silloi என்ற பெயர்பெற்ற மறைந்த, வாழும் மெய்யியலாளர்களை எள்ளும் எழுசீரிலான அடியுள்ள கவிதை நூலாகும். Silloi நூல் முழுமையாக்க் கிடைக்கவில்லை. ஆனால் பல பழம்புலவர்கள் அதில் இருந்து மேற்கோள்களை எடுத்தாளுகின்றனர்.

பண்பாட்டு மேற்கோள்கள்[தொகு]

சேக்சுபியர் கூறும் ஏதென்சின் திமோன் இவருக்கு முன்வாழ்ந்த வேறொருவராகும். என்றாலும் சில ஏதென்சின் திமோனின் மெய்யியல் கூறுகள் சேக்சுபியரின்பால் தாக்கம் விளைவித்துள்ளன.

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  • Brunschwig, J., அறிமுகம்: ஃஎலனிய அறிதலியலின் தொடக்கங்கள், in Algra, Barnes, Mansfeld and Schofield (eds.), The Cambridge History of Hellenistic Philosophy (Cambridge University Press, 1999) p. 229-259.
  • Hornblower, Simon, and Anthony Spawforth ed., ஆக்சுஃபோர்டு செவ்வியல் அகரநிரலி (Oxford University Press, 2003) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-866172-X

மேலும் படிக்க[தொகு]

  • Dee L. Clayman, பிலியசின் திமோன்: பிர்ரோனியம் கவிதையில், Berlin: Walter de Gruyter, 2009

(இதில் Silloi நூல் மீளாக்கப்பட்டு, கிரேக்கப் பாடத்தோடு ஆங்கில மொழிபெயர்ப்பும் தரப்பட்டுள்ளது.)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பைலசின்_திமோன்&oldid=4025281" இலிருந்து மீள்விக்கப்பட்டது