பைரோபாசுபோரைல் குளோரைடு
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
டைபாசுபோரைல் டெட்ராகுளோரைடு
| |
| இனங்காட்டிகள் | |
| 13498-14-1 | |
| ChemSpider | 3632294 |
| EC number | 236-824-4 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 4432411 |
| |
| பண்புகள் | |
| O(POCl2)2 | |
| வாய்ப்பாட்டு எடை | 251.74 g·mol−1 |
| தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
| அடர்த்தி | 1.74 கி/செ.மீ3 |
| கொதிநிலை | 66–68 °C (151–154 °F; 339–341 K) 0.01 டார் |
| தீங்குகள் | |
| GHS pictograms | |
| GHS signal word | அபாயம் |
| H314 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பைரோபாசுபோரைல் குளோரைடு (Pyrophosphoryl chloride) என்பது P2O3Cl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். O(POCl2)2 என்ற அமைப்பு வாய்ப்பாட்டாலும் இச்சேர்மம் குறிக்கப்படுகிறது. இது ஒரு நிறமற்ற நீர்மம் ஆகும். ன் வேதியியல் கட்டமைப்பைப் பொறுத்தவரை, பைரோபாசுபோரைல் குளோரைடு ஓர் ஆக்சோ பாலத்தைப் பகிர்ந்து கொள்ளும் இரண்டு நான்முக பாசுபரசு தளங்களைக் கொண்டுள்ளது. பைரோபாசுபாரிக்கு அமிலமான O(PO(OH)2)2 அமிலத்தின் வழிப்பெறுதியாகவும் கருதப்படுகிறது.
இங்குள்ள வேதியியல் சமன்பாட்டில் விவரிக்கப்பட்டுள்ளபடி, பாசுபோரைல் குளோரைடை மெத்தனாலின் பாதி சமமான கரைசலுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் பைரோபாசுபோரைல் குளோரைடு சேர்மம் பெறப்படுகிறது:[1]
- 2 POCl3 + CH3OH -> O(POCl2)2 + CH3Cl + HCl
பாசுபோரைல் குளோரைடு மூலம் ஆல்ககால்களை குளோரினேற்றம் செய்வதில் பைரோபாசுபோரைல் குளோரைடு ஓர் இடைநிலைப் பொருளாக முன்மொழியப்படுகிறது. இது வில்சுமியர்-ஆக்கு ஃபார்மைலேற்ற வினைகளுக்கான ஒரு வினைக்காரணியாகவும் செயல்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Cheung, Gi K.; Downie, Ian M.; Earle, Martyn J.; Heaney, Harry; Matough, M. Fathy S.; Shuhaibar, Khamis F.; Thomas, Deborah (1992). "A Convenient Preparation of Pyrophosphoryl Chloride and Its Use in Vilsmeier Formylation Reactions". Synlett (1). doi:10.1055/s-1992-21272.
- ↑ Downie, Ian M.; Earle, Martyn J.; Heaney, Harry; Shuhaibar, Khamis F. (1993). "Vilsmeier formylation and glyoxylation reactions of nucleophilic aromatic compounds using pyrophosphoryl chloride". Tetrahedron 49 (19). doi:10.1016/s0040-4020(01)89915-4.