உள்ளடக்கத்துக்குச் செல்

பைரோஜா பீபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைரோஜா பீபி
உறுப்பினர்-மேற்கு வங்காள சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2016
முன்னையவர்ஓமர் அலி
தொகுதிபானாசுகுரா பாசிம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1951 (அகவை 73–74)
நந்திகிராம், மேற்கு வங்காளம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு

பைரோஜா பீபி (Phiroja Bibi)(பிறப்பு 1951) என்பவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் தெற்கு மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள பனசுகுரா பாசிம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மேற்கு வங்கச் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் 2021 மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தலில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி பெற்றார்.[2][3][4]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

பீபி மேற்கு வங்காளத்தின் நந்திகிராமைச் சேர்ந்தவர். இவர் மணிருலின் மனைவி. இவர் 8-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, கெஜுரி ஆதர்ஷா பித்யாபித்தில் 9-ஆம் வகுப்பிற்குப் பிறகு படிப்பை நிறுத்தினார்.[1]

அரசியல்

[தொகு]

2021 மேற்கு வங்கச் சட்டப்பேரவைத் தேர்தலில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் வேட்பாளராகப் பன்சுகுரா பாசிம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பீபி வெற்றி பெற்றார். இவர் 111,705 வாக்குகளைப் பெற்று தனது நெருங்கிய போட்டியாளரான பாரதிய ஜனதா கட்சியின் சிண்டு சேனாபதியை 8,889 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[5] முன்னதாக, இவர் 2016 சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Phiroja Bibi(All India Trinamool Congress(AITC)):Constituency- PANSKURA PASCHIM(PURBO MEDINIPUR) - Affidavit Information of Candidate". myneta.info. Retrieved 2024-12-09.
  2. TimesNow. "Panskura Paschim Assembly Election Results 2021 - Panskura Paschim Vidhan Sabha Election Results". TimesNow (in ஆங்கிலம்). Retrieved 2024-12-09.
  3. 3.0 3.1 Live, A. B. P. "Panskura-paschim Election Results 2021 LIVE, Vote Counting, Leading, Trailing , Winners West bengal Panskura-paschim Constituency Election News LIVE". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2024-12-09.
  4. "West Bengal Assembly election 2021, Panskura Paschim profile: TMC's Phiroja Bibi won seat in 2016 polls". Firstpost (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-03-26. Retrieved 2024-12-09.
  5. "West Bengal Election Results 2021: Full list of winners". India Today (in ஆங்கிலம்). 2021-05-02. Retrieved 2024-12-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைரோஜா_பீபி&oldid=4235043" இலிருந்து மீள்விக்கப்பட்டது