பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - த கர்ஸ் ஆப் பிளாக் பேர்ள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்
த கர்ஸ் ஆப் பிளாக் பேர்ள்
Pirates of the Caribbean:
The Curse of the Black Pearl
இயக்கம்கோர் வெர்பின்ஸ்கி
தயாரிப்புஜெர்ரி ப்ரூக்ஹெய்மர்
மூலக்கதைகரீபியக் கடற்கொள்ளையர்கள்
படைத்தவர் வால்ட் டிஸ்னி
திரைக்கதை
  • டெட் எலியட்
  • டெர்ரி ரோஸ்ஸியோ
இசை
  • கிளவுஸ் பேட்ரல்
  • ஹான்ஸ் ஜிம்மர்
நடிப்பு
ஒளிப்பதிவுDariusz Wolski
படத்தொகுப்பு
  • கிரேக் வூட்
  • ஸ்டீபன் ரிவனின்
  • ஆர்தர் ஷ்மிட்
விநியோகம்பியூனா விஸ்டா பிக்சர்ஸ் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்
வெளியீடுசூன் 28, 2003 (2003-06-28)(டிஸ்னிலண்ட் ரிசார்ட்)
சூலை 9, 2003 (United States)
ஓட்டம்142 நிமிடங்கள்[1]
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$140 மில்லியன்[2]
மொத்த வருவாய்$654.3 மில்லியன்[2]

பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - த கர்ஸ் ஆப் பிளாக் பேர்ள்  (Pirates of the Caribbean: The Curse of the Black Pearl, தமிழில் கரீபியக் கடற்கொள்ளையர்கள் 1 - கறுப்பு முத்தின் சாபம்) என்பது 2003 ஆண்டைய அமெரிக்க கனவுருப்புனைவு திரைப்படமாகும். படத்தை  கோர் வெர்பின்ஸ்கி இயக்கியுள்ளார். மற்றும் இந்தப்படமானது  பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படத் தொடரில்  முதல் படமாகும். இப்படமானது வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் மற்றும் ஜெர்ரி ப்ரூக்ஹெய்மரால் தயாரிக்கப்பட்டது. இப்படமானது  டிஸ்னி தீம் பார்க்கில், வால்ட் டிஸ்னியின் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் சவாரியின் அடிப்படையில் அமைந்துள்ளது .[3] இந்த கதையானது கொல்லர் வில்டர்னர் (ஆர்லாந்தோ புளூம்) மற்றும் கடற்கொள்ளையன் கேப்டன் ஜாக் ஸ்பேரோ (ஜானி டெப்) ஆகியோர் இணைந்து கடத்தப்பட்ட எலிசபெத் ஸ்வான் (கீரா நைட்லி) இங்கிலாந்து கவர்னர் மகளை பிளாக் பெர்ல் கப்பலின் கேப்டன் ஹெக்டர் பர்போசா (ஜியோஃப்ரே ரஷ்) விடம் இருந்து மீட்பதை அடிப்படையாகக் கொண்டது.

ஜெய் வோல்பெர்ட்டால் 2001 ஆம் ஆண்டு தீம் பார்க் சவாரி அடிப்படையிலான ஒரு திரைக்கதை உருவாக்கப்பட்டது, மேலும்  ஸ்டோர்ட் பீட்டி 2002 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அதை மீண்டும் எழுதினார். அந்தக் காலகட்டத்தில், தயாரிப்பாளர் ஜெர்ரி ப்ரூக்ஹெய்மர் இந்தத் திட்டத்தில் ஆர்வம் காட்டினார்; அவர் டெட் எலியட் மற்றும் டெர்ரி ரோஸியோ ஆகியோரையும் இந்தத் திரைக்கதையில் ஈடுபடுத்தி, கதைவடிவில் சிறப்புக்குரிய சாபப் பகுதியைச் சேர்த்தார்.  2002 அக்டோபர் முதல் 2003 மார்ச் வரை செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடின்கள் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சோடிப்புகளிலும் (செட்), படப்பிடிப்பு நடந்தது. இது எம்.பீ.ஏ.ஏ வின் பிஜி -13 மதிப்பீடுடன் வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் பதாகையின் கீழ் வெளியான முதல் திரைப்படம் என்பது  குறிப்பிடத்தக்கது.

இந்தப் படமானது 2003 சூன் 28 அன்று  கலிஃபோர்னியாவின், அனாஹெமில் உள்ள டிஸ்னிலேண்ட் பார்க்கின்  திரையுலகில் வெளியிடப்பட்டு, விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. படமானது உலகளவில் $ 654 மில்லியனுக்கும் மேல் வசூலித்தது வெற்றியடைந்தது. பலர் இந்த வரிசை படத்தில் சிறந்த துவக்கம் என்று கருதுகின்றனர். ஜானி டெப்  முதன்மைப் பாத்திரத்தில் சிறந்த நடிகருக்கான  ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதை வென்றார், மேலும் அவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது, முதன்மைப் பாத்திரத்தில் சிறந்த நடிகருக்கான பிஏஎப்டி (BAFTA) விருது மற்றும் சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருது - மோசன் பிக்சர்சின்  இசை அல்லது நகைச்சுவை விருது ஆகியவற்றைப் பெற்றது. பிளாக் பெர்லின் சாபம் நான்கு ஆஸ்கர் விருதுகளுக்கும் பிஏஎப்டிக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. இந்தத் தொடரின் அடுத்தடுத்தப் படங்களான டெட் மேன்ஸ் செஸ்ட் மற்றும் அட் வேர்ல்ட்ஸ் எண்ட் ஆகியவை 2006 ஆம் ஆண்டு மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக வெளிவந்தன. அதன்பிறகு  ஸ்ட்ராங்கர் டைட்ஸ் மற்றும் டெட் மென் டால் நோல் டேல்ஸ் ஆகிய இரண்டு தொடர் படங்கள் 2011 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டன.

கதை[தொகு]

பிரிட்டிஷ் கப்பற்படை கப்பலில் ஆளுநர் ஸ்வான், அவரது பத்துவயது மகள் எலிசபெத் போன்றோருடன் கப்பலில் செல்லும்போது வழியில் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட ஒரு கப்பலில் இருந்து வில் டானர் என்ற ஒரு சிறுவனை மீட்கின்றனர். மயங்கி இருக்கும் அவனது கழுத்தில் அணிந்திருக்கும் ஒரு தங்கப்பதக்கத்தை எடுத்து அவனுக்குத் தெரியாமல் மறைத்து விடுகிறால் சிறுமி எலிசபெத்.

இது நடந்து எட்டு ஆண்டுகளுக்குப்பின் போர்ட் ராயல் துறைமுகத்தின் அருகே மூழ்கிக்கொண்டிருக்கும் நிலையில் வரும் ஒரு சிறியபடகில் இருந்து, ஜாக் ஸ்பேரோ கரை இறங்குகிறான். அப்போது எதிர்பாராவிதமாக கடலில் விழும் எலிசபெத்தை ஜாக் ஸ்பேரே காப்பாற்றுகிறான். எலிசபெத் கடலில் விழுந்தபோது அவள் கழுத்தில் அணிந்திருக்கும் பதக்கம் கடல் நீரில் படுகிறது. இதனால் இந்த பதக்கம் இருக்குமிடத்தே பிளாக்பியர்ல் என்னும் மாயக் கப்பல் மோப்பம் பிடித்துவிடுகிறது. ஜாக் ஸ்பேரோ ஒரு கொள்ளையன் என தெரிந்து அவன் சிறையில் அடைக்கப்படுகிறான். அன்று இரவு போர்ட் ராயல் துறைமுகத்துக்கு பிளாக்பியர்ல கப்பலில் கொள்ளையர்கள் வருகின்றனர். அவர்கள் தேடிவந்த பதக்கம் எலிசபெத்திடம் இருப்பதால் அவளைக் கடத்திச்செல்கின்றனர்.

பிளாக்பியர்ல் கப்பல் தலைவனான ஹெக்டர் பர்போசா அவளைக் கடத்தியதற்கான காரணத்தைக் கூறுகின்றான்; சில வருடங்களுக்கு முன் கல்லறைத் தீவு பொக்கிஷத்தை அடைவதற்காக பிளாக்பியர்ல் கப்பலில் ஒரு குழுவினர் செல்கின்றனர். அந்தக் கப்பலின் தலைவனான ஜாக் ஸ்பேரோவை ஏமாற்றி ஒரு தீவில் இறக்கிவிட்டு கப்பலை எடுத்துச்செல்கிறான் பர்போசா. இதற்கு எதிர்ப்பு தொரிவிக்கிறார் வில் டானரின் தந்தையான வில்லியம் பூஸ்ட்ரப் டானர். தீவுக்குச் சென்று தங்கத்தை கொள்ளையடித்த பிறகு சபிக்கப்பட்ட அந்தத் தங்கத்தைக் எடுத்ததால் பசி, தாகம் அடங்காத சாவே வராத நிலவொளியில் பேயாய் மாறும் சாபத்திற்கு ஆளானது தெரிகிறது. இந்த சாபத்திற்கான விமோசனமானது கொள்ளையடித்த 882 பதக்கங்களையும் அவர்களின் ரத்தத்துடன் கல்லறைத் தீவில் வைக்க வேண்டும் என்பதாகும். இதற்காகவே எலிசபெத்தை அவர்கள் கடத்திச்செல்கிறார்கள்.

இந்நிலையில் எலிசபெத்தை காதலிக்கும் வில் டானர், சிறையில் உள்ள ஜாக்கை விடுவித்து எலிசபெத்தை மீட்க உதவி கோருகிறான். இவனே வில்லியம் டானரின் உண்மையான வாரிசு என்பதையும் சாபம் தீர இவனது ரத்தமே தேவை என்பதையும் அறிந்த ஜாக், வில்லிற்கு உதவ சம்மதிக்கிறான்.

இதன்பின் எலிசபெத் மீட்கப்பட்டாளா? பர்போசாவின் சாபம் தீர்ந்ததா? என்பதே மீதிக் கதை.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pirates of the Caribbean – The Curse of the Black Pearl". British Board of Film Classification. July 10, 2003. October 18, 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. February 7, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 "Pirates of the Caribbean: The Curse of the Black Pearl (2003)". பாக்சு ஆபிசு மோசோ. May 9, 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. May 21, 2007 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Pirates of the Caribbean: The Curse of the Black Pearl (2003)". New York Times. Archived from the original on August 24, 2011. https://web.archive.org/web/20110824024810/http://movies.nytimes.com/movie/281052/Pirates-of-the-Caribbean-The-Curse-of-the-Black-Pearl/credits. பார்த்த நாள்: October 15, 2012.