பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - டெட் மேன்ஸ் செஸ்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் -
டெட் மேன்ஸ் செஸ்ட்
Pirates of the Caribbean:
Dead Man's Chest
இயக்கம்கோர் வெர்பின்ஸ்கி
தயாரிப்புஜெர்ரி ப்ரூக்ஹெய்மர்
கதை
  • டெட் எலியட்
  • டெர்ரி ரோஸ்ஸியோ
மூலக்கதை
இசைஹான்ஸ் ஜிம்மர்
நடிப்பு
ஒளிப்பதிவுDariusz Wolski
படத்தொகுப்பு
  • கிரேக் வூட்
  • ஸ்டீபன் ரிவனின்
விநியோகம்பியூனா விஸ்டா பிக்சர்ஸ்
வெளியீடுசூன் 24, 2006 (2006-06-24)(டிஸ்னிலண்ட் ரிசார்ட்)
சூலை 7, 2006 (United States)
ஓட்டம்150 நிமிடங்கள்[1]
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$225 மில்லியன்[2]
மொத்த வருவாய்$1.066 பில்லியன்[2]

பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - டெட் மேன்ஸ் செஸ்ட் (Pirates of the Caribbean: Dead Man's Chest) என்பது 2006 ஆண்டைய அமெரிக்க கனவுருப்புனைவு திரைப்படமாகும். இப்படமானது பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படத் தொடரில் இரண்டாவது படமாகும். மேலும் இது பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - த கர்ஸ் ஆப் பிளாக் பேர்ள் (2003) படத்தின் தொடர்ச்சி ஆகும். இதை கோர் வெர்பின்ஸ்கி இயக்க, டெட் எலியட் மற்றும் டெர்ரி ரோஸியோ ஆகியோர் எழுத, ஜெர்ரி ப்ரூக்ஹேமர் தயாரித்ததுள்ளார். கடற்கொள்ளையன் கேப்டன் ஜாக் ஸ்பெரோவுக்கு உதவியதற்காக வில்டர்னர் (ஆர்லாந்தோ புளூம்) மற்றும் அவனது காதலி எலிசபெத் ஸ்வான் (கீரா நைட்லி) ஆகியோரை, கிழக்கு இந்திய கம்பெனியின் தளபதியான கட்லேர் பெக்கெட் பிரபு கைது செய்கிறான். எலிசபெத்தை விடுதலை செய்ய கேப்டன் ஜாக் ஸ்பெரோவிடம் (ஜானி டெப்) உள்ள திசைமானியைக் கைப்பற்றி வருமாறு தளபதியான பெக்கெட் பிரபு வில்டர்னெர் ஸ்மித்திடம் ஒப்பந்தம் செய்கிறான். அந்த திசைமானியின் உதவியோடு டேவி ஜோன்ஸ் இதயம் இருக்கும் பெட்டகத்தின் இருப்பிடத்தைக் கைப்பற்றி அதை கொண்டு கடலைத் தன் கட்டுபாட்டில் கொண்டுவருவது பெக்கெட் பிரபுவின் திட்டம் .

கடலுக்கு அடியில் பெக்கெட் பிரபுவால் மூல்கடிக்கப்பட்ட ப்ளாக் பெர்ல் கப்பலை டேவி ஜோன்ஸ் மீட்டு தந்தற்காக ஜாக், ஜோன்சின் பிலயிங் டச்மேன் கப்பலில் 100 வருடம் அடிமையாக இருக்கவேண்டும். இந்தக் கடனில் இருந்து தப்பிக்க ஜாக் ஜோன்சின் இதயத்தை தேடுகிறான். இதயத்தை கண்டுபிடிப்பது, வில் தன் தந்தையை ப்லயிங் டச்மேனில் அடிமையாக சந்திப்பது, கிராகன் என்ற கடல் மிருகத்தை எதிர் கொள்வது, இறுதியில் ஜாக் கிராகனால் டேவி ஜோன்சின் (பில் நை) பெட்டகத்துக்குள் ஆடை அடைபடுவது என பல திருப்புமுனைகளைக் கொண்ட படமாக இது அமைந்தது.

பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - த கர்ஸ் ஆப் பிளாக் பேர்ள் கதையின் தொடர்ச்சியாக 2004 ஆண்டு எலியட் மற்றும் ரோஸ்ஸியோ ஆகியோர் இரு கதைகளை உருவாக்கி வளர்த்தனர். இதையடுத்து படத்தின் படப்பிடிப்பானது 2005 பெப்ரவரி முதல் செப்டம்பர் மாதம் வரை பாலோஸ் வெர்டெஸ், செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடின்ஸ், டொமினிக்கா, பஹாமாஸ் போன்ற இடங்களிலும், வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட சோடனைகளிலும் நடந்தது. இந்தத் தொடரின் மூன்றாவது படமான அட் வேர்ல்ட்ஸ் எண்ட் உடனுக்குடன் மீண்டும் படம்பிடிக்கப்பட்டது.

டெட் மேன்ஸ் செஸ்ட் 2006 சூலை 7 அன்று அமெரிக்காவில் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படத்தில் இடம்பெற்ற ஸ்பெசல் எபக்ட் மற்றும் நடிப்பு ஆகியவற்றுக்கு பாராட்டையும், கதையமைப்பு மற்றும் படத்தின் நீளம் ஆகியவற்றுக்காக விமர்சிக்கப்பட்டது. இப்படமானது வெளியான முதல் மூன்று நாட்களில் பல சதனைப் பதிவுகளைச் செய்தது. அமெரிக்காவில் முதல் வார இறுதியில் $ 136 மில்லியன் வசூலையும், அந்த நேரத்தில், உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் $ 1 பில்லியனுக்கும் மிகுதியான வசூலை விரைவாக ஈட்டியது.[3] இது உலகளவில் மிக கூடுதலாக வசூலித்த 23 வது படமாகவும், வால்ட் டிஸ்னி ஸ்டூடியோவின் படங்களில் இதன் வசூல் சாதனனையை முறியடித்த படமாக ஆறு ஆண்டுகள் கழித்து வெளியிடப்பட்ட படமான தி அவெஞெசர்ஸ் (2012) வெளியானது. இந்தப் படமானது சிறந்த கலை இயக்கம், ஒலித் தொகுப்பு, ஒலிக் கலவை ஆகியவற்றுக்கான அகாதமி விருது பரிந்துரைகளையும், சிறந்த காட்சி நுட்பத்துக்காகன அகதமி விருதையும் பெற்றது. இதன் அடுத்தத் தொடர்ச்சியாக அட் வோல்ட்ஸ் எண்ட் படம் 2007 ஆண்டு வெளியானது.

கதை[தொகு]

இப்படத்தின் முந்தைய படமான பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - த கர்ஸ் ஆப் பிளாக் பேர்ள் படத்தின் இறுதியில் போர்ட் ராயல் துறைமுகத்தில் கைதியாக உள்ள வில் டானரை ஜாக்கும், எலிசபெத்தும் சேர்ந்து காப்பாற்றி தப்ப விடுகின்றனர். அதன் தொடர்ச்சியாக இப்படத்தில் போர்ட் ராயல் துறைமுகத்தின் புதிய நிவாகியான லார்ட் பெக்கட் வில் டானரையும் எலிசபெத்தையும் ஜாக் தப்ப உதவிய குற்றத்திற்காக கைது செய்கிறார். பின்னர் வில் டானரை மட்டும் விடுவித்து ஜாக்கிடம் இருக்கும் அதிசய திசைமானியை கொண்டுவந்தால் எலிசபெத்தை விட்டுவிடுவதாக கூறி விடுகிறார். சாதாரண திசைமாணிகள் வடதிசையைக் காட்டுக்கூடியன ஆனால் ஜாக் ஸ்பேரோவின் திசைமாணியோ செல்ல நினைக்கும் இடத்தின் திசையை காட்டக்கூடியது இதனைக் கொண்டு கடலை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் என லார்ட் பெக்கட் வில் திட்டமிடுகிறான்.

பிளையிங் டச்மேனின் என்ற கப்பலின் தலைவன் டேவி ஜோன்ஸ். இவனின் முகத்தில் எண்காலி போன்ற தோற்றமுடைய விசித்திரமான தாடி மீசை போன்றவை இருக்கும். இவனின் இதயமானது ஒரு பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஒரு தீவில் உள்ள மறைவிடத்தில் வைக்கப்பட்டிருக்கும். இவனை யாராலும் கொல்ல இயலாது இவனைக் கொல்ல வேண்ணுமானால் இவனின் இதயத்தக் கண்டுபிடித்து அதைக் கொன்றால் இவன் உயிர் பிரியும். இவனது கப்பலில் உள்ள மாலுமிகள் அனைவரும் இவனின் அடிமைகள் ஆவர். இவனின் அடிமைகளில் ஒருவர் வில் டானரின் தந்தையான பூஸ்ட்ரப் டானர்.

ஜாக் ஸ்பேரோ ஒரு சிறைச்சாலையில் இருந்து ஒரு சாவியின் வரைபடத்தை கைப்பற்றி வருகிறான். அந்த சாவியானது டேவி ஜோன்சின் இதயம் இருக்கும் பெட்டகத்தின் சாவியாகும். டேவி ஜோன்ஸ் ஜாக்கின் கப்பலை மீட்டுத் தந்த உதவிக்கு பிரதிபலனாக ஜாக் பதிமூன்று ஆண்டுகள் அவனது கப்பலின் தலைவனாகவும் பின்னர் ஃபிளையிங் டச்மேன் கப்பலில் அடிமை மாலுமியாகவும் இருக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்துள்ளான். இதனால் அடிமை வாழ்விலிருந்து மீள டேவி ஜோன்சின் இதயத்தைக் கைபற்றி அதைக் கொல்ல திட்டமிடுகிறான்.

இறுதியில் வில் டானர் தன் தந்தையை அடிமைத் தளையில் இருந்தும், எலிசபெத்தை சிறையில் இருந்தும் மீட்டானா, டேவி ஜோன்ஸின் இதயத்தை யார் கைபற்றுகின்றனர் என்பதே மீதிக்கதை.

மேற்கோள்கள்[தொகு]