உள்ளடக்கத்துக்குச் செல்

பைரூத்து ஆளுநரகம்

ஆள்கூறுகள்: 33°53′N 35°30′E / 33.883°N 35.500°E / 33.883; 35.500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெய்ரூத் கவர்னரேட்
محافظة بيروت
Gouvernorat de Beyrouth
லெபனானில் பெய்ரூத் ஆளுநரகத்தின் அமைவிடம்
லெபனானில் பெய்ரூத் ஆளுநரகத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 33°53′N 35°30′E / 33.883°N 35.500°E / 33.883; 35.500
நாடுலெபனான்
அரசு
 • ஆளுநர்மர்வான் அபாட்
பரப்பளவு
 • மொத்தம்19.8 km2 (7.6 sq mi)
நேர வலயம்ஒசநே+2 (கி.ஐ.நே.)
 • கோடை (பசேநே)ஒசநே+3 (கி.ஐ.கோ.நே.)

பெய்ரூத் கவர்னரேட் (Beirut Governorate, அரபு : محافظة بيروت‎ , Muhāfazat Bayrūt பிரெஞ்சு மொழி: Gouvernorat De Beyrouth ) என்பது லெபனானின் ஆளுநரகம் எனப்படும் மாகாணம் ஆகும். இது ஒற்றை மாவட்டத்தையும் ஒற்றை நகரமான பெய்ரூத்தையும் கொண்டுள்ளது. இந்த நகரம் அளூநரகத்தின் தலைநகரமாகவும், லெபனானின் தலைநகரமாகவும் உள்ளது.

இந்த ஆளுநரகத்தின் பரப்பளவு 19.8 கிமீ 2 ( புறநகர் விடுத்து) ஆகும். இது பரப்பளவில் சிறியதாக இருந்தபோதிலும், இதன் பொருளாதார, அரசியல், கலாச்சார, சமூக நடவடிக்கைகளின் காரணமாக லெபனானில் மிக முக்கியமான பிராந்தியமாக கருதப்படுகிறது. பெய்ரூத்தின் ஆளுநராக பாரம்பரிய வழக்கத்தின் படி கிரேக்க மரபுவழி திருச்சபையைச் சேர்ந்தவராகவும், மேயராக சுன்னி முஸ்லீமும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மத்திய கிழக்கில் பெய்ரூத் சமய ரீதியாக மிகவும் வேறுபட்ட நகரமாக அறியப்படுகிறது. பெய்ரூத் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ( கிரேட்டர் பெய்ரூத் ) சுமார் 2.5 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.

பெய்ரூட் வானளாவிகள்

நகரங்கள்

[தொகு]

சமயம்

[தொகு]

பெய்ரூத் ஆளுநரகத்தில் சமயம்

பெய்ரூத் கவர்னரேட் என்பது ஒரு சிறிய புவியியல் பகுதியில் பல சமயத்தினரைக் கொண்ட ஒரு மாறுபட்ட ஆளுநரகமாகும். இந்த எண்ணிக்கை பெய்ரூத்தில் வாக்களிக்க தகுதியுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பைரூத்து_ஆளுநரகம்&oldid=3086647" இலிருந்து மீள்விக்கப்பட்டது