உள்ளடக்கத்துக்குச் செல்

பைராகிமடம் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பைராகிமடம் கோயில் (Bairagimadam Temple) என்பது இந்தியாவின் சென்னை நகரத்தில் உள்ள முத்தியால்பேட்டை, பாரியின் முனையின் (பழைய: ஜார்ஜ் டவுன்) அருகில் அமைந்துள்ள ஓர் இந்துக் கோயிலாகும் . இந்தக் கோவில்கள் 17 ஆம் நூற்றாண்டில், பெரி திம்மப்பாவின் மகன், கெட்டி நாராயணனால் கட்டப்பட்டது. இக்கோவிலில் வெங்கடேஸ்வரர் மூலவர் ஆவார். 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளின் பிரித்தானிய வரைபடங்களில் பைராகிமடம் கோவிலை "லோரெய்ன் பகோடா" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. லோரெய்ன் என்ற சொல் நாராயணன் என்பதன் சிதைவாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  • Muthiah, S. (2004). Madras Rediscovered. East West Books (Madras) Pvt Ltd. p. 329. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-88661-24-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைராகிமடம்_கோவில்&oldid=3925459" இலிருந்து மீள்விக்கப்பட்டது