பைத்தானிய மொழிகள்
| பைத்தானிய மொழிகள் Paitanic Languages | |
|---|---|
| புவியியல் பரம்பல்: |
சபா |
| மொழி வகைப்பாடு: | ஆசுத்திரோனீசியம் மலாய-பொலினீசியம் பெரும் வடக்கு போர்னியோ தென்மேற்கு சபா மொழிகள் பெரும் துசினியம் பைத்தானிய மொழிகள் Paitanic Languages |
| துணைப்பிரிவு: |
—
|
பைதானிய மொழிகள் (Paitanic Languages) என்பது மலேசியா, போர்னியோ தீவு, சபா மாநிலத்திலும் அதன் அண்டை பகுதிகளிலும் வாழும் பைதான் மக்களால் பழங்குடி மக்களால் பேசப்படும் ஒரு மொழிக்குடும்பம் ஆகும். இக்குடும்பத்தின் சில மொழிகள் லோபு (Lobu) என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றன
மலேசிய அரசாங்கத்தால் பூமிபுத்ராக்கள் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ள பைத்தான் மக்கள், சபா மாநிலத்தின் பித்தாசு மாவட்டம், பெலுரான் மாவட்டம், கினபத்தாங்கான் மாவட்டம், கோத்தா மருடு மாவட்டம்; மற்றும் சண்டக்கான் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் பரவலாக வாழ்கின்றனர்
மொழியியல் வகைப்பாடு
[தொகு]பைதானிய மொழிகள்; ஆசுத்திரோனீசிய மொழிக்குடும்பத்தின் கீழ் வகைப் படுத்தப்பட்டுள்ளன. பைதானிய மொழிகளின் முறையான மொழியியல் வகைப்பாடு; மற்றும் மரபு வழிமுறை பின்வருமாறு அமைகிறது:
- மொழிக் குடும்பம்: ஆஸ்திரோனீசிய மொழிகள் (Austronesian)
- துணைக் குடும்பம்: மலாய-பொலினீசிய மொழிகள் (Malayo-Polynesian)
- பிரிவு: வடக்கு போர்னியோ மொழிகள் (North Bornean)
- துணைப் பிரிவு: தென்மேற்கு சபா மொழிகள் (Southwest Sabahan)
- மொழிக் குழு: பெரும் துசுனிய மொழிகள் (Dusunic)
- மொழிகள்: பைத்தானிய மொழிகள் (Paitanic)
முதன்மை மொழிகள்
[தொகு]பைத்தானிய மொழிகள் குடும்பத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ள முக்கிய மொழிகள்:[1]
- தம்பானு மொழி: பித்தாசு மாவட்டம் மற்றும் லோபு-சுகுட் மாவட்டங்களில் வசிக்கும் தம்பானு மக்களால் பேசப்படும் மொழி.
- கினபத்தாங்கான் மொழி: மேல் கினபத்தாங்கான் பகுதிகளில் வாழும் மக்களால் பேசப்படும் மொழி.
- அபாய் சுங்கை மொழி: கிழக்கு சபாவின் ஆற்றங்கரைப் பகுதிகளில் பயன்பாட்டில் உள்ள மொழி.
- செருடுங் மொழி: செருடுங் ஆற்றை ஒட்டி வாழும் பழங்குடிகளால் பேசப்படும் மொழி.
தும்பாஸ் மொழியும் இக்குடும்பத்தைச் சேர்ந்ததாகக் கருதப்பட்டாலும், இது துசுனிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது என்றும்; பைத்தானிய மொழிகளின் ஆதிக்கம் இதில் அதிகம் உள்ளது என்றும் மொழியியலாளர் லோபல் (2013)[2] குறிப்பிடுகிறார்
லோபல் (2016) வகைப்பாடு
[தொகு]மொழியியலாளர் லோபல் (2016) தனது விரிவான கள ஆய்வின்படி, பைத்தானிய மொழிகள் குழுவின் கீழ் பின்வரும் ஐந்து கிளைமொழிகளை வகைப்படுத்துகிறார்:
- சுங்கை பெலுரான் (Sungai Beluran)
- லோபு தம்பியோஸ் (Lobu Tampios)
- லோபு லானாஸ் (Lobu Lanas)
- சுங்கை குவாமுத் (Sungai Kuamut)
- மூருட் செருடோங் (Murut Serudong)
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lobel, Jason William (2016). North Borneo Sourcebook: Vocabularies and Functors. University of Hawaii Press. ISBN 9780824857790.
- ↑ Lobel, Jason William (2013). Philippine and North Bornean languages: issues in description, subgrouping, and reconstruction (PhD dissertation) (PDF). Moana, Hawai'i: University of Hawai'i at Manoa. pp. 399–400.
- King, Julie K., and John Wayne King. 1984. Languages of Sabah: A survey report. C-78. Canberra: Pacific Linguistics, The Australian National University.
- Lobel, Jason William. 2016. North Borneo Sourcebook: Vocabularies and Functors. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780824857790
உசாத்துணைகள்
[தொகு]- Adelaar, K. Alexander; Himmelmann, Nikolaus, eds. (2005). The Austronesian Languages of Asia and Madagascar (in ஆங்கிலம்). Oxon, UK: Routledge.
- King, Julie K.; King, John Wayne, eds. (2015). Languages of Sabah: A Survey Report. Pacific Linguistics, Series C – No. 78 (in ஆங்கிலம்). Canberra: Research School of Pacific Studies, Australian National University. doi:10.15144/PL-C78.
- Lobel, Jason William (2013a). Philippine and North Bornean Languages: Issues in Description, Subgrouping, and Reconstruction (PDF) (Ph.D. dissertation) (in ஆங்கிலம்). University of Hawai'i at Manoa.
- Lobel, Jason William (2013b). "Southwest Sabah Revisited" (in en). Oceanic Linguistics 52 (1): 36–68. doi:10.1353/ol.2013.0013.