பைதரணி ஆறு

ஆள்கூறுகள்: 20°45′N 86°48′E / 20.750°N 86.800°E / 20.750; 86.800
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைதரணி ஆறு
River
நாடு இந்தியா
மாநிலம் ஒடிசா
உற்பத்தியாகும் இடம் குப்தகங்கா மலைகள்
கழிமுகம் வங்காள விரிகுடா
நீளம் 260 கிமீ (162 மைல்)
Discharge for வங்காள விரிகுடா
 - சராசரி [1]

பைதரணி ஆறு அல்லது வைதரணி ஆறு (Baitarani River or River Vaitarani (ஒடியா: ବୈତରଣୀ ନଦୀ, சமஸ்கிருதம்:वैतरणी नदी) இந்திய மாநிலமான ஒடிசாவின் ஆறு முக்கிய ஆறுகளில் ஒன்றாக உள்ளது.

பைதரணி ஆறு, ஒடிசாவின் கேந்துஜர் மாவட்டத்தின் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள குப்தகங்கா மலையில் 900 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகிறது. பைதரணி ஆறு ஜார்கண்ட் மற்றும் ஒடிசா மாநிலங்களின் எல்லையாக அமைந்துள்ளது. பைதரணி ஆறு 65 துணை ஆறுகள் கொண்டது.

பைதரணி ஆறு ஒடிசா மாநிலத்தின் எட்டு மாவட்டங்களின் வழியாக 260 கிலோ மீட்டர் தொலைவு வரை பாய்ந்து, இறுதியில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. பைதரணி ஆறும் அதன் துணை ஆறுகளும் ஒடிசாவின் 61,920 ஏக்கர் விளைநிலங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kumar, Rakesh; Singh, R.D.; Sharma, K.D. (2005-09-10). "Water Resources of India". Current Science (Bangalore: Current Science Association) 89 (5): 794–811. http://www.currentscience.ac.in/Downloads/article_id_089_05_0794_0811_0.pdf. பார்த்த நாள்: 2013-10-13. 
  2. "Baitarani River Basin Project". Archived from the original on 2007-10-09. பார்க்கப்பட்ட நாள் 2016-10-26.



"https://ta.wikipedia.org/w/index.php?title=பைதரணி_ஆறு&oldid=3679962" இலிருந்து மீள்விக்கப்பட்டது