பைடோலேக்கா டையேகா
பைடோலேக்கா டையேகா (Phytolacca dioica) என்பது அலங்காரத் தாவரங்கள் வகைப்பாட்டில் உள்ள ஒரு மரமாகும். இம்மரம் பொதுவாக ஸ்பானிஷ் மொழியில் ஓம்பு (ombú) என்றும், போர்த்துகீசிய மொழியில் உம்பு (umbu) என்றும் அழைக்கப்படுகிறது, இது தென் அமெரிக்காவின் பாம்பாஸைத் தாயகமாகக் கொண்ட போக்வீட் குடும்பத்தில் ஒரு பெரிய பசுமையான மரமாகும். இதன் குறிப்பிட்ட அடைமொழி குறிப்பிடுவது போல, இது தனித்தனி தாவரங்களில் ஆண் மற்றும் பெண் பூக்களுடன், ஈரகப் பாலினத் தாவரமாகக் காணப்படுகிறது.[1]
மரத்தின் அமைவு
[தொகு]இது மிகவும் பயனுள்ள அலங்காரத் தாவரங்களுள் ஒரு வகை மரம். இது ஆச்சரியப்படும்படி மிக வேகமாக வளர்ந்து நிழல் தருகிறது. இது 12 முதல் 15 மீட்டர் (40 முதல் 50 அடி) விட்டம் வரை பரவி, 12 முதல் 18 மீட்டர் (40 முதல் 60 அடி) உயரத்தை அடையக்கூடிய குடை போன்ற விதானத்தைக் கொண்டுள்ளது. இத்தாவரத்தின் மேற்புற வளர்ச்சியானது ஒரு கிழங்கு வகை மரத்தண்டிலிருந்து உருவாகிறது எவரெட்டின் கூற்றுப்படி, "அறுபது அடி (18 மீட்டர்) விட்டம் கொண்ட ஒரு வட்டத்தை ஆக்கிரமிக்கக்கூடும்" என்று அறியப்படுகிறது.[2] ,இம்மரம் எப்போதும் பசுமையாகவே உள்ளது. இம்மரத்தில் சிறிய வெள்ளைப் பூக்கள் மலர்கிறது. சிவந்த சதைப் பற்றுள்ள பழம் வருகிறது. இம்மரத்தின் அடிப்பகுதி விரைவில் பருத்து 6 அடி விட்டம் வரை உள்ளது. இதனுடைய வேர்கள் தரைக்கு மேல் மரத்தைச் சுற்றி அண்டைக் கொடுத்து இருக்கிறது. இதன் நடுவே மரம் நிற்கிறது. இவ்வேர்கள் இரண்டு அடி உயரத்திற்கு மரத்தைச் சுற்றி உள்ளது. இதில் பலர் உட்காரலாம். படுக்கலாம். அர்ஜன்டினாவில் இம்மரத்தின் அடியில் யாராவது படுத்திருந்தால் அது கெட்ட ஆவியாக இருக்கும் என நினைத்து பயப்படுவார்கள்.
காணப்படும் பகுதி
[தொகு]இந்த மரம் வட அமெரிக்க போக்வீட் போன்ற இனத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இனம் தெற்கு கலிபோர்னியாவிலும் நிழல் தரும் மரமாக பயிரிடப்படுகிறது. ஒம்பு தென்னாப்பிரிக்காவில் ஒரு சிறிய ஆக்கிரமிப்பு இனமாக (வகை 3) அறிவிக்கப்பட்டுள்ளது, அங்கு இத்தாவரம் பரவலாக நடப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Phytolacca dioica Tree Record". SelecTree. பார்க்கப்பட்ட நாள் 2021-05-28.
- ↑ Everett, Thomas H. (1968). Living Trees of the World. New York: Doubleday and Co. p. 144.
- ↑ Glen, Hugh & Van Wyk, Braam (2016) Guide to Trees introduced into South Africa. pp.232-233. Struik Nature, Cape Town