பைசல் பள்ளிவாசல்
பைசல் பள்ளிவாசல் (உருது: فیصل مسجد) என்பது பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு பள்ளிவாசல் ஆகும். இது இஸ்லாமாபாத்தில் உள்ள மார்கல்லா மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது, இந்த பள்ளிவாசல்ல் கற்காரை அடுக்களின் எட்டு பக்கங்களைக் கொண்ட ஒரு சமகால வடிவமைப்பைக் கொண்டுள்ளது மேலும் ஒரு பெடோயின் கூடார வடிவினால் ஈர்க்கப்பட்டு அதுபோல் அமைக்கப்பட்டுள்ளது.[1] இந்தப் பள்ளிவாசல் ஒரு முக்கிய சுற்றுலா இடமாகவும், இஸ்லாமிய கட்டிடக்கலையின் சமகால மற்றும் சிறப்புமிக்க அம்சமாக குறிப்பிடப்படுகிறது.[2][3]
1976 ஆம் ஆண்டில் சவூதி மன்னர் பைசல் வழங்கிய 120 மில்லியன் டாலர் நன்கொடையில் இப்பள்ளியின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன, அவரது பெயரே இப்பள்ளிக்கும் வழங்கப்பட்டுள்ளது. இப்பள்ளிக்கான வடிவமைப்பாக, துருக்கிய கட்டிடக் கலைஞர் வேதத் டலோக்கேயின் வழக்கத்திற்கு மாறான வடிவமைப்பு ஒரு பன்னாட்டு போட்டியின் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டது.[4] ஒரு வழக்கமான குவிமாடம் வடிவமைப்பு இல்லாமல், இப்பள்ளிவாசல் ஒரு பெடோயின் கூடாரம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது, அதைச் சுற்றி நான்கு 260 அடிகள் (79 m) உயரமான மினாராக்கள் உள்ளன. இந்த வடிவமைப்பில் ஓடு வடிவிலான எட்டு பக்கங்கள் கொண்ட சாய்வான கூரைகள், முக்கோண தொழுகை அரங்கின் மேல் அமைந்துள்ளன, இப்பள்ளிவாசலினுள் ஒரே நேரத்தில் 10,000 நபர்கள் தொழ முடியும்.[5]
இந்த ஒட்டுமொத்த கட்டமைப்பின் பரரப்பளவு 54,000 சதுர அடி ஆகும், இப்பள்ளிவாசல் இஸ்லாமாபாத்தின் நிலப்பரப்பில் முக்கியத்துவம் செலுத்துகிறது.[6]இமயமலையின் மேற்கு திசையில் உள்ள மார்கல்லா மலைகளின் அடிவாரத்தில், இஸ்லாமாபாத் நகரின் வடக்கு முனையிலுள்ள பைசல் நிழற்சாலையின் வடக்கு முனையில் அமைந்துள்ளது. இந்த உயர்ந்த நிலப்பரப்பின் பின்னணியில் அழகிய தேசிய பூங்கா அமைந்துள்ளது. பாக்கிஸ்தானின் மிகப்பெரிய பள்ளிவாசலான, பைசல் பள்ளி 1986 முதல் 1993 வரை உலகின் மிகப்பெரிய பள்ளிவாசலாக இருந்தது. இப்போது பைசல் பள்ளி தொழும் நபர்களின் எண்ணிக்கை அடிப்படையில் நான்காவது பெரிய பள்ளிவாசலாக உள்ளது.[7]
வரலாறு
[தொகு]இப்பள்ளிவாசல் கட்டுமானத்திற்கான உந்துதல், 1966 ஆம் ஆண்டில் கிங் பைசல் பின் அப்துல்-அஜீஸ் பாகிஸ்தானுக்கு அதிகாரப்பூர்வமாக வருகை தந்த போது, அவர் இஸ்லாமாபாத்தில் ஒரு தேசிய பள்ளிவாசலைக் கட்டுவதற்கான பாகிஸ்தான் அரசாங்கத்தின் முன்முயற்சியை ஆதரித்தபோது தொடங்கியது.
1969 ஆம் ஆண்டில், ஒரு பன்னாட்டுப் போட்டி நடத்தப்பட்டு அதிலிருந்து பள்ளிவாசலுக்கான வடிவமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது, இதில் 17 நாடுகளைச் சேர்ந்த கட்டடக் கலைஞர்கள் 43 கட்டிட வடிவமைப்புகளைச் சமர்ப்பித்தனர். இதில் வெற்றி பெற்ற கட்டிட வடிவமைப்பு துருக்கிய கட்டிடக் கலைஞர் வேதாத் டலோகே உடையதாகும்.[8] பள்ளிவாசலின் கட்டுமானம் 1976 ஆம் ஆண்டில் பாக்கிஸ்தானின் தேசிய கட்டுமான நிறுவனத்தால் அசிம் கான் தலைமையில் தொடங்கப்பட்டது. இக்கட்டுமானத்திற்கான நிதி சவுதி அரேபியா அரசாங்கத்தால் அளிக்கப்பட்டது. (130 மில்லியனுக்கும் அதிகமான சவூதி ரியால்கள் இன்றைய மதிப்பில் சுமார் 120 மில்லியன் அமெரிக்க டாலர்கள்). கிங் பைசல் பின் அப்துல் அஜீஸ் இந்த நிதியுதவி அளிப்பில் முக்கிய பங்கு வகித்தார், எனவே 1975 ஆம் ஆண்டில் அவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர் பள்ளிவாசல் மற்றும் அதற்கு செல்லும் சாலை ஆகிய இரண்டுக்கும் அவரது பெயர் வைக்கப்பட்டது. 1986 இல் கட்டி முடிக்கப்பட்ட இப்பள்ளிவாசலில், பன்னாட்டு இசுலாமிய பல்கலைக் கழகமும் முன்பு அமைந்திருந்தது. ஆரம்ப கட்டத்தில் பாரம்பரிய இசுலாமிய கட்டிடக் கலையான குவிமாட வடிவமைப்பு இன்றி அமைக்கப்பட்ட இப்பள்ளிவாசலின் கட்டமைப்பு பல முசுலிம்களால் விமர்சனத்திற்கு உள்ளானது.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Three Pakistani mosques make it to 'world's most beautiful mosques' list – The Express Tribune" (in en-US). The Express Tribune. 3 August 2015. http://tribune.com.pk/story/931369/three-pakistani-mosques-make-it-to-worlds-most-beautiful-mosques-list/.
- ↑ "King of All Mosques – Faisal Mosque" (in en-US). HOPES. 6 November 2015. http://www.houseofpakistan.com/king-of-all-mosques-faisal-mosque/.
- ↑ "Faisal Mosque attracts visitors from all over country". www.thenews.com.pk. பார்க்கப்பட்ட நாள் 2016-11-17.
- ↑ Mass, Leslie Noyes (2011). Back to Pakistan: A Fifty-Year Journey. Rowman & Littlefield. p. 157. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4422-1319-7.
- ↑ "Faisal Mosque – Islamabad, Pakistan". www.sacred-destinations.com. பார்க்கப்பட்ட நாள் 2016-11-17.
- ↑ "Faisal Mosque". Atlas Obscura. பார்க்கப்பட்ட நாள் 2016-11-17.
- ↑ Planet, Lonely. "Shah Faisal Mosque in Islamabad & Rawalpindi". Lonely Planet. https://www.lonelyplanet.com/pakistan/islamabad-rawalpindi/attractions/shah-faisal-mosque/a/poi-sig/464356/357196.
- ↑ Rengel, Marian (2004). Pakistan: A Primary Source Cultural Guide. Rosen. p. 71. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8239-4001-1.
- ↑ "Construction of Faisal Mosque begin in 1976". www.slideshare.net. பார்க்கப்பட்ட நாள் 2018-06-04.