உள்ளடக்கத்துக்குச் செல்

பைசரன் பள்ளத்தாக்கு

ஆள்கூறுகள்: 34°0′11″N 75°20′2″E / 34.00306°N 75.33389°E / 34.00306; 75.33389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைசரன் பள்ளத்தாக்கு
பைசரன் புல்வெளி
பைசரன் பள்ளத்தாக்கு
ஆள்கூறுகள்34°0′11″N 75°20′2″E / 34.00306°N 75.33389°E / 34.00306; 75.33389

பைசரன் பள்ளத்தாக்கு (Baisaran Valley), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் அனந்தநாக் மாவட்டத்திலுள்ள, பகல்காம் நகரத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் புல்வெளிகளும், தேவதாரு மரங்களும், பனிமூடிய மலைகளும் கொண்ட இயற்கை அழகு மிக்க சுற்றுலாத் தலமாகும். இமயமலையின் ஒரு மலைத்தொடரான பீர் பாஞ்சால் மலைத்தொடரில் 7851 அடி உயரத்தில் பைசரண் பள்ளத்தாக்கு அமைந்துள்ளத[1].இதனருகில் லித்தர் பள்ளத்தாக்கு[2] மற்றும் லித்தர் ஆறு பாய்கிறது.

அமைவிடம்

[தொகு]

பைசரண் பள்ளத்தாக்கு பகல்காமிற்கு 5 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத் தலைமையிடமான அனந்தநாக் நகரத்திற்கு வடக்கே 46.9 கிலோமீட்டர் தொலைவிலும், ஜம்மு காஷ்மீர் ஒன்றியத் தலைமையிடமான சிறீநகருக்கு தென்கிழக்கே 94.கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

சுற்றுலா

[தொகு]
பைசரண் புல்வெளிகள்
  • இயற்கை அழகு: மிக்க பைசரன் பள்ளத்தாக்கு என்பது பச்சை புல்வெளியாகும். இது பசுமையான மேய்ச்சல் நிலங்கள், காட்டுப்பூக்கள் மற்றும் அமைதியான சூழலைக் கொண்டுள்ளது. இவ்விடம் இயற்கை ஆர்வலர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் அமைதியை நாடுபவர்களுக்கு ஏற்றதாக உள்ளது.. நிலப்பரப்பு தெளிவான நீல வானம் மற்றும் உயர்ந்த மலைகளுடன் சுவிட்சர்லாந்து புல்வெளிகளை ஒத்துள்ளது.
  • பகல்காம் நகரத்திலிருந்து இவ்விடத்திற்குச் செல்ல சாலை வசதிகள் இல்லாததால் மட்டக்குதிரைகள் மீது ஏறி இவ்விடத்தை அடையலாம்.
  • பைசரண் பள்ளத்தாக்கு பகல்நேர சுற்றுலாவிற்கு ஏற்றது. தேநீர் மற்றும் சிற்றுண்டிகளை வழங்கும் சிறிய கடைகள் உள்ளது.

பார்வையிட சிறந்த நேரம்

[தொகு]

ஏப்ரல்-சூன் மாதங்கள் பைசரண் பள்ளத்தாக்கை பார்வையிட உகந்த காலம் ஆகும். இக்காலம் பசுமைப் புல்வெளிகள், காட்டுப்பூக்கள் மற்றும் இனிமையான வானிலைக்கு சிறந்தது. மலையேற்றம் மற்றும் குதிரை சவாரிக்கு ஏற்றது.

2025 தீவிரவாத தாக்குதல்கள்

[தொகு]

22 ஏப்ரல் 2025 அன்று பைசரண் பள்ளத்தாக்கை காண வந்த இந்து சமயச் சுற்றுலாப் பயணிகளில் 26 பேர், பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-ஏ-தொய்பாவின் கிளை அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் துப்பாக்கிக் குண்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.[3][4][5]மேலும் 24 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு அகில இந்திய இமாம்கள் அமைப்பின் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.[6]

தாக்குதலுக்கு எதிர்விளைவுகள்

[தொகு]

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாதத்தை ஒடுக்க இந்திய அரசின் அமைச்சரவையில் 23 ஏப்ரல் 2025 அன்று எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, கீழ்கண்ட நடவடிக்கைகள் இந்திய அரசு எடுத்தது.

  • இந்திய-பாகிஸ்தான் இடையே ஏற்கனவே இருந்த சிந்து நீர் ஒப்பந்தத்தை தற்காலிக நிறுத்தப்பட்டது.[7]
  • இந்திய-பாகிஸ்தான் எல்லையில் உள்ள வாகா எல்லைச் சாவடி உடனடியாக மூடப்பட்டது.[8]
  • சுற்றுலா, மருத்துவம் மற்றும் பணி நிமித்தமாக இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் ஏப்ரல் 2025 தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்.[9]
  • பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை 30 ஆக குறைக்கப்படும். அதே போன்று இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளில் எண்ணிக்கை குறைக்கப்படும்.
  • இனிமேல் பாகிஸ்தானியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு விசா வழங்கப்படாது.

விமர்சனங்கள்

[தொகு]

2025 பகல்காம் தாக்குதலுக்கு இந்திய அரசே காரணம் என்றும் மற்றும் பாகிஸ்தானை ஆதரித்தும் பேசிய அசாம் சட்டப் பேரவை உறுப்பினர் அமீனுல் இஸ்லாமை தேச விரோதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 25 ஏப்ரல் 2025 அன்று சிறையில் அடைக்கப்பட்டார்.[10][11][12][13]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Baisaran Valley
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. பைசரன் பள்ளத்தாக்கு
  2. "Baisaran timesofindia".
  3. தாக்குதல்; பலியான 26 பேரின் பெயர்கள், ஊர் முழு பட்டியல்
  4. Mass killing of tourists near Pahalgam
  5. More than 20 killed after gunmen open fire on tourists in Indian-administered Kashmir
  6. பஹல்காம் தாக்குதலுக்கு அகில இந்திய இமாம் கூட்டமைப்பு கண்டனம்
  7. சிந்துநதி நீர் ஒப்பந்தத்தை சஸ்பெண்ட் செய்தது இந்தியா; பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி
  8. அட்டாஅரி-வாகா எல்லை மூடல்; மத்திய அரசு அதிரடி உத்தரவு
  9. Govt suspends Indus treaty, expels Pak advisors, cancels visas, closes Attari
  10. பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய அசாம் எம்.எல்.ஏ. கைது!
  11. பஹல்காம்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய அஸ்ஸாம் எம்எல்ஏ கைது! !
  12. Held for ‘sedition’ over Pahalgam remarks, Assam MLA in eye of many a storm: Who is Aminul Islam? !
  13. Assam: AIUDF MLA Aminul Islam arrested for supporting Pakistan after Pahalgam terror attack!
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைசரன்_பள்ளத்தாக்கு&oldid=4262511" இலிருந்து மீள்விக்கப்பட்டது