உள்ளடக்கத்துக்குச் செல்

பைசன் காளமாடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைசன் காளமாடன்
திரைப்பட பதாகை
இயக்கம்மாரி செல்வராஜ்
தயாரிப்புசமீர் நாயர்
தீபக்
பா. ரஞ்சித்
அதிதி ஆனந்த்
கதைமாரி செல்வராஜ்
இசைநிவாஸ் கே. பிரசன்னா
நடிப்புதுருவ் விக்ரம்
ஒளிப்பதிவுஎழில் அரசு கே.
படத்தொகுப்புசக்தி திரு
கலையகம்அப்பளாஸ் என்டெர்டெயின்மென்ட்
நீளம் ஸ்டூடியோஸ்
விநியோகம்ஃவை ஸ்டார் கிரியேசன்ஸ்
வெளியீடு17 அக்டோபர் 2025 (2025-10-17)
ஓட்டம்168 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பைசன் காளமாடன் (Bison Kaalamaadan) என்பது மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த ஒரு விளையாட்டுத் திரைப்படமாகும். இதில் துருவ் விக்ரம், பசுபதி, அமீர் முதலியோர் நடித்துள்ளனர். இப்படம் 17 அக்டோபர் 2025ஆம் ஆண்டு தீபாவளி வாரத்தில் வெளிவந்தது. இப்படம் அர்ஜுனா விருது பெற்ற முன்னாள் கபடி வீரரான மணத்தி கணேசன் அவர்களின் வாழ்க்கையையும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தென் தமிழ்நாட்டின் பல இளைஞர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளையும் உள்ளடக்கிய புனைவு ஆகும்.[2]

நடிகர்கள்

[தொகு]

இசை

[தொகு]
பைசன் காளமாடன்
பாடல்
இசைப் பாணிஒலிச்சுவடு
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்திங்க் மியூசிக்
இசைத் தயாரிப்பாளர்நிவாஸ் கே. பிரசன்னா
நிவாஸ் கே. பிரசன்னா காலவரிசை
பன் பட்டர் ஜாம்
(2025)
பைசன் காளமாடன்
(2025)
பைசன்-இலிருந்து தனிப்பாடல்
  1. "தீக்கொளுத்தி"
    வெளியீடு: 1 செப்டம்பர் 2025
  2. "இரெக்க இரெக்க"
    வெளியீடு: 16 செப்டம்பர் 2025
  3. "சீனீ கள்ளு"
    வெளியீடு: 23 செப்டம்பர் 2025
  4. "தென்னாடு"
    வெளியீடு: 2 அக்டோபர் 2025
பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "தீக்கொளுத்தி"  நிவாஸ் கே. பிரசன்னா  
2. "இரெக்க இரெக்க"  அறிவு, வேடன்  
3. "சீனிகள்ளு"  சின்மயி, விஜய் யேசுதாஸ்  
4. "தென்னாடு"  சத்தியன் மகாலிங்கம்  
5. "காளமாடன் கானம்"  வி. எம். மகாலிங்கம்  

தயாரிப்பு

[தொகு]

இப்படத்திதைப் பற்றிய அறிவிப்பு 2020இல் வெளிவந்தது.[3] மே 2024இல் இருந்து முக்கிய படப்பிடிப்பு தொடங்கியது.[4] படப்பிடிப்பு பெப்ரவரி 2025இல் முடிவு பெற்றது. இப்படத்தில் ஏற்ற கதாபாத்திரத்தை நம்ப வைக்கும் அளவுக்கு நடிக்க வேண்டும் என்பதால், மிதிவண்டி ஓட்டவும், நீருக்குள் இறங்கி நத்தையைப் பிடிக்கவும், இறைச்சியை வெட்டவும் ரஜிஷா பயிற்சி எடுத்துக்கொண்டார். கிணற்றில் விழும் காட்சியில், கிணற்றில் விழுந்து நீந்த முடியாமல் மூழ்கியபொழுது ரஜிஷா காப்பாற்றப்பட்டார்.[5] இப்படத்தில் கபடி விளையாட்டு வீரராக நடிக்க துருவ், 1995இல் அர்ஜுனா விருது பெற்ற மணத்தி கணேசனிடம் இரண்டு வருடங்கள் கபடி பயிற்சி பெற்றுள்ளார்.[6]

விமர்சனங்கள்

[தொகு]

இந்து தமிழ் திசை வலைத்தளத்தில் வந்த விமர்சனத்தில் "அறிவியல், தொழில்நுட்பம் முன்னேறிய ஏஐ காலத்திலும் கூட சாதிய ஒடுக்குமுறைகளும் ஆணவக் கொலைகளும் மலிந்து கிடக்கும் சூழலில் ‘பைசன் - காளமாடன்’ போன்ற படங்கள்தான் அதிகம் தேவை" என்று எழுதியுள்ளனர்.[7]

தினமணி வலைத்தளத்தில் வந்த விமர்சனத்தில் "காதல், குடும்பம் என சில வாழ்க்கைக் கடமைகள் இருந்தாலும் சாதியும் பகையும் நிறைந்த ஊரிலிருந்து பல தடைகளைத் தாண்டி எப்படி ஒருவன் திமிறி எழுகிறான் என்கிற கதையில் இன்று தென்மாவட்டங்களில் நடக்கும் சாதியக் கொடூரங்களையும் அதன் பின் செல்பவர்களையும் ஒரு நிமிடம் யோசிக்க வைக்கும் படமாகவே பைசன் திரைக்கு வந்திருப்பதுடன் இந்த ஆண்டின் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று..." என்று எழுதி மதிப்பீடுகளை வழங்கியுள்ளனர்.[8]

வெளியீடு

[தொகு]

இணையவெளியீடு

[தொகு]

இப்படத்தின் இணைய உரிமையை நெற்ஃபிளிக்சு பெற்றுள்ளது.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bison Kaalamaadan". Central Board of Film Certification. Archived from the original on 11 October 2025. Retrieved 11 October 2025.
  2. தாரா, ராகேஷ் (2025-10-08). "Bison : துருவ் விக்ரமுக்கு கபடி பயிற்சி அளித்த அனுபவத்தை பகிர்ந்த மணத்தி கணேசன்". ABP Nadu. Retrieved 2025-10-22.
  3. "Mari Selvaraj to direct Dhruv Vikram next?". The Times of India. 4 March 2020 இம் மூலத்தில் இருந்து 12 March 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240312140242/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/mari-selvaraj-to-direct-dhruv-vikram-next/articleshow/74470454.cms. 
  4. "Mari Selvaraj finally begins his film with Dhruv Vikram & Anupama Parameswaran". The Times of India. 12 March 2024 இம் மூலத்தில் இருந்து 13 March 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240313110139/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/mari-selvaraj-finally-begins-his-film-with-dhruv-vikram-anupama-parameswaran/articleshow/108426563.cms. 
  5. "வாழ்க்கை முடிந்து போனதாகக் கருதினேன்: ரஜிஷா விஜயன் , திரைச்செய்தி செய்திகள் - தமிழ் முரசு Cinema News in Tamil, Tamil Murasu". Tamil Murasu. 2025-10-16. Retrieved 2025-10-22.
  6. "தி ரியல் பைசன்! யார் இந்த மணத்தி கணேசன்? இவரைப்பற்றி கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க." Zee Hindustan Tamil. 2025-10-17. Retrieved 2025-10-22.
  7. டெக்ஸ்டர் (2025-10-18). "'பைசன் காளமாடன்' விமர்சனம்: மாரி செல்வராஜின் மற்றொரு அழுத்தமான படைப்பு!". இந்து தமிழ் திசை. Retrieved 2025-10-18.
  8. சிவசங்கர் (2025-10-17). "காளமாடனும் சாதிக் கலவரங்களும்... பைசன் - திரை விமர்சனம்". Dinamani. Retrieved 2025-10-18.
  9. Ganesh. "மாரி செல்வராஜ் படத்துக்கு இம்புட்டு டிமாண்டா? ரிலீஸுக்கு முன்பே கல்லாகட்டும் பைசன் காளமாடன்!". Asianet News Tamil. Retrieved 2025-10-22.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைசன்_காளமாடன்&oldid=4390430" இலிருந்து மீள்விக்கப்பட்டது