உள்ளடக்கத்துக்குச் செல்

பைகிரேவ் நழுவு அளவுகோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைகிரேவ் வான் அமைச்சகத்தின் ஆய்வக நிலைக்கோடு நழுவு-அளவுகோல்

பைகிரேவ் நழுவு அளவுகோல் (Bygrave slide rule) என்பது விமான வழிசெலுத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட ஒரு சிறப்பு கணக்கீட்டு கருவியாகும். பிரிட்டிசு விமானப்படை அதிகாரியான இலியானார்டு சார்லசு பைகிரேவ் உருவாக்கினார். எனவே அவரது பெயரே இந்த நழுவு அளவுகோலுக்கு சூட்டப்பட்டது. அதிகாரப்பூர்வமாக இது வான் அமைச்சகத்தின் ஆய்வக நிலைக்கோடு நழுவு-அளவுகோல் என்று அழைக்கப்பட்டது.[1]

1920 ஆம் ஆண்டில் இலண்டனில் உள்ள கென்சிங்டனில் உள்ள விமான அமைச்சக ஆய்வகங்களில் பைகிரேவ் நழுவு அளவுகோ உருவாக்கப்பட்டது. 1930 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதி வரை இலண்டனின் என்றி இயூசு & சன் லிமிடெடு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இது வான முக்கோணம் என்று அழைக்கப்படுவதைத் துல்லியமாக சுமார் ஒரு நிமிட வில் அளவிற்குத் தீர்த்தது மற்றும் வான்வழி வழிசெலுத்தலுக்குப் போதுமான வேகத்தில் தீர்த்தது. வான முக்கோணத்தின் தீர்வு, சதுர-கோண கோள முக்கோணங்களைத் தீர்ப்பதற்கான இயான் நேப்பியர் விதிகளைப் பயன்படுத்தியது. இந்த நழுவு அளவுகோல், ஃபுல்லரின் உருளை நழுவு அளவுகோல் போலவே, சுழல் அளவுகோல்களுடன் இரண்டு ஒருமித்த அச்சுக் குழாய்களாகக் கட்டப்பட்டது. மேலும் நிலை காட்டிகளைக் கொண்ட மற்றொரு குழாய் வெளிப்புறத்தில் இருந்தது.[1] வானியல் வழிசெலுத்தலில் நட்சத்திரங்கள், சூரியன் போன்ற விண்பொருட்களின் நிலைகளைப் பயன்படுத்தி விமானத்தின் இருப்பிடத்தை கணக்கிட இது உதவியது.


இரண்டாம் உலகப் போரின்போது, ​​செருமனியில் தென்னர்ட்டு & பேப் நிறுவனத்தால் எச்.ஆர்.ஐ, எம்.எச்.ஆர்.ஐ மற்றும் எச்.ஆர்2 ஆகிய பெயர்களில் இதனுடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு வடிவம் தயாரிக்கப்பட்டது.

முக்கிய அம்சங்கள்

[தொகு]
  • இது ஓர் உருளை வடிவ நழுவு அளவுகோல் ஆகும்.
  • ஒன்றுக்குள் ஒன்று அமைந்த குழாய்கள் மற்றும் சுழல் அளவுகோல்கள் கொண்டது.
  • வானியல் கணிதத்தில் வரும் வான் முக்கோணப் பிரச்சினைகளை விரைவாகத் தீர்க்க வடிவமைக்கப்பட்டது.
  • சுமார் ஒரு வில் நிமிடம் அளவிற்கு துல்லியமான முடிவுகளை வழங்கியது.

பயன்பாடு

[தொகு]

நவீன மற்றும் மின்னணு கணினிகள் வருவதற்கு முன்பு, நீண்ட தூர விமானப் பயணங்களில் விமானிகள் மற்றும் வழிசெலுத்துநர்கள் இந்த கருவியைப் பயன்படுத்தினர். இது விண்மீன் கண்காணிப்புகளை அடிப்படையாகக் கொண்டு விமானத்தின் நிலையை கணக்கிட உதவியது.

புகழ்பெற்ற பயனர்கள்

[தொகு]

சர் பிரான்சிசு சிசெசுட்டர் ஒரு புகழ்பெற்ற விமானி மற்றும் படகோட்டி ஆவார். 1930 ஆம் ஆண்டுகளில் விமானப் பயணங்களின் போது வழிசெலுத்தலுக்கு உதவியாக அவர் பைக்கிரேவ் நழுவு அளவுகோலைப் பயன்படுத்தினார். அவற்றில் ஒன்று சிப்சி மோத் பைபிளேன் விமானத்தில் நியூசிலாந்திலிருந்து ஆத்திரேலியாவிற்கு மேற்கொண்ட முதல் தனிப் பயணமாகும். பின்னர் அவர் தனது சிப்சி மோத் IV என்ற படகில் உலகைச் சுற்றி ஒரு பயணத்தை முடித்தார். கிளிப்பர் வழித்தடத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட முதல் தனி உலகச் சுற்றுப்பயணம் இதுவாகும். சர் பிரான்சிசு சிசெசுட்டர் இந்த சாதனைகளைப் பற்றி 'தி லோன்லி சீ அண்ட் தி சிகை' என்ற தனது சுயசரிதையில் எழுதியுள்ளார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "Position Line Slide Rules" (PDF).
  2. Chichester (2006). The Lonely Sea and the Sky. Summersdale Publishers.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைகிரேவ்_நழுவு_அளவுகோல்&oldid=4562293" இலிருந்து மீள்விக்கப்பட்டது