பைகா அரண்மனை
பைகா அரண்மனை | |
---|---|
சொற்பிறப்பியல் | பைகா குடும்பம் |
பொதுவான தகவல்கள் | |
முகவரி | பேகம்பேட்டை, ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா |
தற்போதைய குடியிருப்பாளர் | அமெரிக்கத் துணைத் தூதரகம், ஐதராபாத்து |
நிறைவுற்றது | 1900 |
பைகா அரண்மனை (Paigah Palace) என்பது ஐதராபாத் இராச்சியத்தின் முதன்மை அமைச்சராக 1893 முதல் 1901 வரை பணியாற்றிய விகார்-உல்-உம்ரா என்பரால் கட்டப்பட்டது. பேகம்பேட்டையிலுள்ள இந்த அரண்மனையின் ஒரு பகுதி அமெரிக்க துணைத் தூதரகத்தை கொண்டுள்ளது.
பைகா குடும்பம்
[தொகு]ஐதராபாத்து பிரபுக்களின் படிநிலையில், பைகா குடும்பம் நிசாம்களின் ஆளும் குடும்பத்திற்கு அடுத்த இடத்தில் இருந்தது. ஐதராபாத்தில் தங்களுக்கென அரண்மனையைக் கட்டுவதில் பைகாக்களும் முன்னணியில் இருந்தனர். விகார்-உல்-உம்ரா பைகா அரண்மனையை தனக்காகக் கட்டினார். அதில் உள்ள ஜெனானா மகால் நியோ கோதிக், இந்தோ சரசனிக் பாணி மற்றும் முகலாயக் கட்டிடக்கலை ஆகியவற்றின் கலவையுடன் கட்டப்பட்டது. அதன் ஒரு பகுதி இவரது சந்ததியினரால் வசிக்கப்படுகிறது. [1] விகார்-உல்-உம்ரா 1893இல் பாலாக்ணுமா அரண்மனையை கட்டினார். பின்னர் நிசாம் மஹ்புப் அலிகான் இந்த அரண்மனையை வாங்கினார்.[2] 1900 ஆம் ஆண்டில், ஐதராபாத் மாநிலத்தில் ஏராளமான நினைவுச்சின்னங்கள், பொது கட்டிடங்கள், அணைகள், நீர் தேக்கங்கள், செயற்கை ஏரிகள் மற்றும் சுமார் 21 அரண்மனைகள் மற்றும் மாளிகைகளை இவர் கட்டினார். [3]
பைகா அரண்மனையில் தற்போது அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் அலுவலகம் இருக்கிறது. இதற்கு முன்னர் ஐதராபாத் நகர்ப்பும் இயங்கி வந்தது. சர் விகார் உல் உம்ராவின் மூத்த பேரனும், அமீர் இ பைகா நவாப் சுல்தான் உல் முல்கின் மகனுமான நவாப் அபுல் பத்தா கான் பகதூர் இந்த அரண்மனையில் தங்கியிருந்த பைகா குடும்பத்தின் கடைசி உறுப்பினராவார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Saumya, Kota (11 November 2017). "A palace straight out of a storybook". Telangana Today. பார்க்கப்பட்ட நாள் 31 March 2019.
- ↑ Telangana Today, SundayScape-Telangana Diaries (12 November 2017). "A palace straight out of a storybook". Kota Saumya இம் மூலத்தில் இருந்து 1 May 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190501170222/https://telanganatoday.com/palace-straight-storybook. பார்த்த நாள்: 1 May 2019.
- ↑ "Palace with a view". தி இந்து. 24 March 2004. பார்க்கப்பட்ட நாள் 31 March 2019.