பே. தர்மலிங்கம்
Appearance
பே. தர்மலிங்கம் | |
---|---|
பாளையங்கோட்டை தொகுதியின் தமிழக சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1991–1996 | |
முன்னையவர் | சு. குருநாதன் |
பின்னவர் | முகமது கோதர் மைதீன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | அதிமுக |
சமயம் | இந்து |
பே. தர்மலிங்கம் (P. Dharamalingam)(பிறப்பு 25 மே 1950) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மேலச்செவல் பகுதியினைச் சேர்ந்தவர். விவசாயத் தொழில்புரிந்து வரும் தர்மலிங்கம் இளம் வணிகவியல் பட்டதாரி ஆவார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1991ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தேர்தல் முடிவுகள்
[தொகு]தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: பாளையங்கோட்டை[1]
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அதிமுக | பே. தர்மலிங்கம் | 45,141 | 46.11 | +29.19 | |
தாயக மறுமலர்ச்சி கழகம் | வி. கருப்பசாமி பாண்டியன் | 38,250 | 39.07 | புதியவர் | |
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் | எல். கே. எசு. முகமது மீரான் மைதீன் | 12,429 | 12.69 | +19.26 | |
வெற்றியின் விளிம்பு | 6,891 | 7.04 | 4.58 | ||
பதிவான வாக்குகள் | 97,909 | 59.29 | -7.42 | ||
செல்லாத வாக்குகள் | |||||
மொத்த வாக்காளர்கள் | 1,69,762 | ||||
அதிமுக திமுகவிடமிருந்து கைப்பற்றியது | மாற்றம் | 11.70 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.