பேஸர் ப்ளூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்ல் பேஸர் மில்க் சாக்லேட்
Karl Fazer Milk Chocolate
ஃபஸர் ப்ளூவின் 200 கிராம் வில்லை
மாற்றுப் பெயர்கள்பேஸர் ப்ளூ
வகைசாக்லேட்
தொடங்கிய இடம்பின்லாந்து
ஆக்கியோன்கார்ல் பேஸர்
கண்டுபிடிப்பு1922
வேறுபாடுகள்படவில்கள்: சாக்லேட் அடுக்குகள், பார்கள் மற்றும் தனிப்பட்ட துண்டுகள்
சுவைகள்: புளுபெர்ரி தயிர், குக்கீ, குருதிநெல்லி, மிளகாய், ஹஜல்நட், ஹஜல்நாட்-ரைசிங், லிட்டில்ஸ், பாப்கார்ன், ராஸ்பெர்ரி தயிர், சிவப்பு பெர்ரி, உப்பு செய்யப்பட்ட கேரமல், ஸ்ட்ராபெரி-வெண்ணிலா, டோஃபிட்டி

கார்ல் பேஸர் மில்க் சாக்லேட் (Karl Fazer Milk Chocolate) பொதுவாக ஃபேசர் ப்ளூ (பின்னியம்; Fazerin Sininen) என அழைக்கப்படுவது,   ஃபேசர் கார்பரேஷனின் நிறுவனத்துக்கு சொந்தமான பால் சாக்லேட் வகை ஆகும். .[1][2] இது பின்லாந்து நாட்டினைச் சார்ந்த முக்கிய நிறுவனமான பேஸர் குழுமத்தின் வணிகக் குறியீடான நீலவண்ண காகித உறையில் இடப்பட்டு வருகிறது.[3]

பின்லாந்து நாட்டில் அதிகம் விற்பனையாகும் தின்பண்ட வகையாக பேஸர் ப்ளூ அறியப்படுகிறது. வழக்கமாக அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் இருக்கும் தின்பண்ட வகையான இது பின்லாந்து மக்களால் அதிகம் நேசிக்கப்படுகிறது. குறிப்பாக மார்க்கினோய்ன்டி மற்றும் மைனோன்ட்டா, தேர்வு அமைப்பான தலௌஸ்டுடிகிமஸ் ஒய் ஆல் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் அதிகம் தேர்வு செய்யப்படும் பண்டமாகவும் திகழ்கிறது.[4]

இவ்வின்னட்டு பின்லாந்து நாட்டின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது. [1] தூய பாலாலைக் கொண்டு இந்த வகையானது செய்யப்படுகிறது, பால் மாவு மற்றும் நீர் நிறைந்த பால் கொண்டு தயார் செய்யப்படும் பிற இன்னட்டு தயாரிப்பிலிருந்து இது மாறுபட்டது ஆகும். மற்ற இன்னட்டுகளுடன் ஒப்பிடும் போது இது அதிக அளவு பால் அடர்த்தியை கொண்டுள்ளது. [1]

இவ்வின்னட்டானது வேறுபட்ட அளவுகள் மற்றும் விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இது 200 கிராம் அளவுள்ள வில்லைகளாகவுள்ள திண்பண்ட வகையாக வெளிவருகிறது.

வரலாறு[தொகு]

இவ்வின்னட்டு வகையானது 1922 ஆம் ஆண்டு சந்தைக்கு கொண்டு வரப்பட்டது. பேஸர் குழுமத்தின் கூற்றுப்படி இதன் செய்முறையானது பேஸர் குடும்பத்துக்கு ஒரு ஆங்கிலேயரால் வழங்கப்பட்ட கொடையாகும்.[2] இதன் செய்முறை இது நாள் வரை மாறாமல் உள்ளது.

2001 ல் பேஸர் நீல வண்ணம் பேன்டன் சி 280      பின்லாந்தின் முக்கிய வணிக முத்திரையாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Fazerin Sininen". Nordic Recipe Archive. Archived from the original on 15 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 14 November 2016.
  2. 2.0 2.1 "A recipe for something good". Fazer. Oy Karl Fazer Ab. Archived from the original on 14 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 14 November 2016.
  3. 3.0 3.1 Nikkanen, Kastehelmi (20 December 2011). "Tavaramerkkien suojaa Suomessa 120 vuotta (4.6.-15.12.2009)". Patentti- ja rekisterihallitus (in Finnish). Archived from the original on 13 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 14 November 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)
  4. "Fazerin Sininen jatkaa yhä kärjessä - Tässä ovat Suomen arvostetuimmat brändit". Markkinointi & Mainonta (in Finnish). Talentum Oyj. 20 December 2011. பார்க்கப்பட்ட நாள் 14 November 2016.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேஸர்_ப்ளூ&oldid=3833996" இலிருந்து மீள்விக்கப்பட்டது