பேர்கோஸ் பெருங்கோவில்
பெர்கோசின் புனித மரியா பெருங்கோவில் Cathedral of Saint Mary of Burgos Catedral de Santa María de Burgos | |
---|---|
கோதிக்கலையில் அமைந்த பேர்கோஸ் பெருங்கோவில் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | பேர்கோஸ், காஸ்டிலி மற்றும் லியோன், எசுப்பானியா |
புவியியல் ஆள்கூறுகள் | 42°20′26.9″N 3°42′16.1″W / 42.340806°N 3.704472°W |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | 1260 |
நிலை | பெருங்கோவில் |
பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டது | 1885, 1984 |
இணையத் தளம் | www |
Official name: பேர்கோஸ் பெருங்கோவில் | |
வகை: | கலாசார |
வரையறைகள்: | ii, iv, vi |
கொடுக்கப்பட்ட நாள்: | 1984 (8ஆவது உலக பாரம்பரியக் குழு) |
மேற்கோள் எண். | 316 |
State Party: | எசுப்பானியா |
Region: | வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா |
பேர்கோஸ் பெருங்கோவில் (எசுப்பானியம்: Catedral de Burgos) என்பது கோதிக் கட்டடக்கலையில் அமைந்த கத்தோலிக்க பெருங்கோவிலாகும். இது எசுப்பானியாவின் பேர்கோசில் அமைந்துள்ளது. இது மரியாவின் பெயரில் அமைந்துள்ளது. இப்பெருங்கோயில் இதன் மிகப்பெரிய அளவிற்காகவும் தனித்துவமான கட்டடக்கலைக்காகவும் புகழ் பெற்றது. இந்தப் பெருங்கோவிலின் கட்டுமானப்பணி 1221இல் ஆரம்பமானது. இது கட்டி முடிக்கப்பட்ட பின் ஒன்பது வருடங்களுக்கு தேவாலயமாக பயன்பட்டது. ஆனால் இதன் பணிகள் அடிக்கடி தடைப்பட்டு 1567 வரை செயற்பட்டது.இது ஆரம்பத்தில் கோதிக் கட்டடக்கலை வடிவத்த்திலேயே கட்டத்தொடங்கப்பட்டாலும் இடையே வேறு கட்டடக்கலையைச் சார்ந்த வேலைப்பாடுகளும் 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் இணைக்கப்பட்டது.[1]
இந்தப் பெருங்கோவில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலகப் பாரம்பரியக் களமாக அக்டோபர் 31, 1984 இல் அறிவித்தது. இதன் அமைப்பு ப்ருசெல்ஸ் பெருங்கோவிலின் அமைப்பை ஒத்தது.
வெளி இணைப்புக்கள்
[தொகு]- Official site of the Cathedral
- World Heritage Site profile
- Virtual visit of the cathedral on high resolution பரணிடப்பட்டது 2018-10-19 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ PÉREZ BARREDO:«Juan de Langres le quita a Vigarny la autoría del cimborrio de la catedral», Diario de Burgos, jueves, 19 de septiembre de 2013.