பேர்கன் மருத்துவமனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆக்கிலாந்து பல்கலைக்கழக மருத்துவமனை
Haukeland University Hospital
பேர்கன் மருத்துவமனை அறக்கட்டளை
அமைவிடம் ஆக்கிலாந்து, பேர்கன், ஒர்தலாந்து, நோர்வே
ஆள்கூறுகள் 60°22′26″N 5°21′31″E / 60.374°N 5.3587°E / 60.374; 5.3587ஆள்கூறுகள்: 60°22′26″N 5°21′31″E / 60.374°N 5.3587°E / 60.374; 5.3587
மருத்துவப்பணி பொது
வகை பல்கலைக்கழக மருத்துவமனை
அவசரப் பிரிவு ஆம்
படுக்கைகள் 1100
நிறுவல் 1912
வலைத்தளம் ஆக்கிலாந்து பல்கலைக்கழக மருத்துவமனை
Haukeland University Hospital
பட்டியல்கள்

பேர்கன் மருத்துவமனை நோர்வே நாட்டின் மேற்கு கரையோரத்தில் அமைந்திருக்கும் பேர்கன் நகரத்தில் இயங்கி வரும் அரசாங்க பொது மருத்துவமனையாகும். இது பேர்கனில் இயங்கிவரும் பேர்கன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இயங்கி வருவதனாலும், Haukeland என்னும் இடத்தில் அமைந்திருப்பதனாலும் Haukeland University Hospital (HUS - Haukeland UniverstitetsSykehus) என அழைக்கப்படுகிறது. இந்த மருத்துவமனையுடன் வேறும் பத்து மருத்துவ நிறுவனங்கள் இணைக்கப்பட்டு Helse Bergen எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்படுகிறது. இந்த 11 நிறுவனங்களிலும் மிகப் பெரியது Haukeland University Hospital (HUS) ஆகும். இது நோர்வேயிலுள்ள மிகப் பெரிய மருத்துவமனைகளில் ஒன்றாக இருப்பதுடன், மாற்று உறுப்பு பொருத்துதல் தவிர்ந்த ஏனைய எல்லா வகையான நோய் ஆய்வறிதல், அனைத்துவகை சிகிச்சைகளையும் அளிக்கவல்ல இடமாகவும் உள்ளது[1]. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கையில் இந்த மருத்துவமனையே நோர்வேயில் மிகப்பெரிய மருத்துவமனையாக உள்ளது[2].

அத்துடன் பேர்கன் பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் மருத்துவபீட மாணவர்களுக்கும், மருத்துவம் தொடர்பான ஏனைய பயிலுனர்களுக்கும் முறையான பயிற்சிநெறிகளை அளிப்பதற்கான இடமாகவும், மருத்துவம் தொடர்பான பல ஆய்வுகள் நடைபெறும் இடமாகவும் உள்ளது.

கிட்டத்தட்ட 9500 ஊழியர்கள் தொழில்புரியும் இடமாகவும், 700 க்கு மேற்பட்ட மருத்துவர்களையும், 2700 தாதியர்களையும் கொண்டிருக்கும் மருத்துவமனையாக இருப்பதனால் ஸ்கான்டினாவியா நாடுகளில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் மருத்துவமனைகளில் ஒன்றாகவும் அமைந்திருக்கிறது[3].

இம்மருத்துவமனையானது பேர்கன் பல்கலைக்கழகம், நோயியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் The Gade Institute ஆகிய இரு நிறுவனங்களுடன் இணைந்து தொழிற்பட்டு வருகின்றது.

இந்த மருத்துவமனை 1912 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 17.01.2012 அன்று 100 ஆவது ஆண்டு நிறைவுநாள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

படக்காட்சியகம்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேர்கன்_மருத்துவமனை&oldid=1832077" இருந்து மீள்விக்கப்பட்டது