பேருயிரியல்

பேருயிரியல் (Macrobiology) என்பது உயிரியலின் ஒரு பிரிவு ஆகும். சாதரணமாக கண்களால் காணவியல்கின்ற பெரிய உயிரினங்கள் அல்லது பெரும உயிரினங்களைப் பற்றி படிக்கின்ற அறிவியல் பிரிவு பேருயிரியல் எனப்படுகிறது. நுண்ணுயிரியல் பிரிவுக்கு எதிர் பிரிவாக பேருயிரியல் பிரிவு கருதப்படுகிறது. நுண்ணுயிரியல் கண்களுக்குத் தெரியாத நுண்ணுயிர்களை ஆய்வு செய்வதைப் போல பேருயிரியல் கண்களுக்குப் புலப்படும் பெரிய உயிரினங்களை ஆய்வு செய்கிறது [1].
பேரண்டம், சிற்றண்டம் என்ற கோட்பாடுகள் பேருயிரியலில் சில முக்கியக் கோட்பாடுகளாகக் கருதப்படுகின்றன. பிரபஞ்சத்தைக் குறித்த ஒரு தோற்றத்தை இக்கோட்பாடுகள் விவரிப்பதாகக் கொள்ளலாம். பிரபஞ்சம் என்ற முழுமையில் பேரண்டம் ஒரு பகுதியென்றால் எஞ்சியிருக்கும் பகுதி சிற்றண்டமாகும். இவ்வாறே பிரபஞ்சம் என்ற முழுமையில் சிற்றண்டம் ஒரு பகுதியெனில் எஞ்சியிருப்பது பேரண்டமாகும். மறைபொருளை உணரும் அனைத்து சிந்தனைகளிலும் இத்தோற்றம் இடம்பெற்றுள்ளதென அறிஞர் பியரி ஏ. இரிப்பார்டு கருத்து தெரிவிக்கிறார். சோதிடம், இரசவாதம் மற்றும் புனித வடிவியல் போன்ற நடைமுறைகள் இக்கோட்பாடுகளின் கீழுள்ளன [2].
இவற்றையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "What is macro biology?". 2019-04-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-09-02 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Cosmos - an Illustrated Dimensional Journey from microcosmos to macrocosmos". 2008-04-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-09-02 அன்று பார்க்கப்பட்டது.