பேரி பாவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பேரி எச். பாவ்
Barry H. Paw
பிறப்புஆகத்து 29, 1962(1962-08-29)
இறப்புதிசம்பர் 28, 2017(2017-12-28) (அகவை 55)[1]
தேசியம்அமெரிக்கர்
படித்த கல்வி நிறுவனங்கள்டேவிட் கெஃபென் மருத்துவப் பள்ளி
(முதுநிலை, 1991)[2]
பணிஉயிரியலாளர்

பேரி பாவ் (Barry Paw) ஒரு பர்மிய அமெரிக்க உயிரியலாளர் ஆவார் . ஈமோகுளோபின் உற்பத்திக்கு மனிதர்களில் ஒரு புதிய மரபணுவைக் கண்டுபிடிப்பதில் இவர் அளித்த பங்களிப்பால் நன்கு அறியப்படுகிறார்.[3]

பாவ் அமெரிக்காவில் ஆர்வர்டு மருத்துவப் பள்ளியில் ஓர் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார். ஈமோகுளோபின் உருவாக்கத்தில் மரபணுவான மைட்டோஃபெரின் இரும்பை சிவப்பு இரத்த அணுக்களுக்கு]] எவ்வாறு கொண்டு செல்கிறது என்பது குறித்து இவர் ஆராய்ச்சி மேற்கொண்டார்.[4] ஈமோகுளோபின் நுரையீரலில் இருந்து ஆக்சிசனை தசைகள் உட்பட உடலின் மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்கிறது.

இரும்புச்சத்து குறைபாடு அல்லது அதிக அளவு இரும்புச்சத்து உள்ளிட்ட மனித நோய்களை ஏற்படுத்தும் மரபணுவின் மாற்றங்களை வெளிப்படுத்துதலை நோக்கி பாவின் ஆராய்ச்சி இலக்கு வைக்கப்பட்டது.

பாவ் எதிர்பாராத விதமாக 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 அன்று தனது 55 ஆவது வயதில் இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dr. Barry Paw Service Details" (2017). மூல முகவரியிலிருந்து 12 January 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 11 January 2018.
  2. "Physician Profile: Barry H. Paw, M.D.". Board of Registration in Medicine. Commonwealth of Massachusetts (2012). மூல முகவரியிலிருந்து 4 March 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 8 April 2012.
  3. Burmese Researcher Helps Discover New Gene
  4. "Barry H. Paw". Harvard College (2012). மூல முகவரியிலிருந்து 24 June 2014 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரி_பாவ்&oldid=3192714" இருந்து மீள்விக்கப்பட்டது