பேரியம் பாசுப்பேட்டு
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
பேறியம் பாசுப்பேட்டு
| |
| இனங்காட்டிகள் | |
| 13517-08-3 | |
| ChemSpider | 145305 |
| EC number | 236-856-9 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 165803 |
| |
| பண்புகள் | |
| Ba3(PO4)2 | |
| வாய்ப்பாட்டு எடை | 601.9 கி/மோல் |
| தோற்றம் | தூள் |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | சாய்சதுரத்திண்மம் |
| தீங்குகள் | |
| GHS pictograms | |
| GHS signal word | எச்சரிக்கை |
| H302, H332 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பேரியம் பாசுப்பேட்டு (Barium phosphate) என்பது Ba3(PO4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பேரியத்தின் பாசுப்பேட்டு உப்பாகக் கருதப்படும் இச்சேர்மம் வெண்மை நிறத்தில் நெடியற்ற தூளாகக் காணப்படுகிறது. பேரியம் பாசுப்பேட்டு நீரில் கரையாது. பேரியம் ஆர்த்தோபாசுப்பேட்டு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]பேரியம் பாசுப்பேட்டு தூள் தயாரிப்பதற்கான பொதுவான வேதியியல் வினை:[1]
3 Ba(NO3)2 + 2 NH4H2PO4 → Ba3(PO4)2 + 2 NH4NO3 + 4 HNO3
கட்டமைப்பு
[தொகு]பேரியம் பாசுப்பேட்டின் படிக அமைப்பு இசுட்ரோன்சியம் பாசுப்பேட்டில் உள்ளதைப் போலவே, R3m இடக்குழுவுடன் கூடிய சாய்சதுரப் பிழம்புருவாகும்.[2]
பண்புகள்
[தொகு]பேரியம் பாசுப்பேட்டு அதிக ஒளிவிலகல் எண் குறியீடு, குறைந்த உருகுநிலை, குறைந்த கண்ணாடி மாற்ற வெப்பநிலை, புற ஊதா ஒளிக்கு அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் அதிக வெப்ப விரிவாக்க குணகம் போன்ற பண்புகளை வெளிப்படுத்துகிறது.[3]
பயன்பாடுகள்
[தொகு]பேரியம் பாசுப்பேட்டு தொழில்துறை பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. துடிப்புள்ள லேசர்களுக்கான சிறப்பு பண்புகளைக் கொண்ட கண்ணாடிகளைத் தயாரித்தல், கண்ணாடியிலிருந்து கண்ணாடி பிணைப்புக்கான சாலிடர்களைத் தயாரித்தல் போன்ற ஒளியியல் பயன்பாடுகள் போன்றவையும் இதில் அடங்கும். ஐதரசன்/ எரிபொருள் உணரிகளின் வளர்ச்சியிலும் இதைப் பயன்படுத்தலாம்.[3]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ba3(PO4)2 Photocatalyst for Efficient Photocatalytic Application" (PDF). p. 9. Retrieved 23 April 2025.
- ↑ Zachariasen, W. H. (2 November 1948). "The crystal structure of the normal orthophosphates of barium and strontium". Acta Crystallographica 1 (5): 263–265. doi:10.1107/S0365110X48000697.
- ↑ 3.0 3.1 "Barium Phosphate Powder". Sigma Aldrich. Retrieved 12 March 2025.