பேராசிரியர் (யாப்பருங்கல விருத்தி)
Jump to navigation
Jump to search
யாப்பருங்கலம் என்னும் யாப்பிலக்கணம் பற்றிய நூலுக்கு விருத்தியுரை ஒன்று உண்டு. அதனை யாப்பருங்க விருத்தி என்றே குறிப்பிடுவர். அந்த நூலில் சில மேற்கோள்கள் பேராசிரியர் என்னும் ஒருவர் பெயரைச் சுட்டுகின்றன.
- பிறைநெடுமுடிக் கறைமிடற்றனார் பெயர் மகிழ்ந்த பேராசிரியர்
- நீர் மலிந்த வார்சடையோன் பேர் மகிழ்த போராசிரியர்
- பெண்ணொரு பாகன் பெயர் பகிழ்ந்த பேராசிரியர்
- காமவேளைக் கறுத்த புத்தேள் நாமம் தாங்கிய நல்லாசிரியர்
என்று இவரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]
கருவிநூல்[தொகு]
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005
அடிக்குறிப்பு[தொகு]
- ↑ இவரது பெயர் வரும் சில இடங்களில் மயேச்சுரர் என்று வேறு பாடபேதங்களும் காட்டப்பட்டுள்ளன. மயேச்சுவரம் என்னும் யாப்பிலக்கணம் இயற்றிய புலவர் மயேச்சுரர். இவர் 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். இந்தப் பேராசிரியர் 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உரையாசிரியர் என மு. அருணாசலம் தெளிவுபடுத்துகிறார்.