பேரரசர் சிறு குரங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பேரரசர் சிறு குரங்கு
Tamarin portrait.JPG
S. i. subgrisescens
Black-chinned emperor tamarin (S. i. imperator).jpg
S. i. imperator
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: முதனி
குடும்பம்: Callitrichidae
பேரினம்: Saguinus
இனம்: S. imperator
இருசொற் பெயரீடு
Saguinus imperator
(Goeldi, 1907)
Saguinus imperator distribution.svg
தென் அமெரிக்காவில் இவை வாழும் நிலப்பகுதி

பேரரசர் சிறு குரங்கு (emperor tamarin, Saguinus imperator) என்பது ஒரு அரிய முதனி ஆகும். இந்தக் குரங்கின் முகத்தில் அடர்த்தியான மீசை ரோமங்கள் இருக்கும். அரசர்களுக்கு இருப்பது போலவே மீசை இருப்பதால் இவை ஜெர்மன் பேரரசர் இரண்டாம் வில்லியமின்.[2] மீசையோடு உள்ள ஒற்றுமையால் எம்பெரர் டாமரின் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த விலங்கு தென்மேற்கு அமேசான் படுகை, கிழக்குப் பெரு, வடக்கு பொலிவியா, மேற்கு பிரேசில் மாநிலமான ஆக்ரி மற்றும் அமேசான் மாநிலம் போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன.

இவற்றின் மார்பு முடிகள் மஞ்சள் கலந்து, பெரும்பான்மையாக சாம்பல் நிறத்தில் இருக்கும். கைகள், கால்கள் போன்றவை கருப்பு நிறத்திலும் வால் பழுப்பு நிறத்திலும் இருக்கும். இவற்றின் வெள்ளை மீசையானது நீண்டு இரு தொள்களைத் தொடுமளவு இருக்கும். இவ்விலங்கு 23–26 சென்டிமீட்டர்கள் (9.1–10.2 in) நீளமுடையது, மேலும் 35–41.5 cm (13.8–16.3 in) நீளமான வலை கொண்டிருக்கும். இதன் எடை தோராயமாக 500 கிராம்கள் (18 oz) இருக்கும். இவை எப்போதும் குடும்பமாகவே வாழக்கூடியன. ஒரு குடும்பத்தில் மூன்று முதல் எட்டு விலங்குகள்வரை இருக்கும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரரசர்_சிறு_குரங்கு&oldid=2202663" இருந்து மீள்விக்கப்பட்டது