பேய் விரட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பேய் விரட்டி
Inflorescence of Anisomeles malabarica.JPG
பேய் விரட்டி இலை
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Lamiales
குடும்பம்: Lamiaceae
பேரினம்: Anisomeles
இனம்: A. மலபாரிகா
இருசொற் பெயரீடு
Anisomeles மலபாரிகா
வேறு பெயர்கள் [1]
  • பெருந்தும்பை
  • எருமுட்டை பீநாறி
  • பேய் மருட்டி
  • பிரமட்டை
  • இரட்டை பிரட்டை
  • இரட்டை பேய் மருட்டி
  • ஒற்றை பேய் விரட்டி
  • வெதுப்படக்கி

பேய் விரட்டி (Anisomeles Malabarica)[2] என்பது ஒரு மருத்துவ தாவரம் ஆகும். தும்பை பேரினத்தைச் சேர்ந்த இத்தாவரம் பெருந்தும்பை என்ற பெயராலும், பேய்மிரட்டி என்னும் பெயராலும் அழைக்கப்படுகிறது, இதன் இலைகள் எதிர் அடுக்குகளில் அமைந்த, வெளிறிய வண்ணமும், வெகுட்டல்[3] வாடையும் உடையது. மருத்துவ குணமுடைய இந்த தும்பைத்தாவரம் எல்லா இடங்களிலும் வளர்வதில்லை, புதராக இருக்குமிடங்களில் அரிதாக காணப்படும். 1810 ஆம் ஆண்டுவாக்கில் இது ஒரு மருத்துவ குடும்பத்தைச் சார்ந்த குட்டை தாவர பேரினம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது பசுபிக், சீனா, இந்திய துணைக்கண்டம், தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா[1], நியூ கினி, மடகாஸ்கர் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் பெருமளவில் காணப்படுகிறது.

விளக்கம்[தொகு]

  • இவ்வினத்தின் இலை நீளமாக இருப்பின், இரட்டைப்பேய் மிரட்டி எனப்படும். இலை வட்டமாக இருந்தால் ஒற்றை பேய் மிரட்டி என்றழைக்கப்படும். இவை முறையே ஆண், பெண் என்று கருதப்படுகிறது.
  • ஆண்களுக்கு காணுகின்ற நோய்களுக்கு பெண்ணிலையும், பெண்களுக்கு வரும் நோய்களுக்கு ஆணிலையும் பிணிதீர்க்கப் பயன்படுவதாக மருத்துவக் குறிப்புகளில் உள்ளது.[4]

சித்தர் பாடல்[தொகு]

பேய்மிரட்டி
மாந்தக கணங்கழிச்சல் மாறா வயிற்றுவலி
சேர்த்து வரும் கரப்பான் றீச்சுரமும்-பேர்த்துவிடும்
வேய்மிரட்டுந் தோலுடைய மெல்லியலே ராசியமாய்
பேய்மிரட்டி என்றொருகாற் பேசு

இதுவுமது
ஏக்கமுறு கழிச்சல் மாந்த சுரம்
வீக்கம் வயிற்று வலி விட்டோடும்-தாக்குகின்ற
பேய்மிரட்டும் பாதகமும் பேருலகில் அஞ்சிவிடும்
பேய்மிரட்டி நற்குணத்தை பேசு

பேய்மிரட்டியிலை
வெள்ளடுப்பு சீதம் வெதும்பல் சுரத்துடனே
யள்ளடுக்கு மாந்த மதிவாதந்-தெள்ளு மொழி
மாதே வெதுப்படக்கி வன்றழையுற் காய்ச்சலோடு
கோதேறி ரத்தமும் போக்கும்

மேற்கோள்கள் துணை இணைப்புகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேய்_விரட்டி&oldid=2449764" இருந்து மீள்விக்கப்பட்டது