பேய்சிப்பள்ளி வனவிலங்கு சரணாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பேய்சிப்பள்ளி வனவிலங்குச் சரணாலயம்
Baisipalli Wildlife Sanctuary
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி)
அமைவிடம்நயாகட், ஒடிசா, இந்தியா
நிறுவப்பட்டது6 மே 1981[1][2]

பேய்சிப்பள்ளி வனவிலங்குச் சரணாலயம் (Baisipalli Wildlife Sanctuary) ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்றான நயாகட் மாவட்டத்திலுள்ள ஒரு வனவிலங்குச் சரணாலயமாகும். இச்சரணாலயம் சட்கோசியா புலிகள் காப்பகத்தை அடுத்து அமைந்துள்ளது. 168.35 கி.மீ2 பரப்பளவில் இவ்விலங்குக் காப்பகம் பரந்து விரிந்துள்ளது. கரடிகள், யானைகள், சிறுத்தைகள், கடமான்கள், புள்ளி மான்கள் போன்ற விலங்குகள் இங்கு வாழ்கின்றன[2]

கிழக்குத் தொடர்ச்சி மலைகள் பகுதியில் மகாநதி பாய்ந்து செல்லும் 22 கிலோமீட்டர் ஆழ்பள்ளத்தாக்கில், கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டர் உயரத்தில் பேய்சிப்பள்ளி வனவிலங்குச் சரணாலயம் அமைந்துள்ளது[1]

சால் போன்ற கலப்பு இலையுதிர் காடுகள் வகைத் தாவரங்களும் ஆற்றோர வயலும் வயல்சார்ந்த தாவரங்களும் இங்கு அதிகமாக உள்ளன [3].

2007 ஆம் ஆண்டில் அருகிலிருந்த சட்கோசியா ஆழ்பள்ளத்தாகு வனவிலங்குகள் சரணாலயத்தையும் உள்ளடக்கி பேய்சிப்பள்ளி வனவிலங்கு சரணாலயம் வடிவமைக்கப்பட்டது

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Environment, Security and Tourism Development in South Asia. Gyan Publishing House. 2004. பக். 61. 
  2. 2.0 2.1 "Mahandi Wildlife Division, Nayagarh". District Portal Nayagarh. ஆகஸ்ட் 3, 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. August 2, 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |deadurl= (உதவி); Invalid |deadurl=dead (உதவி)
  3. Negi, Sharad Singh (1993). Biodiversity and Its Conservation in India. Indus Books. p. 244.

புற இணைப்புகள்[தொகு]