பேய்க் குழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேய்க் குழி. கருமையாகத் தெரிவதே நீர் மேற்பரப்பு.
பேய்க் குழியைப் பார்பதற்கு அமைக்கப்பட்டுள்ள மேடை

பேய்க் குழி (Devil's Hole) என்பது, தென்மேற்கு ஐக்கிய அமெரிக்காவின் நெவாடா மாநிலத்தில் நியே கவுன்டியில் உள்ள ஆசு மீடோசு தேசிய காட்டுயிர் புகலிடத்தில் அமைந்துள்ள ஒரு ஊற்று ஆகும். ஒருவகைப் பாலைவன மீன்வகைகளில் தனித்துவமான வாழிடமான இந்த ஊற்று, சாவுப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவினால் நிவாகம் செய்யப்படுகின்றது.

பேய்க் குழி, நெவாடா மாநிலத்தின் ஆமர்கோசா பள்ளத்தாக்கில் உள்ள, ஆமர்கோசா பாலைவனத்தின் சுண்ணக் கற்களால் ஆன நிலத்தடிக் குகைகளில் காணப்படும் புவிவெப்ப, நிலத்தடி நீர்த்தேக்கத்தில் இருந்து கிடைக்கும் நீரைக் கொண்ட ஒரு ஊற்று. பேய்க் குழி, நிலத்துக்கு அடியில் ஆழமான நிலத்தடிக் குகைகளாகக் கிளைத்துச் செல்கிறது. இவை நில மட்டத்தில் உள்ள அதன் வாயில் இருந்து குறைந்தது 300 அடி (91 மீட்டர்) ஆழத்தில் உள்ளன. இந்நிலத்தடிக் குகைகள் 500,000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம் என நிலவியலாளர்கள் கூறுகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேய்க்_குழி&oldid=2744665" இருந்து மீள்விக்கப்பட்டது