பேப்பர் மரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பேப்பர் மரம்
Melaleuca leucadendra 01.JPG
M. leucadendra in Keatings Lagoon near Cooktown.
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: ஆஞ்சியோஸ்பெர்ம்
தரப்படுத்தப்படாத: Eudicots
தரப்படுத்தப்படாத: Rosids
வரிசை: Myrtales
குடும்பம்: Myrtaceae
பேரினம்: Melaleuca
இனம்: M. leucadendra
இருசொற் பெயரீடு
Melaleuca leucadendra
(L.) L.
வேறு பெயர்கள் [1]
  • Myrtus leucadendra L.

மெலலியுக்கா லியுகாடென்ரான் இன்பது பொதுவாக காகித மரம் என்று அழைக்கப்படுகிறது.வடக்கு ஆஸ்திரேலியாவில் பரவி காணப்படுகிறது.

காகித மரம்[தொகு]

மெலலியுக்கா லியுகாடென்ரான்- மரம்

வகைப்பாடு[தொகு]

தாவரவியல் பெயர் : மெலலியுக்கா லியுகாடென்ரான் 'M'elaleuca leucadendron'

குடும்பம் : மிர்ட்டேசியீ (Myrtaceae)

இதரப் பெயர்கள்[தொகு]

  1. காகித பட்டை Paper bark
    காகித பட்டை
  2. சதுப்பு தேயிலை மரம் Swamp tea tree

மரத்தின் அமைவு[தொகு]

இம்மரம் 35 அடி உரம் வளரக்கூடியது. இதனுடைய

மெலலியுக்கா லியுகாடென்ரான் மலர்கள்

பூக்கள் புட்டியை கழுவ பயன்படுத்தும் குஞ்சம் போல் இருக்கும். இது வெளுத்தும், சில சமயங்களில் மஞ்சள், இளம் சிவப்பு நிறத்திலும் இருக்கும். இம்மரம் சதுப்புகளிலும், உப்பு நீரிலும், வறண்டப் பகுதியிலும் நன்கு வளர்கிறது. இதன் இலையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மருந்தாகவும், டானிக்காகவும் பயன்படுகிறது.

இம்மரத்தின் பட்டை காகிதம் போன்று வெளுப்பாக இருக்கும். இப்பட்டை நார் நிறைந்தும், மிருதுவாகவும், உரிக்கக் கூடியதாகவும் உள்ளது. இப்பட்டை பல மெல்லிய அடுக்குகளால் ஆனது. இதை தனித்தனியாக உரித்து எடுக்கலாம். இது பார்ப்பதற்கு பேப்பர் போல உள்ளது. இவை நன்கு உழைக்கக் கூடியவை. இதைக்கொண்டு பழங்களை கட்டுவதற்கும், வீட்டின் மேற்கூரை மேய்வதற்கு படகு கட்டுவதற்கும் பயன்படுத்துகிறார்கள். பேப்பர் போல எழுதவும் பயன்படுத்தலாம். இம்மரம் மலேயா, ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் வளர்கிறது. இவற்றில் 100 இன மரங்கள் உள்ளன.

மேற்கோள்[தொகு]

| 1 || சிறியதும் - பெரியதும் [2] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Melaleuca leucadendra
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Brophy என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேப்பர்_மரம்&oldid=2749234" இருந்து மீள்விக்கப்பட்டது