பேபி ராணி மௌரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Baby Rani Maurya
The Prime Minister, Shri Narendra Modi at the 1st Uttarakhand Investors Summit, at Dehradun, Uttarakhand (cropped).JPG
7th Governor of Uttarakhand
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
26 August 2018
Chief Minister Trivendra Singh Rawat
முன்னவர் Krishan Kant Paul
Member of the National Commission for Women
பதவியில்
2002–2005
தனிநபர் தகவல்
பிறப்பு 15 ஆகத்து 1956 (1956-08-15) (அகவை 64)
அரசியல் கட்சி Bharatiya Janata Party
இருப்பிடம் Raj Bhavan, Dehradun

பேபி ராணி மௌரியா(பிறப்பு 15 ஆகஸ்ட் 1956) ஒரு இந்திய அரசியல்வாதி, 26 ஆகஸ்ட் 2018 முதல் உத்தரகண்ட் மாநிலத்தின் ஏழாவது ஆளுநராகப் பணியாற்றி வருகிறார். 1990 களின் முற்பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் பணியாளராக அரசியலில் நுழைந்தார். 1995 முதல் 2000 வரை ஆக்ராவின் முதல் பெண் மேயராக இருந்தார். 2002 முதல் 2005 வரைஅவர் தேசிய பெண்கள் ஆணையத்தில் பணியாற்றினார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

பேபி ரானி ஆகஸ்ட் 15, 1956 இல் பிறந்தார். [1] அவர் இளங்கலை கல்வி மற்றும் முதுகலைக் கல்வியில் பட்டங்களை பெற்றவர்.

தொழில்[தொகு]

1990 களின் முற்பகுதியில் பேபி ராணிஅரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.பிரதீப்குமார் மௌரியா என்ற ஒரு வங்கி அதிகாரியை மணந்ந்தார். பிரதீப்குமார் பஞ்சாப் தேசிய வங்கியின் இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் இப்போது அவ்வங்கியின் ஆலோசனைக் குழுவில் பணியாற்றி வருகிறார். [2] [3] பாரதீய ஜனதா கட்சியின் (பாஜக) பணியாளராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1995 ஆம் ஆண்டில் அவர் ஆக்ரா மேயர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டார், மேலும் ஒரு பெரிய ஆதரவில் வெற்றி பெற்றார். ஆக்ராவின் மேயராக இருந்த முதல் பெண்மணி பேபிரானி ஆவார், மேலும் 2000 வரை இந்த பதவியை வகித்தார். [4]

1997 ஆம் ஆண்டில், பாஜகவின் பிற்படுத்தப்பட்ட சாதிப் பிரிவின் அலுவலக பொறுப்பாளராக பேபி ராணி நியமிக்கப்பட்டார். இப்போது இந்தியாவின் ஜனாதிபதியாக இருக்கும் ராம்நாத் கோவிந்த் அப்போது அந்தப் பிரிவின் தலைவராக இருந்தார். [1] இந்த பிரிவின் அலுவலக பொறுப்பாளராக, உத்தரபிரதேசத்தில் உள்ள பட்டியல், பழங்குடியினச் சாதியினரின் உறுப்பினர்களிடையே பாஜகவின் அணுகலை வலுப்படுத்தும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார். 2001 ஆம் ஆண்டில், அவர் உத்தரபிரதேச சமூக நல வாரியத்தில் உறுப்பினராக்கப்பட்டார். தலித் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான அவரது முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக, 2002 ஆம் ஆண்டில் அவர் தேசிய பெண்கள் ஆணையத்தில் உறுப்பினராக்கப்பட்டார். [5] அவர் 2005 வரை ஆணையத்தில் பணியாற்றினார்.

2007 உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில் எட்மத்பூர் தொகுதியில் போட்டியிட பாஜக பேபி ராணியைப் பரிந்துரைத்தது; இருப்பினும், அவர் தனது எதிர்ப் போட்டியாலரான பகுஜன் சமாஜ் கட்சியின் நாராயண் சிங் சுமனிடம் தோல்வியடைந்தார். [2] [6] 2013 முதல் 2015 வரை, பாஜக தனக்கு ஒதுக்கப்பட்ட மாநில அளவிலான பொறுப்புகளில் அவர் ஈடுபட்டிருந்தார். ஜூலை 2018 இல், அவர் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான மாநில ஆணையத்தில் உறுப்பினராக்கப்பட்டார்.

21 ஆகஸ்ட் 2018 அன்று பேபி ரானி இந்திய அரசாங்கத்தால்உத்தரகண்டின் ஏழாவது ஆளுநராக நியமிக்கப்பட்டார் . [2] [7] ஆகஸ்ட் 26 அன்று உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ராஜ் பவனில் நடைபெற்ற விழாவில் அவர் பதவியேற்றார், [8] உத்தரகண்ட் ஆளுநராக இருந்த இரண்டாவது பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்: 2009 இல் நியமிக்கப்பட்ட மார்கரெட் ஆல்வா இதன் முதல் ஆளுநராவராவார். [4] ஜூலை 8 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக பதவிக்காலாம் முடிந்த கிருஷன் காந்த் பாலுக்குப் பிறகு அவர் பதவி ஏற்றார். ஆனால் நியமனம் செய்வதில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக ஆகஸ்ட் 25 வரை காத்திருந்து பதவியேற்றார். [9]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Bioprofile of Smt. Baby Rani Maurya, Hon'ble Governor, Uttarakhand". மூல முகவரியிலிருந்து 27 August 2018 அன்று பரணிடப்பட்டது.
  2. 2.0 2.1 2.2 Lavania, Deepak (23 August 2018). "‘Uttarakhand governor Baby Rani Maurya a dedicated worker, strict administrator’". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/agra/uttarakhand-governor-baby-rani-maurya-a-dedicated-worker-strict-administrator/articleshow/65506991.cms. 
  3. "Baby Rani Maurya To Take Oath As Uttarakhand Governor On 26th August". Uttarakhand News Network. 23 August 2018. https://uttarakhandnewsnetwork.com/2018/08/baby-rani-maurya-to-take-oath-as-uttarakhand-governor-on-26th-august/. 
  4. 4.0 4.1 Kumar, Yogesh (22 August 2018). "Former Agra mayor appointed Uttarakhand governor". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/dehradun/former-agra-mayor-appointed-ukhand-guv/articleshow/65493511.cms. 
  5. "List of Members of the Commission since its inception".
  6. "339-Etmadpur- Uttar Pradesh".
  7. "Baby Rani Maurya takes oath as Uttarakhand Governor". Deccan Chronicle. 26 August 2018. https://deccanchronicle.com/videos/news/baby-rani-maurya-takes-oath-as-uttarakhand-governor.html. 
  8. "Baby Rani Maurya sworn in as new Uttarakhand governor". The Economic Times. 26 August 2018. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/baby-rani-maurya-sworn-in-as-new-uttarakhand-governor/articleshow/65552443.cms. 
  9. Kumar, Yogesh (9 July 2018). "Who will be the next U’khand governor?". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/dehradun/who-will-be-the-next-ukhand-governor/articleshow/64908669.cms. 
அரசியல் பதவிகள்
முன்னர்
{{{before}}}
Governor of Uttarakhand
26 August 2018 – Present
பதவியில் உள்ளார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேபி_ராணி_மௌரியா&oldid=2926106" இருந்து மீள்விக்கப்பட்டது