பேனா வால் மரமூஞ்சூறு
| பேனா வால் மரமூஞ்சூறு | |
|---|---|
| 1848ஆம் ஆண்டில் பேனா வால் மரமூஞ்சூறு விளக்கம் | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | இசுகேண்டென்சியா
|
| குடும்பம்: | திலோசெர்சிடே
|
| பேரினம்: | திலோசெரசு
|
| இனம்: | து. லவ்வீ[2]
|
| இருசொற் பெயரீடு | |
| திலோசெரசு லவ்வீ (கிரே, 1848) | |
| பேனா வால் மரமூஞ்சூறு பரம்பல் | |
பேனா வால் மரமூஞ்சூறு (Pen-tailtree shrew திலோசெரசு லவ்வீ) என்பது தெற்கு தாய்லாந்து, மலாய் தீபகற்பம், போர்னியோ, இந்தோனேசியத் தீவுகளைப் பூர்வீகமாகக் கொண்ட திலோசெர்சிடே குடும்பத்தினைச் சார்ந்த மரமூஞ்சூறு சிற்றினம் ஆகும்.
இது திலோசெரசு பேரினத்தில் வாழும் ஒரே ஒரு சிற்றினமாகும். அனைத்து மரமூஞ்சூறு சிற்றினங்களும் துபாயிடே குடும்பத்தைச் சேர்ந்தவை.[2]
பரவலும் வாழிடமும்
[தொகு]பேனா-வால் மரமூஞ்சூறு தெற்கு தாய்லாந்து, மலாய் தீபகற்பத்திலிருந்து வடக்கு சுமாத்திரா, சைபர்ட், பங்கா தீவு, வடமேற்கு போர்னியோ வரை காணப்படுகிறது. இது 1,200 மீ (3,900 ) உயரம் வரை முதன்மையான காட்டில் வாழ்கிறது. இங்கு தரைப்பகுதியில் தாவர வளர்ச்சி அடர்த்தியாக உள்ளது.
நடத்தை
[தொகு]மலேசியாவில் ஆய்வு செய்யப்பட்ட பேனா வால் மரமூஞ்சுறுக்கள் பெர்டம் பனையில் இயற்கையாகப் புளிக்கவைக்கப்பட்ட கள்ளினை உட்கொள்வதில் இரவில் பல மணிநேரத்தினைச் செலவிடுகின்றன. இந்தப் பானத்தில் அனைத்து இயற்கை உணவுகளிலும் மிக உயர்ந்த சாராயச் செறிவுகள் உள்ளன. பேனா வால் மர மூஞ்சுறுகள் போதையின் எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை. இருப்பினும் இவை அடிக்கடி இந்தப் பானத்தினை அதிக அளவில் உட்கொள்கின்றன. இது 10-12 மது கண்ணா குவளைக்குச் சமமான அளவுடன் 3.8% வரை சாராயம் உள்ளடக்கத்துடன் உள்ளது. ஹைட்ரஜன் நீக்கும் சாராய நொதியின் அளவீடுகள் ஆய்வில் இவை மனிதர்களால் அதிகமாகப் பயன்படுத்தப்படாத ஒரு வளர்சிதை மாற்றப் பாதை மூலம் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கூறுகின்றன. அதிக அளவு சாராயம் உட்கொள்ளும் திறன் ஒரு பரிணாமத் தழுவல் என்று கருதப்படுகிறது. அதிக அளவு சாராயம் உட்கொள்வதால் பேனா-வால் மர மூஞ்சூறுகள் எவ்வாறு பயனடைகின்றன அல்லது நிலையான உயர் இரத்தச் சாராயம் உள்ளடக்கத்தின் விளைவுகள் இவற்றின் உடலியல் எவ்விதத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.[3]
வகைப்பாட்டியலும் பரிணாமமும்
[தொகு]திலோசெர்சிடே என்பது இசுகேண்டென்சியா வரிசையில் உள்ள ஒரு குடும்பமாகும். பல உருவவியல், மரபணு வேறுபாடுகள் திலோசெர்சிடே குடும்பத்தினை 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த மற்ற மரமூஞ்சுறுகளிலிருந்து ஒரு தனி குடும்பமாக வகைப்படுத்துவதை ஆதரிக்கின்றன.[4][5] கொலுக்கோக்கள் விலங்கினங்களுக்கு நெருக்கமாக இருப்பதால், மரமூஞ்சூறுக்கள் மிகவும் நெருங்கிய உறவினர்களாக கருதப்படுகின்றன.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Cassola, F. (2016). "Ptilocercus lowii". IUCN Red List of Threatened Species 2016: e.T41491A22278277. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T41491A22278277.en. https://www.iucnredlist.org/species/41491/22278277. பார்த்த நாள்: 26 January 2022.
- ↑ 2.0 2.1 வார்ப்புரு:MSW3 Scandentia
- ↑ Wiens, F.; Zitzmann, A.; Lachance, M.-A.; Yegles, M.; Pragst, F.; Wurst, F. M.; von Holst, D.; Guan, S. L. et al. (2008). "Chronic intake of fermented floral nectar by wild tree-shrews". Proceedings of the National Academy of Sciences 105 (30): 10426–10431. doi:10.1073/pnas.0801628105. பப்மெட்:18663222. Bibcode: 2008PNAS..10510426W.
- ↑ 4.0 4.1 Janečka; J. E.; Miller, Thomas W.; Pringle, H.; Wiens, F.; Zitzmann, A.; Helgen, K. M.; Springer, M. S. et al. (2007). "Molecular and Genomic Data Identify the Closest Living Relative of Primates". Science 318 (5851): 792–794. doi:10.1126/science.1147555. பப்மெட்:17975064. Bibcode: 2007Sci...318..792J. https://archive.org/details/sim_science_2007-11-02_318_5851/page/792.
- ↑ Roberts, T.E.; Lanier, H.C.; Sargis, E.J.; Olson, L.E. (2011). "Molecular phylogeny of treeshrews (Mammalia: Scandentia) and the timescale of diversification in Southeast Asia". Molecular Phylogenetics and Evolution 60 (3): 358–372. doi:10.1016/j.ympev.2011.04.021. பப்மெட்:21565274. Bibcode: 2011MolPE..60..358R.