பேத் வில்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பேத் வில்மன் (Beth Willman) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் பேரியல் அளக்கைத் தொலைநோக்கியின் இணை இயக்குநரும் ஆவார். இவர் முன்பு ஆர்வார்டு கல்லுரியில் வானியல் இணைப் பேராசிரியராக இருந்துள்ளார்.[1]

கல்வி[தொகு]

இவர் வானியற்பியலில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பிறகு இவர் வாழ்சிங்டன் பலகலைக்கழகத்தில் வானியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் அண்டவியல், துகள் இயற்பியல் மையத்தில் ஜேம்சு ஆர்த்தர் அய்வுறுப்பினராக இருந்துள்ளார்.இவர் ஆர்வார்டு சுமித்சோனிய வானியற்பியல் மையத்தின் கிளே ஆய்வுறுப்பினராகவும் இருந்துள்ளார்.

ஆராய்ச்சி[தொகு]

இவர் தன் ஆய்வை அண்டவியலில் மேற்கொண்டார். இவர் அறியப்பட்ட புடவியில் பொலிவுகுன்றிய பால்வெளிகளை ஆய்வு செய்தார்.[2][3] இவர் தன் முதுமுனைவர் ஆய்வின்போது கண்டுபிடித்த வில்மன் 1 பால்வெளி இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.linkedin.com/in/beth-willman-8a7a1b11a/
  2. Spitz, Anna (October 2009). "Beth Willman—Enjoying New Challenges at LSST and in Philadelphia, PA". LSST E-News. பார்த்த நாள் 4 February 2015.
  3. "Haverford College—Beth Willman". Haverford College. பார்த்த நாள் 4 February 2015.
  4. Finkbeiner, Ann (17 August 2012). "Beth Willman Really Does Have A Galaxy". The Awl. பார்த்த நாள் 4 February 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேத்_வில்மன்&oldid=2480476" இருந்து மீள்விக்கப்பட்டது