உள்ளடக்கத்துக்குச் செல்

பேத் மா ரா ஹாஹத் போட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேத் மா ரா ஹாஹத் போட்
இயக்கம்அப்பாஸ் க்யாரஸ்டமி
தயாரிப்புஅப்பாஸ் க்யாரஸ்டமி
கதைஅப்பாஸ் க்யாரஸ்டமி
நடிப்புபெஹ்ஸாத் டோரனி (Behzad Dorani)
ஒளிப்பதிவுமொஹ்மூத் கலாரி (Mahmoud Kalari)
வெளியீடு6 செப்டம்பர் 1999
ஓட்டம்118 நிமிடங்கள்
மொழிபாரசீக மொழி

பேத் மா ரா ஹாஹத் போட் (பாரசீகம்: باد ما را خواهد برد‎, Bād mā rā khāhad bord) ஆங்கிலம்: The Wind Will Carry Us) என்பது ஈரானியத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் 1999 ஆம் ஆண்டு ஈரானிய இயக்குநர் அப்பாஸ் க்யாரஸ்டமியால் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தை எழுதி இயக்கியவரும் அப்பாஸ் க்யாரஸ்டமி ஆவார். இத்திரைப்படத்தின் தலைப்பான காற்று நம்மை தூக்கிச் செல்லும் என்பது ஈரானின் சமகாலப் பெண் கவிஞர் பெரோக் பெர்ரோகாஷாத்தின் (Forough Farrokhzad) கவிதை வரியாகும்.[1] இத்திரைப்படம் வெனிஸ் சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு தங்கச் சிங்கம் விருதிற்காகப் பரிந்துரைக்கப்பட்டது. இத்திரைப்படம் நடுவர்களின் சிறப்புப் பரிசான வெள்ளிச் சிங்கம் விருதினை வென்றது. மேலும் இத்திரைப்படம் பல்வேறு பரிந்துரைகளையும் விருதுகளையும் பெற்றது.

கதை

[தொகு]

ஈரானின் குர்திஷ் கிராமம் ஒன்றில் மரணத் தறுவாயில் வசிக்கும் முதிய பெண்மணி ஒருவரின் துக்கச் சடங்குகளை ஆவணப்படுத்த பத்திரிகையாளர்கள் குழு ஒன்று பொறியாளர்கள் என்ற போர்வையில் வருகின்றனர். நகரப் பத்திரிகையாளர்கள் மற்றும் கிராம மக்களின் வாழ்வியலைக் காட்சிப்படுத்துகிறது இத்திரைப்படம். நகரத்துப் பத்திரிகை அலுவலகத்திலிருந்து தினமும் கிராமத்துப் பத்திரிகையாளர் குழுவுக்கு தொலை பேசி மூலம் முதிய பெண் மரணமடைந்துவிட்டாரா எனக் கேட்டுச் செய்தி வருகிறது. பத்திரிகையாளர் குழுவின் தலைவர் கிராமத்து மக்களின் இயல்பான வாழ்வால் மனம் நெகிழ்கிறார். வயதான பெண்மணி உடல் நலம் தேறி நலமடைகிறார். கிராமப் பெண்மணியின் மரணத்தை எதிர் நோக்கும் நகரத்து மனிதர்களின் மனதை இத்திரைப்படம் பேசுகிறது.[2]

பாராட்டுகள்

[தொகு]
  • இன்றைய தினத்தில் அப்பாஸ் க்யாரஸ்டமியால் எடுக்கப்பட்ட மிகச் சிறந்த திரைப்படம் இது என அமெரிக்கச் சினிமா விமர்சகர் ஜேனத்தன் ரோஸன்பாவ்ம் கூறினார்.
  • இந்த ஆண்டு பார்க்க வேண்டிய மிகச் சிறந்த திரைப்படம் இது என ஆஸ்திரேலிய அரசியலாளர் மைக்கேல் அட்கின்ஸன் கூறினார்.
  • இத்திரைப்படத்தில் எதுவுமில்லை ஆனால் எல்லாம் இருக்கிறது (nothing and everything) என அமெரிக்கச் சினிமா விமர்சகர் ஜே. ஹோபர்மன் கூறினார்.
  • ஸ்காட் பவுண்டஸ் வெரைட்டி (Scott Foundas variety) மிகச் சிறந்த பத்து திரைப்படங்களுள் ஒன்றாக இதைக் குறிப்பிட்டது.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேத்_மா_ரா_ஹாஹத்_போட்&oldid=2918996" இலிருந்து மீள்விக்கப்பட்டது