பேத்தாப் பள்ளத்தாக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பேத்தாப் பள்ளத்தாக்கு
பேத்தாப் பள்ளத்தாக்கு
Floor elevation7,851 ft (2,393 m)
ஆள்கூறுகள்34°3′1.476″N 75°21′49.716″E / 34.05041000°N 75.36381000°E / 34.05041000; 75.36381000ஆள்கூறுகள்: 34°3′1.476″N 75°21′49.716″E / 34.05041000°N 75.36381000°E / 34.05041000; 75.36381000

பேத்தாப் பள்ளத்தாக்கு (ஆங்கிலம்: Betaab Valley) என்பது இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான ஜம்மு-காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தில் பகல்காமில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இந்த பள்ளத்தாக்குக்கு சன்னி தியோல்-அமிர்தா சிங் அறிமுகமான முதல் படமான பேத்தாப் படத்தின் பெயரைக் கொண்டுள்ளது [1] இந்த பள்ளத்தாக்கு பகல்காமின் வடகிழக்கு நோக்கி உள்ளது. பகல்காம் மற்றும் சந்தன்வாடி இடையே அமர்நாத் கோயில் யாத்திரை செல்லும் வழியில் உள்ளது. பசுமையான புல்வெளிகளால் சூழப்பட்ட பள்ளத்தாக்கு, பனி மூடிய மலைகள் மற்றும் அடர்த்தியான தாவரங்களால் பள்ளத்தாக்கு மூடப்பட்டிருக்கும்.

வரலாறு[தொகு]

அழகான பேத்தாப் பள்ளத்தாக்கு

பஹல்காம் பகுதியின் ஒரு பகுதியாக இருக்கும் பேத்தாப் பள்ளத்தாக்கு - காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல துணை பள்ளத்தாக்குகளில் ஒன்று. இமயமலையின் வளர்ச்சியின் பிந்தைய புவிசார் மண்டலத்தின் போது உருவானது. பேத்தாப் பள்ளத்தாக்கு பிர் பஞ்சால் மற்றும் சன்சுகர் என்ற இரண்டு இமயமலை எல்லைகளுக்கு இடையில் உள்ளது . கற்கால யுகத்திலிருந்து, குறிப்பாக பர்ககோம், போமாய் மற்றும் பகல்காம் ஆகிய இடங்களில் இந்த பிராந்தியத்தில் மனித இருப்பை தொல்பொருள் சான்றுகள் நிரூபிக்கின்றன. பேத்தாப் பள்ளத்தாக்கு - காஷ்மீர் பிராந்தியத்தின் ஒரு பகுதியான இது 15 ஆம் நூற்றாண்டிலிருந்து முகலாயர்களால் ஆளப்பட்டு வந்துள்ளது. 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், துர்கோ-முகலாய இராணுவ தளபதி மிர்சா முகம்மது ஐதர் துக்லத் முதலில் காஷ்மீரை ஆட்சி செய்தார், முதலில் காஷ்கரின் சுல்தான் சையித் கான் சார்பாகவும், பின்னர் முகலாய பேரரசர் உமாயூன் சார்பாகவும் ஆட்சி செய்தார். பல மொழிகள் அறிந்திருந்தவரும் வரலாற்று எழுத்தாளருமான தளபதி ஐதர் மத்திய ஆசிய வரலாற்றின் தனிப்பட்ட நினைவுக் குறிப்பான ‘தாரிக்-இ-ரஷிடி’ என்பதை இப்பள்ளத்தாக்கைப் பற்றி எழுதியுள்ளார்.

சுல்தான் கியாஸ்-உத்-தின் சைன்-உல்-அபிதீன் காஷ்மீரின் பன்மைத்துவ சமுதாயத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதில் பிரபலமான அவர், சுமார் 40 ஆண்டுகளாக முழு காஷ்மீர் பிராந்தியத்தையும் ஆட்சி செய்தார். அவர் தனது ஆட்சிக் காலத்தில் காஷ்மீரை மீட்டெடுக்கவும் மறுசீரமைக்கவும் ஒரு உத்தரவு பிறப்பித்தார். வழக்கமான வெளிநாட்டிலிருந்து படையெடுக்கும் ஆட்சியாளர்களுக்கு முற்றிலும் மாறாக, அவரின் கீழ் தான் ‘காஷ்மீரியத்’ எனப்படும் காஷ்மீர் மக்களின் ‘சமூக மற்றும் கலாச்சார உணர்வு’ உருவாக்கப்பட்டது [2]

பேத்தாப் பள்ளத்தாக்கு-வான்வழி காட்சி

சுற்றுலா[தொகு]

பேத்தாப் பள்ளத்தாக்கில் இலிடர் நதி

பேத்தாப் பள்ளத்தாக்கு மிகவும் பிரபலமான ஒரு சுற்றுலா தலமாகும். பேத்தாப் பள்ளத்தாக்கு பயணிகளுக்கு மிகவும் பிடித்த இடமாக உள்ளது, ஏனெனில் இது மலையேற்றம் மற்றும் மலைகள் பற்றிய கூடுதல் ஆய்வுக்கான அடிப்படை முகாமாகவும் செயல்படுகிறது. [3] பள்ளத்தாக்கு பகல்காமிலிருந்து நடந்து செல்லக்கூடிய தூரமே கொண்டது. பனி மலைப்பகுதிகளில் இருந்து கீழே ஓடும் நீரோடையின் தெளிவான & ஈரமான நீர் ஒரு மகிழ்ச்சியை அளிக்கிறது; இங்குள்ள உள்ளூர்வாசிகளும் இந்த தண்ணீரை குடிக்கிறார்கள். பைசரன் மற்றும் துலியன் ஏரி ஆகியவை அருகிலுள்ள சில இடங்கள் ஆகும். [4]

பிரபலமான கலாச்சாரத்தில்[தொகு]

அறுபதுகள் முதல் எண்பதுகள் வரை காஷ்மீர் இந்தியத் திரையுலகின் தாயகமாக இருந்தது. பள்ளத்தாக்கில் ஆர்சூ, காஷ்மீர் கி காளி, ஜப் ஜப் பூல் கிலே, கபி கபி, சில்சிலா, சாத்தே பெ சாத்தா மற்றும் ரோட்டி (1974 திரைப்படம்) போன்ற படங்கள் இங்கு படமாக்கப்பட்டன. இப்பட்டியல் முடிவில்லாதது. பள்ளத்தாக்கில் தீவிரவாதம் ஆரம்பித்தபின் திரைப்பட படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டது. ஆனால் இப்போது விஷயங்கள் மேம்பட்டு வருவதால், பாலிவுட் திரைப்படத்துறை விரைவில் அதன் அசல் வீட்டிற்குத் திரும்பும் என நம்பலாம். தீவிரவாதிகள் அச்சுறுத்தல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தடையாக இருந்தது. ஆனால் இயக்குனர் இம்தியாஸ் அலி தனது ராக்ஸ்டார் திரைப்படத்தின் படப்பிடிப்பை இந்தப் பள்ளத்தாக்கில் நடிகர்கள் ரன்பீர் கபூர் மற்றும் நர்கிஸ் ஃபக்ரி ஆகியோரை வைத்து நடத்தியதால், வன்முறை என்பது கடந்த கால விஷயமாகத் தெரிகிறது. [5] நடிகை பாபியை வைத்து படப்பிடிப்பு செய்யப்பட்ட இடமான ஒரு வீடு 'பாபி குடிசை' என்று பிரபலமாக உள்ளது. [6] ஜப் தக் ஹை ஜான், யே ஜவானி ஹை தீவானி, ஹைதர் போன்ற பல படங்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் படமாக்கப்பட்டுள்ளன. [7] [8]

குறிப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Betaab Valley
என்பதின் ஊடகங்கள் உள்ளன.