பேதாப்
| பேதாப் | |
|---|---|
| இயக்கம் | ராகுல் ரவைல் |
| தயாரிப்பு | விக்ரம் சிங் தெஹால் |
| கதை | ஜாவேத் அக்தர் |
| இசை | ஆர். டி. பர்மன் |
| நடிப்பு | சன்னி தியோல் அம்ரிதா சிங் சம்மி கபூர் நிருபா ராய் |
| ஒளிப்பதிவு | மன்மோகன் சிங் |
| படத்தொகுப்பு | வி. என். மயேகர் |
| கலையகம் | விஜய்தா ஃபிலிம்ஸ் |
| விநியோகம் | ஈரோஸ் இண்டர்நேஷனல் |
| வெளியீடு | 5 ஆகத்து 1983 |
| ஓட்டம் | 163 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | இந்தி[1][2] |
| மொத்த வருவாய் | மதிப்பீடு ₹13.5 கோடி [3] |
பேதாப் (Betaab; மொ.பெ. *ஆவலுடையவன்*) என்பது 1983 ஆம் ஆண்டில் வெளியான ஓர் இந்திய இந்தி மொழிக் காதல் திரைப்படமாகும். ஜாவேத் அக்தர் எழுத்தில், ராகுல் ரவைல் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தின் மூலம் சன்னி தியோல் மற்றும் அம்ரிதா சிங் ஆகியோர் நடிகர்களாக பாலிவுட்டில் அறிமுகமாயினர். இவர்களுடன் சம்மி கபூர் மற்றும் பிரேம் சோப்ரா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் கதைக்களம் வில்லியம் சேக்சுபியரின் தி டேமிங் ஆப் த சுரூ என்ற நாடகத்தை தழுவி எழுதப்பட்டதாகும்.[4] இத்திரைப்படத்திற்கு ஆர். டி. பர்மன் இசையமைத்துள்ளார். 1983 ஆம் ஆண்டின் மிக வெற்றிகரமான வணிகத் திரைப்படங்களில் ஒன்றான இது, அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களின் வரிசையில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இத்திரைப்படம் பின்னர் 1987 இல் தெலுங்கில் *சம்ராட்* என்றும், 2011 இல் கன்னடத்தில் *கார்த்திக்* என்றும் மறுஆக்கம் செய்யப்பட்டது.
விருதுகள்
[தொகு]- 31-ஆவது பிலிம்பேர் விருதுகள்
பரிந்துரைக்கப்பட்டவை
- சிறந்த திரைப்படம் – விக்ரம் சிங் தெஹால்
- சிறந்த நடிகர் – சன்னி தியோல்
- சிறந்த கதை – ஜாவேத் அக்தர்
- சிறந்த இசை அமைப்பாளர் – ஆர். டி. பர்மன்
- சிறந்த பாடலாசிரியர் – ஆனந்த் பக்சி ("ஜப் ஹம் ஜவான் ஹோங்கே" பாடலுக்காக)
- சிறந்த பின்னணிப் பாடகர் – ஷபீர் குமார் ("ஜப் ஹம் ஜவான் ஹோங்கே" மற்றும் "பர்வதோன் சே ஆஜ்" பாடல்களுக்காக)
பேதாப் பள்ளத்தாக்கு
[தொகு]

ஜம்மு காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பேதாப் பள்ளத்தாக்கு இத்திரைப்படத்தின் நினைவாகவே பெயரிடப்பட்டது. இதற்கு முன்பு வரை சுற்றுலாப் பயணிகளால் அறியப்படாத ஒரு பகுதியாக இருந்த இந்த இடம், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இங்கு நடத்தப்பட்ட பிறகு மிக முக்கிய மற்றும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக மாறியது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lal, Vinay; Nandy, Ashis (2006). Fingerprinting Popular Culture: The Mythic and the Iconic in Indian Cinema. Oxford University Press. p. 77. ISBN 0-19-567918-0.
- ↑ Akhtar, Javed; Kabir, Nasreen Munni (2002). Talking Films: Conversations on Hindi Cinema with Javed Akhtar. Oxford University Press. p. 49. ISBN 978-0-19-566462-1.
JA: I write dialogue in Urdu, but the action and descriptions are in English. Then an assistant transcribes the Urdu dialogue into Devnagari because most people read Hindi. But I write in Urdu.
- ↑ "Box Office 1983". Box Office India. 15 சனவரி 2013. Archived from the original on 15 சனவரி 2013.
- ↑ "38 Years of Betaab: 5 Unknown facts about the film : Bollywood News". Bollywood Hungama. 2021-08-05. Retrieved 2024-04-02.
- ↑ "Bollywood returns to Kashmir - The picturesque valley with its gurgling streams, got its name from the Sunny Deol-Amrita Singh hit debut film Betaab". NDTV. 11 July 2011. https://www.ndtv.com/india-news/bollywood-returns-to-kashmir-its-original-home-461037.