பேதாபேதம்
| இந்து சமயம் தொடர்பான கட்டுரை |
| இந்து சமயம் |
|---|
|
|
பேதாபேதம் என்பது ஜீவாத்மா மற்றும் பரமாத்மாவின் தனித்தன்மை (வேற்றுமை) மற்றும் அது மற்றவற்றுடன் கொண்டிருக்கும் தொடர்பை (ஒற்றுமை) விவரிக்கிறது. இதனை பேதம் (வேறுபாடானது) +அபேதம் (வேறுபாடு அற்றது) என்று பிரிப்பர். பேதாபேதம் என்பது வேதாந்தத்தின் துணைத் தத்துவம் ஆகும். இது தனிப்பட்ட சுயம் (ஜீவாத்மா) மற்றும் பிரம்மம் எனப்படும் இறுதி யதார்த்தத்திலிருந்து வேறுபட்டது மற்றும் வேறுபட்டது அல்ல என்று கற்பிக்கிறது[1]சுருக்கமாகச் சொல்வதென்றால் சீவாத்மா மற்றும் பரமாத்மா வேறு வேறாகும். கர்ம யோகம், பக்தி யோகம் மற்றும் இறுதியாக ஞான யோகம் மூலம் சீவாத்மா பரமாத்மாவுடன் கலந்து ஒன்றாகிவிடுகிறது. இந்த தத்துவப் பள்ளி பிரம்ம சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. பேதாபேத தத்துவப் பள்ளியை நிறுவியவர் பாஸ்கரர் ஆவார்.
சொற்பிறப்பியல்
[தொகு]பேதாபேதம் (தேவநாகரி: भेदाभेद) எனும் சமஸ்கிருத சொல்லிற்கு "வேறுபாடு மற்றும் வேறுபாடு இல்லாதது" எனப்பொருள்படும்[2]..
விளக்கம்
[தொகு]- பேதம்: ஜீவாத்மாவின் தனித்தன்மையைக் குறிப்பதுடன், பரமாத்மாவுடன் எவ்வாறு வேறுபடுகிறது என்பதை விளக்குகிறது.
- அபேதம்: ஜீவாத்மா மற்றும் பரமாத்மாவின் ஒற்றுமையைக் குறிக்கிறது. இவை இரண்டும் எவ்வாறு இணைகிறது, ஒன்றுபடுகிறது என்பதை விளக்குகிறது.
- பேதாபேதம்: இந்த சொல் பேதம் (வேற்றுமை) மற்றும் அபேதம் (வேற்றுமையின்மை) எனும் இரண்டு அம்சங்களையும், ஒரே நேரத்தில் குறிக்கிறது. இது ஒரு பொருள் (ஜீவாத்மா) தனித்தன்மையுடன் இருந்தாலும், அது மற்றவற்றுடன் (பரப்பிரம்மம்) தொடர்புடையது, ஒன்றோடொன்று இணைந்தது என்பதை விளக்குகிறது.
உதாரணமாக, "இறைவனும் பரப்பிரம்மனும், ஜீவாத்மாவும் பேதாபேதமாய் உள்ளன" என்று கூறும் போது, உயிர் (ஜீவாத்மா), இறைவனிடமிருந்து (பரப்பிரம்மம்) வேறுபட்டது, ஆனால் அதே நேரத்தில் அதனுடன் தொடர்புடையது, அதனுடன் ஒன்றிணைந்தது என்று பொருள்.
வரலாறு
[தொகு]பேதாபேதம் தத்துவத்தின் முதன்மை ஆசிரியர் பாஸ்கரர் ஆவார். இவர் ஆதி சங்கரரின் சமகாலத்தவர் அல்லது சங்கரருக்குப் பிறகு சிறிது காலம் வாழ்ந்தவர்.[3][4]
பேதாபேதம் என்பது ஒரு இந்து தத்துவ மரபாகும். இது முதன்மையாக கிபி 7 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது, பாஸ்கரர் மற்றும் நிம்பர்க்கரின் முக்கிய பங்களிப்புகளுடன். தனிப்பட்ட ஆன்மா (ஜீவாத்மா) மற்றும் இறுதி யதார்த்தமான (பிரம்மம்) ஆகியவை ஒரே நேரத்தில் தனித்துவமானவை மற்றும் வேறுபட்டவை அல்ல என்று பேதாபேதம் பள்ளி கூறுகிறது.[1]
தத்துவம்
[தொகு]பேதாபேத மரபுகளில் வேறுபாடு மற்றும் வேறுபாடு இல்லாதது பல வழிகளில் விளக்கப்படுகிறது. இந்த மரபில் பாஸ்கரரும் நிம்பர்காவும் நிறமாலையில் இரண்டு முனைகளைக் குறிக்கின்றனர். பாஸ்கரர் பிரம்மம் அதன் இயற்கையான நிலையில் வேறுபாடு இல்லாமல் இருப்பதாக நம்புவதால், வேற்றுமை இல்லாத அம்சம் மிகவும் உண்மையானது என்று நம்புகிறார். பிரம்மத்தின் அத்தியாவசிய இயல்பு வேறுபாடு மற்றும் வேறுபாடு இல்லாத உண்மையான நிலைகளை சமமாக உள்ளடக்கியது என்று நிம்பர்க்கர் நம்புகிறார்.[5]
அத்வைத விளக்கங்களுக்கு எதிரான வாதம்
[தொகு]தத்துவஞானி பாஸ்கரர் (வேதாந்தங்களில் தோன்றும் முரண்பாடுகளை பொருள்படுத்த முடியும் என்பதால், பேதாபேத தத்துவத்தை மற்ற விளக்கங்களை விட உயர்ந்ததாகக் கருதினார். பிரம்மம் மற்றும் ஆன்மாவின் ஒரே மாதிரியான தன்மையை பரிந்துரைக்கும் கூற்றுகளுக்கு மட்டுமே அவை முன்னுரிமை அளிப்பதால் அத்வைத விளக்கங்கள் குறைகிறது எனச் சுட்டிக்காட்டுகிறார். இருப்பினும், இந்த விளக்கங்கள் பிரம்மத்திற்கும் ஆன்மாவிற்கும் இடையிலான வேறுபாட்டை சுட்டிக்காட்டும் கூற்றுகளை கீழ்ப்படுத்துகிறது. அவற்றை உருவகமாக விளக்குவதை நாடுகிறது. வேதாந்தங்களின் கூற்றுகளை நிலைத்தன்மையுடன் விளக்க, விஞ்ஞானபிட்சு, வேறுபாடு மற்றும் வேறுபாடு இல்லாதது என்பது அடையாளம் மற்றும் அடையாள மறுப்பு என்பதை விட பிரித்தல் மற்றும் பிரிவின்மை என்பதையும் குறிக்கலாம் என்று வாதிடுகிறார். பேதம் மற்றும் அபேதம் என்பதன் பொருள், சூழலுக்கு ஏற்ப தீர்மானிக்கப்பட்டு, வேதாந்தத்தின் சில கூற்றுகளை உண்மையற்றதாகவோ அல்லது வெறும் உருவகமாகவோ எடுத்துக்கொள்வதில் உள்ள சிக்கலை தீர்க்கிறது.[6]
செல்வாக்கு
[தொகு]பேதாபேதம் கருத்துக்கள் இந்தியாவின் இடைக்காலக் காலத்தின் பக்தி (பக்தி) பள்ளிகளில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியது. இடைக்காலத்தில் பேதாபேதம் தத்துவச் சிந்தனையைப் பின்பற்றி புதிய தத்துவப் பள்ளிகளை உருவானது:
- நிம்பர்க்கர் (கிபி 7-15ஆம் நூற்றாண்ட்) பேதாபேதம் தத்துவத்தை ஒட்டி துவைதாத்துவைதம் (துவைதம்+அத்வைதம்) பள்ளியை நிறுவினார்.[7]
- பாஸ்கரர் (8 மற்றும் 9 ஆம் நூற்றாண்டுகள்), ஔபாதிக பேதாபேதம் (ஔபாதிக பேதாபேதம் என்பது, சைவ சித்தாந்தத்தில் கடவுளுக்கும் ஆன்மாவிற்கும் உள்ள உறவைக் குறிக்கும் ஒரு தத்துவக் கருத்து. இது "பேதம்", "அபேதம்", "பேதாபேதம்" ஆகிய மூன்று நிலைகளில் கடவுள் ஆன்மாவுடன் இருப்பதாகக் கூறும். அதாவது, அவை இரண்டும் ஒன்றுபோலவும், வேறுவேறாகவும், ஒன்றுடன் ஒன்று கலந்தும் இருப்பதாகக் கூறும்) எனும் தத்துவப்பள்ளியை நிறுவினார்.[2][8]
- இராமானுசர் (1017-1137) விசிட்டாத்துவைதம் பள்ளியை நிறுவினார்.
- கௌடிய வைஷ்ணவத்தின் நிறுவனர் சைதன்யர் (1485–1533) அச்சிந்தியா பேதாபேதம் வேதாந்தத்தின் இறையியல் பள்ளியின் நிறுவனர். [9]
- குரு நானக் (1439-1569), வட இந்தியாவை தளமாகக் கொண்ட சீக்கிய மதத்தை நிறுவினார்.
- விஞ்ஞானபிட்சு
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Bhedabheda Vedanta | Internet Encyclopedia of Philosophy" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-08-08.
- ↑ 2.0 2.1 "Bhedabheda Vedanta". Internet Encyclopedia of Philosophy.
- ↑ "Bhedabheda Vedanta | Internet Encyclopedia of Philosophy" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-05-14.
- ↑ "Bhedabheda | Monism, Dualism, Advaita | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). Retrieved 2024-05-14.
- ↑ "Bhedabheda Vedanta | Internet Encyclopedia of Philosophy" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-08-27.
- ↑ Nicholson, Andrew J. (2007-08-01). "Reconciling dualism and non-dualism: three arguments in Vijñānabhikṣu’s Bhedābheda Vedānta" (in en). Journal of Indian Philosophy 35 (4): 377-380. doi:10.1007/s10781-007-9016-6. பன்னாட்டுத் தர தொடர் எண்:1573-0395. https://link.springer.com/article/10.1007/s10781-007-9016-6.
- ↑ Malkovsky, The Role of Divine Grace in the Soteriology of Śaṃkarācārya, Leiden: Brill, p. 118.
- ↑ Bhāskara (Bhedabheda Vedanta)
- ↑ Sivananda 1993, ப. 247-253.
ஆதாரங்கள்
[தொகு]- Sivananda, Swami (1993), All About Hinduism, The Divine Life Society
மேலும் படிக்க
[தொகு]- Nicholson, Andrew J. (2010), Unifying Hinduism: Philosophy and Identity in Indian Intellectual History, Columbia University Press
- Complete English Translation of Sri Subodhini jee, published in Collected Works of Sri Vallabhcharya series, Sri Satguru Publications